இப்படி எல்லாம் வரும்னு கனவுல கூட நினைச்சது இல்ல... அறந்தாங்கி நிஷா வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு
சென்னை: விஜய் டிவியின் மூலமாக பிரப பிரபலம் அடைந்த அறந்தாங்கி நிஷா தற்போது நெகிழ்ச்சியான பதிவினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அறந்தாங்கி நிஷா நடித்த திரைப்படத்தில் அவருடைய புகைப்படமும் இடம்பெற்ற போஸ்டரை கமலா தியேட்டரின் முன்பு ஒட்டி இருந்தது பார்த்து அறந்தாங்கி நிஷா உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

சத்தியமா நம்ப மாட்டாங்க
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது அர்ச்சனாவின் அன்பு கேங்கில் இருந்ததால் சற்று எதிர்மறையான விமர்சனங்களை இவர் பெற்றிருந்தாலும் இவரது எளிமையான குணமும் மற்றவர்களிடம் பழகும் விதமும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவரது வெகுளித்தனமான பேச்சுக்கென்றே ஒரு ரசிகர் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது.கலக்கப்போவது நிகழ்ச்சியின் போது யார் எப்படி கலாய்த்தாலும் சிரித்த முகத்துடனே அதை கடந்து செல்லும் நிஷா,அவரது பொறுமையான குணத்திற்காக நல்ல பெயரை வாங்கி இருந்தார்.

பக்கத்து வீட்டு கேரக்டர்
அதன்பிறகு இவர் கலந்து கொண்ட பிக் பாஸ் ஷோ மட்டுமின்றி அதற்கு பிந்தைய ரியாலிட்டி ஷோக்களில் இவர் புலம்புவதும் மற்றவர்களிடம் உரையாடுவதும் தங்கள் பக்கத்து வீட்டில் உள்ள கேரக்டர் போலவே இருப்பதாக பலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். பொதுவாக பார்ப்பதற்கு அழகாக இருப்பவர்களை விட பேசுவதும் பழகுவதும் பக்கத்து வீட்டு கேரக்டர் போல் இருப்பவர்களை எளிதில் ஏற்றுக் கொள்ளும் நம் தமிழ் ரசிகர்கள் அறந்தாங்கி நிஷா வையும் தங்கள் அபிமான செலிபிரிட்டி ஆக ஏற்றுக்கொள்ள தயங்கவில்லை.

பட்டிமன்ற பேச்சு திறமை
விஜய் டிவியில் அறிமுகமான பல கன்டஸ்டன்ட்கள் தங்களது திறமையால் முன்னேறி சென்று கொண்டிருக்கின்றனர். அதில் அறந்தாங்கி நிஷாவும் ஒருவர். இவர் முதன்முதலில் விஜய் டிவியில் காலடி எடுத்து வைக்கும் போது தனது பட்டிமன்ற பேச்சு திறமையினாலும், சரளமாக வரும் காமெடியிலும் அனைவரையும் அசர வைத்துக் கொண்டிருந்தவர்.

வெள்ளி திரையிலும் அறிமுகம்
விஜய் டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்த அறந்தாங்கி நிஷாவிற்கு பெரிய அளவில் மாற்றத்தை கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டு தன்னுடைய வழக்கமான பணியினை செய்து கொண்டிருந்த நிஷாவிற்கு தற்போது வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு சில நாட்களுக்கு முன்பு வெளியான திரு சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷின் அத்தை கேரக்டரில் நிஷா நடித்து இருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது ட்ரிகர் படத்தில் நடித்திருக்கிறார்.

நெகிழ்ச்சியான பதிவு
ஒரு கலைஞருக்கு எப்போதுமே பாராட்டு பிடிக்கும் என்பதற்கு இலக்கணமாக, தன்னுடைய புகைப்படம் அதுவும் கமலா தியேட்டர் முன்பாக முன்னணி நடிகர்களோடு இணைந்து ஒட்டப்பட்டு இருப்பதை பார்த்ததும் அறந்தாங்கி நிஷா உணர்ச்சி வசப்பட்டு நெகிழ்ச்சியாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில், "தியேட்டர் வாசலில் போஸ்டர்ல என்னுடைய ஃபோட்டோ எல்லாம் வரும்னு கனவுல கூட நினைச்சது இல்ல..தேங்க்யூ மக்களே.,தேங்க்யூ டிரிகர் டீம் என்று நன்றியை தெரிவித்து இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்களும் நிஷாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications