ஆரம்பகால சிம்புவாக கலக்கும் அஸ்வின்...இனி வேற லெவல் தான் போலயே
சென்னை: சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களால் அதிகமாக கலாய்க்கப்படும் அஸ்வினுக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டு இருக்கின்றனர்.
தற்போது அஸ்வினுக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்டுகளை பார்க்கும்போது ஆரம்பகாலத்தில் சிம்புவிற்கு நடந்தது போல இருக்கின்றது என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள்.

புகழ் கொடுத்த குக் வித் கோமாளி
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்த அஸ்வின் பல குறும்படங்கள்
மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்திருக்கிறார். என்னதான் இவர் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருந்தாலும் இவருக்கு பெயரையும் புகழையும் ஏற்படுத்திக் கொடுத்து அதிக அளவில் ரசிகர்களை பெற்றுத் தந்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

பாடல் வெளியீட்டு விழாவில் குழப்பம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக புகழின் உச்சத்தில் பல பிரபலங்கள் வலம் வந்து கொண்டிருக்கும் வரிசையில் அஸ்வினும் ஒருவர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு கிடைத்த வாய்ப்புதான் வெள்ளித்திரை வாய்ப்புகள். இவர் பல வருடங்களாக கதாநாயகனாக ஆகவேண்டும் என்று போராடிக் கொண்டிருந்த நேரத்தில் இவருக்கு கிடைத்தது தான் என்ன சொல்லப் போகிறாய் எனும் திரைப்பட வாய்ப்பு. இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பை எப்போது பார்க்கலாம் என்று ஆர்வத்தோடு இருந்த ரசிகர்களுக்கு இவருடைய திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கிடைத்தது பெரிய அதிர்ச்சி தான்.

நெட்டிசன்களின் கோபம்
முதல் முறையாக தனக்கு அதிக அளவில் மகிழ்ச்சியும், பதட்டமும் இருந்ததால் இவர் இந்த நிகழ்ச்சியில் என்ன சொல்கிறோம் என்று பேசத் தெரியாமல் தான் இதுவரைக்கும் 40 கதைகள் கேட்டு தூங்கி விட்டதாகவும், இந்த கதைதான் எனக்கு ரொம்ப பிடித்து விட்டதாகவும் கூறி இருந்தார். இதை பார்த்ததும் அதுவரைக்கும் இவர் மீது பொறாமையில் இருந்த நெட்டிசன்கள் கொதித்தெழுந்து சமூக வலைத்தளத்தில் இவருக்கு எதிராக கமெண்ட் போர்களைத் தொடங்கி விட்டார்கள்.

சிம்புவோடு ஒப்பிடும் ரசிகர்கள்
தவறு செய்வது மனித இயல்பு தான் அதை மன்னிப்பது தான் பெரிய குணம் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், இவர் மீது இப்ப வரைக்கும் சமூகவலைத்தளத்தில் அதிகமான நெகட்டிவ் கமெண்ட்டுகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. எத்தனையோ முறை தான் செய்த தவறு குறித்து அந்த நாளில் ஏற்பட்ட மன குழப்பத்தை குறித்தும் அஸ்வின் விளக்கம் கொடுத்து இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் இப்ப வரைக்கும் இவரை கலாய்த்து வருகின்றனர். இதைப்பார்த்த இவருடைய தீவிரமான ரசிகர்கள் இவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் இவரை சிம்புவோடு ஒப்பிட்டு வருகின்றனர். ஆரம்பகாலத்தில் சிம்புவுக்கு வராத நெகட்டிவ் கமெண்ட் களா?? அவர் எதைப் பேசினாலும் அதை கலாய்த்துக் கொண்டு வந்தவர்கள் தற்போது அவர் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதும், அவர் டாக்டர் பட்டம் பெற்றிருப்பதும் அவருடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றி அந்த வகையில் அஸ்வினுக்கும் வெற்றி கிடைக்கும் என்பது அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
-
பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஒரு வாக்குமூலத்தால் தலைகீழான கதை! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிரை காப்பாற்ற வந்த முத்துவேல்... ஆனால் அதற்குள் நடந்த கொடூரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications