பாக்யாவுக்கு தெரிய வந்த ஈஸ்வரியின் சூழ்ச்சி..அமிர்தாவுக்கு நடக்கும் அவமானங்கள்.. எழில் எடுத்த முடிவு

எழிலை, ஈஸ்வரி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மிரட்டி செண்டிமெண்டாக பேசி தான் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்கள் என்பதை பாக்யா தெரிந்து கொள்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் எழில் அமிர்தாவை இப்போதும் காதலித்துக் கொண்டிருக்கும் விஷயம் பாக்யாவுக்கு தெரிகிறது.

மண்டபத்திற்கு வந்த அமிர்தாவை ஈஸ்வரி தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தி அனுப்புகிறார்.

எழில் அமிர்தாவிடம் குடும்பத்திற்காகவும் பணத்திற்காகவும் தான் இந்த திருமணத்தை செய்து கொள்கிறேன் என்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.

அமிர்தாவை திட்டும் ஈஸ்வரி

அமிர்தாவை திட்டும் ஈஸ்வரி

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் கல்யாண மண்டபத்துக்கு வந்திருந்த அமிர்தாவை ஈஸ்வரி கண்டபடி திட்டி கொண்டிருக்கிறார். எழிலுடைய திருமணத்தை தெரிந்து கொண்டு தான் இங்கே வந்து திருமணத்தை நிறுத்துவதற்கு அமிர்தா வந்திருக்கிறார் என்று ஈஸ்வரி கோபத்தில் பேச, அதற்கு அமிர்தா எனக்கு எழிலுக்கு திருமணம் என்று தெரியாமல் தான் இங்கே வந்தேன். திருமணத்தை நிறுத்துவதற்காக வரவில்லை. அதை செய்யவும் மாட்டேன் என்று அழுதபடியே கூறினாலும், ஈஸ்வரி மேலும் திட்டிக் கொண்டே இருக்கிறார். பிறகு ஜெனி கொஞ்சம் பொறுமையாக இருங்க நீங்க சத்தமா பேசுறது எல்லோருக்கும் கேட்டு விடும் என்று ஈஸ்வரியிடம் கூற, ஈஸ்வரி அமிர்தாவை வெளியே தள்ளி கதவை சாத்திட்டு, நீ உள்ளே வா என்று கூறி மேடைக்கு செல்கிறார்.

கதறி அழும் அமிர்தா

கதறி அழும் அமிர்தா

அதற்குப் பிறகு அமிர்தா அங்கிருந்து கிளம்ப ஜெனி அவரை கூட்டி சென்று தனியாக வைத்து பேசிக் கொண்டிருக்கிறார். எழில் மீது எந்த தப்பும் கிடையாது, எழிலுக்கு இந்த கல்யாணத்தில் எந்த விருப்பமும் இல்லை என்று சொல்ல, அமிர்தா அழுது கொண்டே நான் யாரையும் தப்பா நினைக்கிற மனநிலையில் இல்லை எனக் கூறி இருக்கிறார். பிறகு அவருக்கு தலைசுற்றி படபடப்பாக வருகிறது என்று சொல்ல ஒரு சேரில் உட்கார வைத்துவிட்டு அமிர்தா வந்த விஷயத்தை எழிலிடம் சொல்ல வேண்டும் என்று ஜெனி மேடைக்கு வருகிறார். மேடையில் குடும்பத்தினர் அனைவரும் இருக்க ஜெனி எதுவும் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். பிறகு கோபி வீட்டுக்கு செல்வதாக சொல்ல வர்ஷினி அப்பா உங்களுக்கு ரூம் இருக்கிறது என்று கூறி கொண்டிருக்கிறார். அதற்கு கோபி இல்லை டிரஸ் மாத்திட்டு வரணும் என்று சொல்ல எல்லாமே ரெடியா இருக்கு வாங்க என்று அவரை கூட்டிக்கொண்டு செல்கிறார்.

எழிலிடம் உண்மையைச் சொன்ன ஜெனி

எழிலிடம் உண்மையைச் சொன்ன ஜெனி

பிறகு வர்ஷினி ரெஸ்ட் எடுத்துட்டு வரேன் என உள்ளே போக, ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் ரூமுக்கு செல்கின்றனர். பிறகு செழியன் எழிலிடம் பேச ஆரம்பிக்கும் போது, அவருக்கு போன் வந்ததும் அங்கிருந்து கிளம்புகிறார். தனியாக இருந்த எழிலிடம் ஜெனி, அமிர்தா வந்த விஷயத்தை சொல்கிறார். எழில் அமிர்தா வந்திருக்கிறார் என்று கேட்டதும் அதிர்ச்சியாகி இப்போ அவர் எங்கே என்று கேட்க? ஜெனி, அமிர்தா கிளம்பிவிட்டார் என்று சொல்ல எழில் மேடையில் இருந்து மாலையை கழற்றி வைத்துவிட்டு ஓடி வெளியே வருகிறார்.

பாக்கியாவுக்கு தெரியவரும் உண்மை

பாக்கியாவுக்கு தெரியவரும் உண்மை

அமிர்தா குழந்தையை தூக்கிக்கொண்டு மண்டபத்தை விட்டு வெளியே கிளம்பி நடந்து கொண்டிருக்கும்போது எழில் அமிர்தாவை தடுத்து நிறுத்தி தனியாக அழைத்து சென்று அழுதபடியே மன்னிப்பு கேட்கிறார். என்னை மன்னிச்சிருங்க என அமிர்தா வீட்டில் நடந்த விஷயங்களை சொல்கிறார். ஈஸ்வரி காலில் விழுந்து கெஞ்சியதையும், பணத்திற்காக தான் பட்ட கஷ்டங்களையும் கூறுகிறார். நான் பணத்திற்காக தான் வர்ஷினியை கல்யாணம் செய்யப் போகிறேன். வர்ஷினியின் அப்பா, அவரை அப்பா என்று சொல்லக்கூடாது அவர் பணத்திற்காக என்னை இப்படி பணிய வைத்து இருக்கிறார். அவருக்கு இருக்கும் பண மற்றும் ஆள் பலத்தால் எனக்கு பணம் கிடைக்க விடாமல் தடுத்து விட்டார். நான் என்ன செய்ய? என்று தன்னுடைய நிலையை விலக்கி அழுது கொண்டிருக்க, ஏற்கனவே அமிர்தா வந்த விஷயத்தை பாக்யாவிடம் ஜெனி கூறியதால், பாக்யாவும், அமிர்தாவும் வெளியே ஓடிவந்து நின்று கொண்டு, எழில் அமிர்தாவிடம் பேசிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். தனக்கு தெரியாமல் ஈஸ்வரி செய்த சூழ்ச்சிகளும் ,பிரச்சனைகள் அனைத்தையும் பாக்கியா அறிந்து அதிர்ச்சி ஆகியிருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+