கல்யாண கொண்டாட்டத்தில் செம ஜாலியாக அனிருத்! மேளக்காரர் தோளில் அமர்ந்து ஆட்டம்
சென்னை: இசையமைப்பாளர் அனிருத் என்றாலே எப்போதும் ஒரு துள்ளல், உற்சாகம், கொண்டாட்டம்தான். அவர் இசையமைக்கும் பாடல்கள் மட்டுமல்லாமல், அவருடைய ஜாலியான செயல்களும் அவ்வப்போது இணையத்தில் கவனம் பெறும். அப்படித்தான் இப்போது அவருடைய திருமண கொண்டாட்டத்தில் அனிருத்தின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
அனிருத் போட்டோ
அனிருத் சாம்பல் நிற குர்தா அணிந்து மிகவும் மகிழ்ச்சியாக சிரித்தபடி அமர்ந்திருக்கிறார். அவருக்கு பின்னால் மேளம் வாசிக்கும் கலைஞர் ஒருவர், அவரை தோளில் தூக்கி வைத்திருப்பது போன்ற காட்சி இருக்கிறது. சுற்றிலும் வண்ணமயமான ஆடைகளில் பெண்களும், உறவினர்களும் நிற்க, அந்த இடமே திருமண வீட்டு கொண்டாட்ட களையாக இருக்கிறது. பொதுவாக மேளம், நடனம் என்று திருமண நிகழ்ச்சிகள் நடந்தால் அதில் கலந்து கொள்பவர்களும் உற்சாகமாக ஆடுவது வழக்கம். ஆனால் இங்கே அனிருத் மேளக்காரருடன் இப்படி ஜாலியாக இருப்பது தான் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது.

அனிருத் திருமணம்
இசையமைப்பாளராக பல ஆயிரம் ரசிகர்களை தனது பாடல்களுக்கு ஆட வைக்கும் அனிருத், இப்போது தனது திருமண கொண்டாட்டத்தில் இப்படி உற்சாகமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய நிர்வாகியுமான காவ்யா மாறனுடன் அனிருத்துக்கு வரும் நவம்பர் 10 மற்றும் 11ஆம் தேதி நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்காக பத்திரிகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
ரசிகர்கள் கேள்வி
கலாநிதி மாறனும் காவேரி மாறனும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து, தங்களுடைய மகள் காவ்யா மாறன் மற்றும் அனிருத் திருமண வரவேற்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த வரவேற்பு நவம்பர் 21-ம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அனிருத் இந்த புகைப்படங்கள் இப்போ இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்களுடைய திருமணத்திற்கு யாரெல்லாம் போகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க, இப்போ அனிருத்தின் போட்டோவும் விவாதத்தை ஏற்படுத்துகிறது. இது இவருடைய திருமண ஃபங்ஷனில் எடுத்த போட்டோவா? அல்லது வேறு ஏதும் நிகழ்ச்சியில் எடுத்த போட்டோவா? என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.



Click it and Unblock the Notifications
