பாக்யாவின் வீட்டிற்குள் அடுத்த பூகம்பம் ரெடி..கலங்கி நிற்கும் எழில்.. இனியாவால் எதிர்பாராத திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் எழில், அமிர்தா பேசாததையும், வீட்டில் நடந்த மாற்றங்களை நினைத்தும் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறார்.
ஸ்கூலில் இனியா பெற்றோரை கூட்டிவர சொல்லியும் கூட்டி வராததால் சீரியலில் புது திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

வேதனையில் எழில்
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் நடந்ததை நினைத்து கண் கலங்கி கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா என்னாச்சி என கேட்க, நடந்ததை கூறுகிறார். பின்னர் பாக்யா கொஞ்சம் பொறுமையாக இரு உனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ண போறது இல்ல, அதே நேரத்தில் அமிர்தாவுக்கு அவங்க கல்யாணம் பண்ணி வைக்கப் போறது இல்லை. வீட்டில் இதனால் பொறுமையாக பேசலாம். அவர்களுக்கு நீ அங்கே போறது பிடிக்கவில்லை என்றால் நீ கொஞ்ச நாளைக்கு போகாதே. நீங்க கண்டிப்பா ஒன்னா சேர்ந்துருவீங்க. நான் தான் இருக்கேன் இல்லே, உங்களுடைய திருமணத்தை நடத்தி வைத்து விடுவேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

இனியாவிற்கு பள்ளியில் கிடைத்த அதிர்ச்சி
அடுத்த நாள் காலையில் இனியா ஸ்கூலுக்கு போவதற்கு தலைவலிக்கு தொண்டை வலிக்கு என நாடகம் போடுகிறார். பாக்யா திட்டி ஸ்கூலுக்கு எழிலுடன் அனுப்பி வைக்கிறார். எழிலிடம் பள்ளியில் வீட்டிலிருந்து ஆள் அழைத்து வர சொல்லி இருப்பதை கூறுவோமா? என இனியா நினைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அப்பா அல்லது அம்மா தான் வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் என்று குழப்பத்தோடு பள்ளிக்கு செல்கிறார் .அங்கே அவருடைய வகுப்பு தோழிகள் எல்லாம் பேரண்ட்ஸ் கூட்டி கொண்டு வந்து ஹெட் மாஸ்டரை பார்த்து விட்டனர். ஆனால் இனியா மட்டும் கூட்டி வராததால் பள்ளிக்கு வெளியே இருக்கிறார். இன்று மாலை வரை மட்டும்தான் உனக்கு பெர்மிஷன் இருக்கிறது. அதற்குள் உன்னுடைய பெற்றோர் வந்து என்னை பார்க்க வில்லை என்றால் நீ வீட்டிற்கு செல்லும் போது டிசியை வாங்கிக் கொண்டு சென்று விடு என்று ஹெட் மாஸ்டர் வார்னிங் கொடுத்துவிட்டு போயிருக்கிறார்.

எழில் கவலைப்பட காரணம்
அதே நேரத்தில் ஜெனியின் அம்மா வீட்டுக்கு வந்து ஜெனியை பார்த்துவிட்டு ஒரு வாரம் கூட்டிட்டு போய் எங்க வீட்ல வச்சிருந்து அனுப்புறேன் என்று சொல்ல, செழியன் இங்கேயே இருக்கட்டும் என சொல்கிறார். அப்போது ஈஸ்வரியும் வளைகாப்பு முடிந்து உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க. அதுவரைக்கும் இங்கே இருக்கட்டும் என்று கூறி இருக்கின்றனர். அதற்கடுத்து ஆபீஸில் எழில் அமிர்தாவை பற்றி யோசித்துக் கொண்டிருக்க சதீஷ் போன் போட்டு ஆபீசுக்கு ஏன் வரவில்லை என அமிர்தவிடம் கேட்கிறார் .அதற்கு நான் இனி வரவில்லை என்று கூறி போனை கட் செய்து விடுகிறார் .அருகில் இருந்த வர்ஷினி எழில் இடம், நான் உங்களை நெருங்கி வர வேணாம்னு சொல்லிட்டு விலகி போற அமிர்தாவை தேடுறீங்க என பேசுகிறார்.

வர்ஷினியின் புது பிளான்
வர்ஷினியின் பேச்சைக் கேட்டு கடுப்பான எழில் என்னுடைய பர்சனல் வாழ்க்கைக்குள் தலையிடாதீங்க, படத்தை பற்றி மட்டும் வேணும்னா பேசுங்க என்று சொல்லி வெளியே கிளம்பி விடுகிறார். எழில் வெளியே சென்றுதும் ,வர்ஷினி சதீஷ் இடம் எனக்கும் எழிலுக்கும் தான் கல்யாணம் நடக்கும் என சொல்ல அதற்கு வாய்ப்பே இல்லை என கூறுகிறார். படம் நடக்குமான்னு தெரியல என சொல்ல, படமும் நடக்கும் கல்யாணமும் நடக்கும் என வர்ஷினி சபதம் இடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications