பிக் பாஸ் நிகழ்ச்சியில் அது ஸ்கிரிப்ட் தான்.. அங்கே நடப்பது இதுதான்! உண்மையை உளறிய ஆயிஷா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஆயிஷா அந்த நிகழ்ச்சியில் நடப்பதை பற்றி முதல் முறையாக பேசியிருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு ஸ்கிரிப்டட் நிகழ்ச்சி என பலர் குறை கூறி கொண்டிருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியின் தன்மையை குறித்து ஆயிஷா பேசியிருக்கிறார்.

ரவுடி பேபி சத்யா
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமான ஆயிஷா ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியலின் ரவுடி பேபி ஆக பலருக்கும் பரிச்சயமானவர்தான். இந்த சீரியல் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதும் இவருடைய சின்னத்திரை ரசிகர்கள் அதிகமானார் ஆதரவு கொடுத்து வந்தனர். இவருடைய முன்னாள் காதலன் இவரை பற்றி சமூக வலைதளத்தில் பல வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியில் இருக்கும் போது அவரைப் பற்றிய பல குற்ற சாட்டுகளை கூறிக் கொண்டிருந்தார். இது ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலர் அறிவுரைகளை கூறிக் கொண்டிருந்தனர்.

ஸ்கிரிப்டட் டாஸ்க்
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ஆயிஷா முதல் முறையாக சேனல்களுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ஸ்கிரிப்ட் நிகழ்ச்சி என்று பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஆனால் அது அப்படியே இல்லை அங்கே கொடுக்கப்படும் டாஸ்க் தான் ஸ்கிரிப்டட் ஆனாலும் அதில் நாம் எந்த மாதிரி விளையாட போகிறோம், என்ன மாதிரி பேசப்போகிறோம் என்பதெல்லாம் நாம் தான் முடிவு செய்ய வேண்டும். இப்படித்தான் நடக்க வேண்டும் என்பது ஸ்கிரிப்ட்டில் இருக்கும். ஆனால் யார் எப்படி எல்லாம் பேச வேண்டும் பெர்பார்மன்ஸ் செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய சொந்த விருப்பத்தில் தான் அங்கே விளையாடி வருகிறார்கள் என்று கூறி இருக்கிறார்.

கதை சொல்லாத காரணம்
அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்க்கில் அனைவரும் தங்களுக்கு கதை சொல்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, டைம் கிடைக்கவில்லை என்று எல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இவருக்கு கிடைத்த டைமில் இவர் கதை சொல்வதற்கு எனக்கு என் விருப்பமில்லை. அதனால் நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. அதை குறித்தும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அதில் என்னுடைய கடந்த கால கதை அனைவருக்குமே தெரியும். நான் ஒரு முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் கேரளாவிலிருந்து நடிக்க தெரியாமல் இங்கே வந்தேன் என்றும், இங்கே வந்த பிறகு எவ்வளவு பிரச்சனைகள் எனக்கு ஏற்பட்டது என்பது அனைவருக்குமே சமூக வலைத்தளத்தில் தெரிந்ததுதான். தெரிந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் நான் பேசிக் கொண்டிருப்பதில் பிரயோஜனம் இல்லை என்று தான் நான் பேசவில்லை என்று கூறியிருக்கிறார்.

பிடித்த நபர்
அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என் மனதை பாதித்த ஏதாவது விஷயத்தை சொல்லி அனுதாப ஓட்டுக்களை பெறுவும் நான் விரும்பவில்லை. அதுபோல் நான் சொன்னாலும் பலர் அதை தெரிந்து கொண்டு என்னை செண்டிமெண்ட் அட்டாக் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது அதனால் தான் நான் எதையும் சொல்லவில்லை என்றும் கூறியிருக்கிறார்.அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பவர்களில் தனக்கு அதிகமாக பிடித்தது ஷிவின் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகும் அவரோடு என்னுடைய நட்பு தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த அளவிற்கு சரியான ஒரு ஜெனியுவல் பர்சன். எந்த விஷயத்தையும் ஷிவினிடம் நம்பி பேசலாம். அதனால எனக்கு அவளை ரொம்பவே பிடிக்கும். எனக்கு மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் பலருக்கும் ஷிவினை பிடிக்கும் அதற்கு ஷிவினுடைய தனித்துவமான கேரக்டர்தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications