பார்த்துப் பார்த்து உணவு பரிமாறிய அர்ஜுன்...நெகிழ்ந்து போன போட்டியாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வைவர் நிகழ்ச்சியின் தற்போது நிகழ்வுதான் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பல நாட்களுக்குப் பிறகு விதவிதமாக உணவு வழங்கி போட்டியாளர்களுக்கு அர்ஜுன் இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டார்.

அர்ஜுன் உணவு வழங்கும் அழகை பார்த்து ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

ஜீ தமிழ் ரியாலிட்டி ஷோ

ஜீ தமிழ் ரியாலிட்டி ஷோ

சர்வைவர் நிகழ்ச்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் ரியாலிட்டி ஷோ வாக இருந்தாலும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்திலிருந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது. இது எந்த நிகழ்ச்சியை போன்றும் இல்லாமல் இருப்பது இதன் சிறப்பு. இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் தங்களுடைய திறமையின் மூலமாகவும் ஒவ்வொரு நிலையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். ரியலாக போட்டியாளர்கள் செய்யும் டாஸ்க்குகள் ரசிகர்களை பலநேரங்களில் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

தொகுப்பாளரான அர்ஜுன்

தொகுப்பாளரான அர்ஜுன்

ரியாலிட்டி ஷோ என்று எத்தனையோ நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகமாகி வந்தாலும், இந்த சர்வைவர் நிகழ்ச்சி முதல் முறையாக தமிழில் இப்போதுதான் அறிமுகமானாலும் இதற்கு தான் அதிகமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதில் போட்டியாளராக பல துறைகளிலிருந்து கலந்து கொண்டிருக்கின்றனர். தொகுப்பாளராக அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். ஆக்சன் கிங் என்று பட்டம் வழங்கி இருப்பதற்கு ஏற்ப இவருடைய ஆக்சன் ஆன நடவடிக்கைகள் இருந்து வருகிறது.

சுவாரஸ்யம் குறையவில்லை

சுவாரஸ்யம் குறையவில்லை

விளையாட்டு, விளையாட்டாகவும் இருக்க வேண்டும் திறமையை நிரூபிப்பதாகவும் இருக்க வேண்டும் என்று போட்டியாளர்கள் பலரும் புரிந்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர். இதில் ஒரு சில போட்டியாளர்கள் வெளியேறிவிட்டாலும் நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் குறையவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர், இதில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறிக் கொண்டு இருந்தாலும், நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கும் போட்டியாளர்கள் நிகழ்ச்சியை கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்.

தீபாவளி ஸ்பெஷல்

தீபாவளி ஸ்பெஷல்

சர்வைவர் நிகழ்ச்சியில் அடிப்படை தேவைகளை ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று தான் போட்டியாளர்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்தவாரம் தீபாவளியை முன்னிட்டு போட்டியாளர்கள் அனைவருக்கும் விதவிதமான உணவுகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு வரைக்கும் இவர்கள் உப்பில்லாத உணவை உண்டுவந்த நிலையில் பல நாட்களுக்குப் பிறகு விதவிதமான உணவுகளை வயிறார சாப்பிட்டு வருகின்றனர். போட்டியாளர்களுக்கு பாசத்தோடு அர்ஜுன் சாப்பாடு பரிமாறிக் கொண்டு இருக்கிறார். அவர் பரிமாறும் அழகைப் பார்த்து சில நெட்டிசன்கள் கிடைக்கிற நேரத்தில் வாங்கி சாப்பிட்டு கொள்ளுங்கள் இந்த மாதிரி சாப்பாடு இனி எப்போ சாப்பிட போகிறீர்களோ தெரியவில்லை என்று அர்ஜுன் மைண்ட் வாய்ஸ் இருக்கிறதோ என்று கலாய்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+