நீங்க “சங்கியா?” ஜிபி முத்துவுக்கு வந்த “லெட்டர்” - பிக்பாஸில் அரசியலை கொளுத்திப்போட்ட கமல்ஹாசன்
சென்னை: விஜய் டிவியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜிபி முத்துவுக்கு வந்த ரசிகரின் கடிதத்தில் நீங்கள் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்த ஒரு வார்த்தை இல்லையே என்று கமல்ஹாசன் கேட்க, அஜீம் அது சங்கியா என்று கூறியுள்ளார்.
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருந்து வருகிறது விஜய் டிவி. இதில், ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் பணிபுரிந்த பலர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டிருக்கிறார்கள்.
குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், நீயா நானா, கேபிஒய் சாம்பியன்ஸ், பிக்பாஸ், பிபி ஜோடிகள் என விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்து வருகின்றன.

பிக் பாஸ்
இதில் குறிப்பாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆண்டுக்கு 106 நாட்கள் ஒளிபரப்பாகி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் ராஜு வெற்றிபெற்றார்.

பிக் பாஸ் அல்டிமேட்
இதனை தொடர்ந்து டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் 24 மணி நேரம் ஒளிபரப்பாகும் தனி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதனை தொடக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் அவருக்கு சினிமா ஷூட்டிங்குகள் இருந்த காரணத்தால் பின்னர் நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வந்தார். அதில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

பிக் பாஸ் 6
இந்த நிலையில் பிக் பாஸ் 6 வது சீசன் கடந்த வாரம் தொடங்கி வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. நேற்று ஓளிபரப்பான கமல்ஹாசன் கலந்துகொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர் ஜிபி முத்துவுக்கு ரசிகர்கள் அனுப்பிய கடிதம் படித்துக் காட்டப்பட்டது. இதனை சக போட்டியாளரும் நடிகருமான அஜீம் படித்துக் காட்டினார்.

என்ன கேள்வி?
அந்த கடிதத்தில், "தலைவரே பிக்பாஸ் வீட்டில் சிங்கியா? சொங்கியா? மங்கியா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதனை கேட்ட ஜிபி முத்து வாயை பிளந்து அதிர்ச்சியோடு பார்க்க, கமல்ஹாசனோ "இன்னொன்றை விட்டுவிட்டார்களே! எனக்கும் அதான் தோன்றியது" என்று கூற, அமுதவான், சங்கி மங்கி என்ற சொன்னார்.

சங்கியா?
உடனே கமல்ஹாசன் ரசிகர்களை பார்த்து தலையாட்டினார். உடனே அஜீம், "சங்கி இல்லண்ணே சொங்கியா?" என்று கூற ஜிபி முத்து மங்கி என்றார். பொதுவாக சங்பரிவார அமைப்பை சேர்ந்தவர்களை சுருக்கி சங்கி என்று அழைத்து வரும் நிலையில், அது பிக் பாஸ் வீட்டில் ஒலிக்கப்பட்டது அரசியலாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications