ஜோதிகாவுக்கு பதில் இவரா? வாங்கிய பணத்தை டக்னு தந்த அசின்.. குட்டி டிரஸ்ஸால் மிஸ்ஸான டாப் நடிகர் படம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அசினுக்கு 7 மொழிகள் தெரியும்.. பிரெஞ்சு, ஜப்பானி, இத்தாலி மொழிகளை கற்றவர்.. மலையாள பெண்ணாக இருந்தாலும், மலையாள வாடையே இல்லாமல் தமிழில் சுத்தமாக பேசக்கூடியவர்.. கில்லாடி 786 என்ற மராத்தி படத்தில் நடிப்பதற்காக, குறுகிய காலத்தில் மராத்தி மொழியை கற்றுக் கொண்டு நடித்தார்.. மொத்தமே 25 படம் நடித்தாலும், ரசிகர்கள் தங்களது மனதில் வைத்து கொண்டாடப்படும் நடிகையாக இருப்பவர் அசின்.. இந்த அளவுக்கு அசினின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் அவரது அப்பா" என்று தெரிவித்துள்ளார் பாலாஜி பிரபு.

AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "சில்லுனு ஒரு காதல் படத்தில், பூமிகா கேரக்டருக்கு அசினைதான் அணுகியிருக்கிறார்கள்.. அந்த கேரக்டரில் அசின் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சூர்யாவே விரும்பி டைரக்டரிடம் சொன்னாராம்.

Television Actress Asin Jyothika

ஜோதிகா - அசின்

டைரக்டர் கிருஷ்ணாவும் அசினின் அப்பாவிடம் இதைபற்றி கேட்டிருக்கிறார். அதற்கு அசின் அப்பா, ஜோதிகா கேரக்டரை என் மகளுக்கு தரமுடியுமா? என்று கேட்டாராம். உடனே கிருஷ்ணா, இதுகுறித்து சூர்யாவிடம் சொல்லியிருக்கிறார்.. "ஏன், அது ரொம்ப நல்ல கேரக்டராச்சே? கதையை அவர் சரியாக புரிந்துகொள்ளவில்லையா? இன்னொரு முறை பேசிப்பாருங்கள்" என்று சூர்யா மறுபடியும் சொல்லி உள்ளார்.

கால்ஷீட் வாங்குங்க

பிறகு மீண்டும் அசினின் தந்தையிடம் கேட்டதற்கு, "இப்போது சிவகாசி, மஜா போன்ற படங்களில் அசின் நடித்து கொண்டிருப்பதால், சில்லுனு ஒரு காதல் படத்தில் உடனடியாக நடிக்க முடியாத சூழ்நிலை" என்று சொல்லிவிட்டாராம். அந்த படத்தில் அசின் நடிக்காதது சூர்யாவுக்கும் சிறு வருத்தம் இருந்ததாக சொன்னார்கள்.

அதற்கு பிறகு டைரக்டரின் முடிவுக்கே விட்டுவிட்டார் சூர்யா.. பிறகுதான் அந்த கேரக்டருக்கு பூமிகாவை டைரக்டர் தேர்ந்தெடுத்துள்ளனர்.. அந்த படம் வெற்றிப்படமாக இல்லாவிட்டாலும், காதலர்கள் கொண்டாடக்கூடிய படமாக இன்றும் உள்ளது..

அதேபோல, அசின் மிஸ் செய்த இன்னொரு படம் அஜித் நடித்த பில்லா.. நயன்தாராவுக்கு முன்பு, அந்த கேரக்டரில் அசினை நடிக்க வைக்க முடிவு செய்து, "அசினிடம் கால்ஷீட் வாங்குங்கள்" என்று ரெக்கமண்ட் செய்ததே அஜித்தானாம்..

போட்டோ ஷூட்

அசினும் பில்லா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, அட்வான்சும் வாங்கிவிட்டார். பிறகு அப்படத்திற்கான போட்டோ ஷூட் எடுக்கும்போது, நீச்சல் குளம் காட்சிக்காக பிகினி டிரஸ் தரப்பட்டுள்ளது.. அந்த டிரஸ்ஸை பார்த்து பதறிப்போன அசின், இதுபோன்ற டிரஸ்ஸை நான் அணிந்ததில்லை, இதைத்தவிர வேறு டிரஸ் சொல்லுங்கள் என்றார்.

ஆனால் டைரக்டர் விஷ்ணுவர்த்தன், வெளிநாட்டில் ஸ்டைலிஷான பெண் கேரக்டர் என்பதால், இந்த காட்சி எடுக்கப்படுகிறது, மற்றபடி கவர்ச்சிக்காக கிடையாது" என்று விளக்கியிருக்கிறார். ஆனாலும் அசினின் அப்பா இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நீச்சல் காட்சி இருந்தால் நடிக்க முடியாது என்று சொல்லி, வாங்கிய அட்வான்ஸையும் திரும்பி தந்துவிட்டார். சில நடிகைகள் எந்த கேரக்டர் தந்தாலும் நடித்துவிடுவார்கள்.. ஆனாலும் காசுக்காக நடித்தாதவர் அசின்..

அப்பாவின் உறுதுணை

அசினுக்கு 7 மொழிகள் தெரியும்.. பிரெஞ்சு, ஜப்பானி, இத்தாலி மொழிகளை கற்றவர்.. மலையாள பெண்ணாக இருந்தாலும், மலையாள வாடையே இல்லாமல் தமிழில் சுத்தமாக பேசக்கூடியவர்.. கில்லாடி 786 என்ற மராத்தி படத்தில் நடிப்பதற்காக, குறுகிய காலத்தில் மராத்தி மொழியை கற்றுக் கொண்டு நடித்தார்.. 25 படம் நடித்தாலும், ரசிகர்கள் மனதில் வைத்து கொண்டாடப்படும் நடிகையாக இருப்பவர் அசின்.. அசினின வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வழிநடத்தியது அவரது அப்பா" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+