வீட்டிற்குள் வரும் ராதிகா..குடும்பத்தை விட்டு பிரியும் பாக்கியா.. இனியா கேள்வியால் திணறும் கோபி
சென்னை: கோபி இந்த வீட்டில்தான் இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக ஈஸ்வரி பேசுகிறார்.
நான் இந்த வீட்டை விட்டு போக போகிறேன் என்று பாக்யா கிளம்புகிறார்.
ராதிகா பாக்யா வீட்டிற்கே பேக்கை தூக்கிக்கொண்டு வந்து விட்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 19ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் கோபி இடம் நீ இங்கேயே இரு என்று சொல்ல, அதைக்கேட்டு அதிர்ச்சியாகும் கோபி பதில் எதுவும் சொல்ல முடியாமல் தவிக்கிறார். அப்போது ஈஸ்வரி இனிமே நீ அங்க போக வேண்டாம். இந்த வீட்டிலேயே இரு நாம எல்லாரும் பழையபடி ஒன்றாக இருக்கலாம் என சொல்கிறார்.

இதைக் கேட்டு கிச்சனில் இருந்த எழில் ஈஸ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அப்போது கோபி என்ன பேசுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு உறுதியாக ஈஸ்வரி இனிமேல் கோபி இந்த வீட்டில் தான் இருப்பான் என்று சொல்ல, எழில் நாம யாரும் வேண்டாம்னு சொல்லிட்டு போனவர் தானே அவரைப் பற்றி நாம் எதுக்கு கவலைப்பட வேண்டும் என சொல்ல, பழசு எதுவும் பேச வேண்டாம் இனிமே கோபி இந்த வீட்டில் தான் இருப்பான் என்று மீண்டும் கூறுகிறார்.
இதைக் கேட்டு கடுப்பாகும் பாக்யா அப்போ நான் இந்த வீட்டை விட்டு போய் விடுகிறேன் என்று சொல்ல, எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர். பிறகு நீ எதற்கு இந்த வீட்டை விட்டு போகணும் நீயும் இங்கேயே இரு என்று ஈஸ்வரி சொல்ல அது எப்படி முடியும் எனக்கும் அவருக்கும் எந்த உறவும் இப்போ கிடையாது. உங்க எல்லோருக்கும் அவருடனான உறவு இருக்கு, ஆனால் எனக்கு எந்த உறவும் கிடையாது. அப்படி இருக்கும்போது நான் எப்படி அவருடன் ஒரே வீட்டில் இருக்க முடியும் என்று கேட்கிறார்.

கோபியை வீட்டில் இருக்க சொன்ன ஈஸ்வரி..வெளியே கிளம்பும் பாக்யா.. கடுப்பான ராதிகா எடுத்த முடிவு
ஈஸ்வரியும் எனக்கும் அவனுக்கும் அம்மா மகன் உறவு இருக்கு, அவனுக்கும் அவனது பிள்ளைகளுக்கும் அப்பா மகன் உறவு இருக்கு அப்படி இருக்கும்போது அவன் ஏன் இந்த வீட்டில் இருக்கக் கூடாது. அவன் இங்கு தான் இருப்பான் என்று மீண்டும் சொல்ல பாக்கியா, அப்படின்னா நான் எனக்கான முடிவை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார்.
மறுபக்கம் ராதிகா துணிகளை பேக்கில் எடுத்து வைத்துக்கொண்டு ஈஸ்வரியின் வீட்டுக்கு கிளம்ப தயாராக, அவருடைய அம்மா எக்காரணத்தைக் கொண்டும் உன்னுடைய கௌரவத்தை நீ விட்டு விடக்கூடாது. நீ அங்கே போ முதல்ல எல்லோரும் சத்தம் போடுவாங்க ஆனா அதையெல்லாம் கண்டுக்காத, போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பேனு சொல்லு, இதுவரைக்கும் நீ வராததுனால அவங்களுக்கு குளிர் விட்டு போய் இருக்கும், நீ போய் நின்னா தான் அவங்களுக்கு செருப்பால் அடிச்ச மாதிரி இருக்கும் என்று ஏற்றி விடுகிறார்.

அதே நேரத்தில் கோபியிடம் ஈஸ்வரி நீ அவளை கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் தான் இப்படி மாறிட்ட, இனிமே அவ உனக்கு தேவை இல்லை. விவாகரத்து கொடுத்துடு என்று சொல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதற்கு கோபி அதெல்லாம் சரி வராது நான் கிளம்புகிறேன் என சொல்ல, இனியா நீங்க இங்கேயே இருங்க டாடி என்று கோபியிடம் கெஞ்சுகிறார்.
அதற்கு ஒரு வழியாக கோபி இனியாவை சமாதானம் செய்து வெளியே செல்ல முயற்சி செய்ய, அப்போது ஈஸ்வரி கோபியை தடுத்து நிறுத்தி உன்னுடைய நல்லதுக்கு தான் சொல்லுவேன் என பேச, கோபி இனிமேல் சத்தியமா குடிக்க மாட்டேன். இந்த வீட்டில் இருப்பதெல்லாம் சரி வராது என்று சொல்லி வெளியே கிளம்பும்போது ராதிகா வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கிறார். ராதிகாவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications