"அயலி” பட தமிழ்ச்செல்வி யார் தெரியுமா? நிஜ வாழ்க்கையில் இத்தனை போராட்டங்களை தாண்டி இருக்கிறாரா?
அயலி திரைப்படத்தில் தமிழ்செல்வியாக நடித்த நடிகை அபி நட்சத்திரா ஏற்கனவே வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
சென்னை: அயலி திரைப்படத்தில் தமிழ்செல்வியாக நடித்த நடிகையின் பெயர் அபி நட்சத்திரா.
அபி நட்சத்திரா ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
குறிப்பாக மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜியின் கடைசி தங்கச்சியாக நடித்திருக்கிறார்.
அபி நட்சத்திரா திரைப்படங்களில் நடிப்பதற்கு அவருடைய பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்து ஆறுதல் ஆதரவு கொடுத்து வந்தாலும் உறவினர்கள் குறை கூறிக் கொண்டுதான் இருக்கிறார்களாம்.

அயலி திரைப்பட கதை
சமீபத்தில் ஜி 5 இல் வெளியாகி அதிகமான நல்ல விமர்சனங்களை பெற்று வரும் அயலி திரைப்படம் பரவலாக ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. தற்போது வரும் வெப் சீரியஸ்களுக்கு மாற்றாக இந்த சீரிஸ் இருந்து வருவது பலருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடக்கும் கதையாக இந்த வெப் சீரிஸ் இருந்து வருகிறது. இந்த வெப் சீரிஸ் கதை ஆனது அயலி என்கிற ஒரு காவல் தெய்வம் இருக்கும் ஊரில், ஒரு பெண் பக்கத்து ஊரு ஆணோடு காதலித்து ஊரை விட்டு ஓடிப்போய்விடுகிறார். அதற்கு பிறகு அந்த ஊரில் பல அசம்பாவிதங்கள் நடக்கிறது. அதற்கு காரணம் அந்த பெண் வேறு ஒரு ஆணோடு ஓடிப் போய்விட்டது தான் காரணம் என்று ஊர் காரர்கள் நம்பி கொண்டிருக்கின்றனர். அந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊருக்கு சென்றாலும் அயலியின் தெய்வத்தின் பிடி மண்ணை எடுத்துக் கொண்டு வேறு ஊரில் கோவில் வைத்து அங்கே பூஜை செய்து வருகின்றனர்.

ஒரு பெண்ணின் போராட்டம்
சுமார் 5,00,000 ஆண்டுகளாக அந்த தெய்வத்தை வணங்கி வரும் அந்த ஊர் மக்கள் அயலிக்கு வயதிற்கு வராத பெண்கள் பால் ஊற்றி அபிஷேகம் செய்து சத்தியம் செய்து கொடுக்க வேண்டும் என்றும் அந்த ஊரில் பெண்கள் வயதுக்கு வந்த ஒரு ஆண்டுக்குள் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று ஊர் கட்டுப்பாடு வைத்திருக்கின்றனர். அதில் வீட்டிற்கு ஒரே பெண்ணாக இருக்கும் தமிழ்செல்வி எப்படி மாறுபட்டு முதல் முறையாக அந்த ஊரில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி அதிலும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று பிறகு பல்வேறு பிரச்சனை போராட்டங்களை தாண்டி பெண்கள் படிப்பதற்கு ஏற்பாடுகளை ஊர்கார பெண்களோடு செய்து முடிக்கிறார் அது மட்டுமல்லாமல் பல போராட்டங்களை தாண்டி அவர் எப்படி டாக்டராக மாறுகிறார் என்பது பற்றியதாக இருந்து வருகிறது.

உறவினர்களின் தொல்லை
இந்த கதையில் தத்ரூபமாக தமிழ்ச்செல்வியாகவே மாறி இருக்கும் அபி நட்சத்திரா 2005 ஆம் ஆண்டு தான் பிறந்திருக்கிறார். இவருடைய சொந்த ஊர் மதுரை பக்கம் உள்ள ராஜபாளையம் தானாம். இவர் மூக்குத்தி அம்மன், நவரசா, நெஞ்சுக்கு நீதி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதல் முறையாக இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆரம்பிக்கும் போது இவருடைய அம்மா அப்பா இவருக்கு ஆதரவு கொடுத்து வந்தாலும் குடும்பத்தினர் அதிகமாக இவருடைய பெற்றோருக்கு டார்ச்சர் கொடுத்து இருக்கிறார்கள். ஆனாலும் அதையெல்லாம் தாண்டி தான் இவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவதாக கூறியிருக்கிறார். கிராமத்து கதையில் அப்படியே மாறி இருக்கும் அபி இந்த திரைப்படத்தில் எந்த மேக்கப் போடாமல் தான் நடித்திருந்தாராம். அபி நட்சத்திராவின் அப்பா திரைப்படங்களில் ஏற்கனவே பணி புரிந்திருக்கிறாராம். எஸ் சந்திரசேகர் திரைப்படங்களில் அவர் வேலை செய்திருக்கிறாராம்.ஆனால் திருமணத்திற்கு பிறகு நட்சத்திராவின் தாத்தாவால் அவர் பிசினஸ் பார்க்கும் நிலை ஆகிவிட்டதால் அபி நட்சத்திரா சினிமாவில் நடிக்கிறார் என்பதன் அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறாராம்.

பயந்த இடம்
அயலி திரைப்படத்தில் தமிழ்ச்செல்வியின் அம்மாவாக மலையாள நடிகை அனுமோல் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவருடைய தந்தையாக மதன் மற்றும் லிங்கா, சிங்கம்புலி என பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தாலும் அனைவரும் ஒரு குடும்பம் போல தான் இந்த திரைப்படத்தில் நடித்ததாகவும் தான் பல இடங்களில் திணறும்போதெல்லாம் தனக்கு கூட நடித்தவர்கள் உதவி செய்தார்கள் என்று கூறி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது இவருக்கு உறுதுணையாக இயக்குனர் முத்துக்குமார் இருந்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் கடைசி சீனில் இவருக்கு தாலி கட்டுவது போன்று வருவது நடிப்பதில் இவர் பயந்தாராம். ஆனால் பிறகு அந்த சீன் இந்த அளவிற்கு பேசப்படும் என்று தெரிந்த பிறகு சந்தோஷமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார். ஆனால் இந்த சீனில் நடிக்கும் போது கெத்தாக நடித்திருந்தாராம். இது இப்போதும் கிராமத்தில் பலர் இந்த சீனை பார்த்தால் சந்தோஷப்படுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

தத்ரூபமான நடிப்பு
இந்தத் திரைப்படத்தில் அதிகமாக இவர் அழும் சீன்கள் இருந்த நிலையில் பல இடங்களில் இவர் நிஜமாகவே அழுது இருக்கிறாராம். குறிப்பாக இவர் கத்தி பேசும் இடங்களில் ஒரே சாட்டில் பேசி முடித்து அந்த இடங்களில் இவரை மீறியும் அழுது இருக்கிறாராம். தமிழ் செல்வியாக முழுவதுமாக மாறிய இவர் கடைசி எபிசோட்டில் பஸ்ஸில் ஏறாமல் பேசும் வசனங்கள் கூட இவர் தூக்கத்தில் இருந்து எழும்பி ஒரு முறை இயக்குனர் கூறியதும் அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு நடித்து முடித்ததுதானாம். அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் தன்னுடைய கவனத்தை இவர் செலுத்தியதால் தான் இவரால் தத்ரூபமாக இந்த திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பை காட்ட முடிந்தது என்று கூறியிருக்கிறார். அதனால் தான் ரசிகர்களுக்கும் இந்த திரைப்படத்தை இந்த அளவிற்கு பிடித்து போய்விட்டதோ என்னவோ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications