ராதிகாவை பற்றிபோட்டு உடைத்த பாக்யா..வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்..எல்லாத்துக்கும் காரணம் அவர் தான்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரேஷ்மா தன்னுடைய ரசிகர்களோடு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார்.
அதில் ரசிகர்களின் கேள்விக்கு பாக்யாவாக நடிக்கும் KS சுசித்ரா ஷெட்டி பல தகவல்களை கூறியிருக்கிறார்.

சின்னத்திரை ராதிகா
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியல் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் டிஆர்பியின் அளவில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றனர். அந்த வகையில் அந்த சீரியலில் ராதிகா கேரக்டரில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது நடித்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்னும் சீரியலிலும் வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார்.

ரசிகர்களுடன் சந்திப்பு
சீரியலில் ஆரம்பத்தில் பாசிட்டிவ் கேரக்டராக இருந்து வந்த ராதிகா பின்பு பாக்யாவின் கணவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிறகு தன்னுடைய உரிமைகள் மற்றும் பாராட்டுகளை பெற வேண்டும் என்பதற்காக வில்லியாக மாறிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து
பாக்கியாவோடு அடிக்கடி முட்டல் மோதல்களில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் ரசிகர்களோடு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் அதிகமான ரசிகர்கள் கலந்து கொகொண்டிருக்கின்றனர். ஏற்கனவே ரேஷ்மாவிற்கு சீரியல் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது அவர்கள் ரேஷ்மாவிடம் கேள்வி கேட்டிருக்கின்றனர். அதில் ரியல் பாக்கியா அதாவது சுசித்ரா செட்டி இருக்கிறார்கள் அல்லவா அவருக்கு ஒரு போன் செய்து லவ் யூ என்று சொல்லுங்கள் என கேட்டிருக்கிறார்கள்.

பாக்யாவின் விளக்கம்
அதற்கு ரேஷ்மா நாங்கள் நிஜ வாழ்க்கையில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று தெரிவித்து, சுசித்ரா ஷெட்டிக்கு போன் செய்து இருக்கிறார். போனை எடுத்த சுசித்ரா விடம் இங்கே பார் பாக்கியா உன் கதாபாத்திரத்தை வைத்து இங்கே என்னை வைத்து செய்கிறார்கள். என்னை எல்லோரும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று ரேஷ்மா சொல்ல, அதற்கு சுசித்ரா யாரும் திட்டாதீங்க.., யாரும் திட்டாதீங்க.., யாரும் ராதிகாவை திட்டாதீங்க, அவர் ரொம்ப நல்லவர். ஃபிராடு பண்ணுனது கோபி தான். கோபியை தான் நீங்க திட்டனும். ராதிகாவை திட்டக்கூடாது. ஏனென்றால் அவங்களும் கொஞ்சம் அப்பாவி மாதிரி தான் இருக்காங்க என்று பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

திரைப்படங்களிலும் நடிப்பு
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதுவும் குறிப்பாக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாபாத்திரம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது. இந்த திரைப்படத்தில் புஷ்பா புருஷன் யார் என்ற வாசகம் ரசிகர்களிடம் இப்ப வரைக்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து கோ 2, மணல் கயிறு, திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் மாமா என்று பல திரைப்படங்களில் ரேஷ்மா நடித்திருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications