தன் மனைவியை "செல்லம்மா சீரியல் கதாநாயகி அடித்தது உண்மைதான்” ஆனால் அங்கு நடந்தது.. அர்னாவ் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டிற்குள் நடந்து வந்த கணவன் மனைவி சண்டை ஒரே இரவில் மீடியாவிற்கு வந்து அதுவரைக்கும் மரியாதை வைத்திருந்த சீரியல் நடிகைகளை மரியாதை இழக்க செய்து வைத்து விட்டது.

நடிகை திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்னாவ் இடையே நடக்கும் குடும்ப பஞ்சாயத்து தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

சீரியல் நடிகர்களான இவர்கள் இருவருக்குள் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் செல்லமா சீரியல் கதாநாயகி தான் என்று குற்றச்சாட்டு வந்துள்ளது.

புயல் வீச காரணம்

புயல் வீச காரணம்

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த திவ்யா மற்றும் அர்னாவ் வாழ்க்கையில், அர்னாவ் புது சீரியலில் கம்மிட் ஆன பிறகுதான் புயல் வந்து வீச தொடங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே எல்லோரையும் போல செல்லம்மா சீரியல் கதாநாயகி அன்ஷிதாவுடன் பழகி வந்ததாகவும் அது தனது மனைவிக்கு பிடிக்கவில்லை என்று அர்னாவ் கூறி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் நான் நட்பாக தான் அந்த கதாநாயகியுடன் பழகி இருந்தேன். அது மட்டும் இல்லாமல் அவர் கேரளாவை சார்ந்தவர். இங்கே யாரிடமும் அவ்வளவு செட்டாகவில்லை. என்னிடம் நன்றாக பழகிவிட்டார். சீரியலில் ஒன்றாக நடிப்பதால் இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து கொள்வதும் நட்பாக இருப்பதும் தப்பு எதுவும் இல்லை. திவ்யாவும் அவரோடு நடிக்கும் நடிகர்களுடன் அப்படித்தான் இருக்கிறார் என்று அர்னாவ் கூறி இருக்கிறார்.

சாப்பிடும் போது நடந்த சண்டை

சாப்பிடும் போது நடந்த சண்டை

தன்னை செல்லமா சீரியல் கதாநாயகி அன்ஷிதா பாட்டிலால் வயிற்றில் அடித்ததாக திவ்யா ஸ்ரீதர் குற்றசாட்டுகளை வைத்திருந்தார். அதற்கு பதில் அளித்த அர்னாவ் அது உண்மைதான். என் கண் முன்னாடி தான் அது நடந்தது. நான் சூட்டிங் ஸ்பாட்டில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். என்னோடு அந்த கதாநாயகியும் சாப்பிட்டு கொண்டு இருந்தார். எங்கள் இருவரின் அசிஸ்டன்டுகளும் கூட தான் இருந்தார்கள். நாங்கள் நான்கு பேரும் ஒன்றாக இருந்து சாப்பிட்டு கொண்டு இருந்தோம். அப்போது என்னுடைய மனைவி உள்ளே வந்தார். உள்ளே வரும் நேரத்தில் அந்த கதாநாயகி சாப்பிட்ட கை கழுவதற்காக நடந்து கொண்டிருந்தார்.

அடிதடி பிரச்சனை

அடிதடி பிரச்சனை

எதிர்பார்க்காமல் பின்னாடி இருந்து வந்த திவ்யா அந்த கதாநாயகியின் தலைமுடியை பிடித்து இழுத்து அருகில் இருந்த சாப்பிட்ட டிபன் பாக்ஸ், தட்டு, டப்பா எல்லாவற்றையும் தூக்கி அந்த கதாநாயகியை அடித்தார். வலி தாங்காமல் அவர் கையில் இருந்த பாட்டிலை எடுத்து வீசினார். அது திவ்யாவின் தோள்பட்டையில் விழுந்தது. ஆனால் திவ்யா சொல்கிற மாதிரி பாட்டிலால் வயிற்றில் அடிக்கவில்லை. சூட்டிங் ஸ்பாட்டில் அவ்வளவு பேர் இருக்கும்போது ஒரு பெண்ணை வந்து இப்படி அடித்தால் அந்த பெண்ணிற்கு எவ்வளவு வேதனையாக இருக்கும். கேவலமாக இருக்க தானே இருக்கும். அதனால் நான் என்ன தப்பு செய்தேன் உட்கார்ந்து சாப்பிட தானே செய்தேன். அதற்காக இப்படியா? என்று அன்று முழுவதுமே அந்த கதாநாயகி அழுது கொண்டுதான் இருந்தார் என்று அர்னாவ் கூறியிருக்கிறார்.

பரபரப்பு குற்றச்சாட்டு

பரபரப்பு குற்றச்சாட்டு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் அர்னாவ்வின் மனைவி திவ்யா ஸ்ரீதர் தற்போது தன்னுடைய கணவர் மீதும் அவரோடு நடிக்கும் நடிகர் மீதும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். அதில் திவ்யா சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியல் மூலமாக தமிழ் சீரியலுக்கு வந்ததாகவும், அப்போது அவரோடு நடித்த அர்னாவ்வை காதலித்து வந்ததாகவும் இவர்கள் இருவரும் ஐந்து வருடம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்ததாகவும் கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+