பாக்கியாவை பழி தீர்க்க நடக்கும் பெரிய சதி.. இனியாவை அடிக்க பாய்ந்த ராதிகா..இனி நடக்கப் போவது இதுதான்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் தான் எதிர்பார்த்த பணம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் பாக்யா குடும்பத்தோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
எதிர்பாராமல் பாக்யாவுக்கு பணம் கிடைத்து விட்டாலும் கேன்டீன் காண்ட்ராக்ட் விஷயத்தில் ராதிகா சூழ்ச்சி செய்ய தொடங்குகிறார்.

பாக்யாவின் மகிழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசொட்டில் ஆரம்பத்தில் பாக்கியா பணம் கிடைத்துவிட்டது என்ற விஷயத்தை வீட்டில் சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். ஈஸ்வரியின் முகத்தில் இன்று முழித்ததால் தான் தனக்கு அனைத்துமே நல்ல விஷயமாக நடப்பதாக பாக்யா சொல்லிக் கொண்டிருக்க, ஈஸ்வரி உனக்கு அவ்வளவு பணம் எப்படி கிடைத்தது என்று கேட்கிறார். அது மட்டும் அல்லாமல் அவர் என்ன அர்த்தத்தில் உனக்காக இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று சந்தேகத்தோடு கேள்வி எழுப்ப அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். பின்பு பேங்கில் பணம் கிடைக்கவில்லை அதனால் தான் அவர் ஒரு பைனான்ஸ் வைத்திருப்பதால் அதிலிருந்து கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்.

ராதிகாவின் பழி வாங்கும் படலம்
பைனான்ஸ் என்றால் வட்டி எவ்வளவு என கேட்க, பேங்க் விட கொஞ்சம் ஜாஸ்தி தான் என பாக்யா சொல்கின்றார். அதனால் தான் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து இருக்கிறார் என்று ஈஸ்வரி கூறுகிறார். அடுத்து பாக்யா மற்றும் எழில் இருவரும் கேண்டின் ஆர்டர் எடுக்க பணம் கட்டுவதற்காக ராதிகாவின் ஆபீசுக்கு வருகின்றனர். அங்கே கம்பெனி முதலாளியிடம் டிடியை அவர்களிடம் கொடுத்துவிட்டு திங்கள்கிழமையிலிருந்து உங்களுடைய வேலையை நீங்கள் தொடங்கி விடலாம் என அவர் சொல்லவும் சரியென கேண்டினை சுற்றி பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதை பார்த்த ராதிகா அதிர்ச்சி அடைந்து ஓனரிடம் சென்று அவங்க அவ்வளவு நல்ல கேட்டரிங் கிடையாது, நான் விசாரித்து பார்த்த வரைக்கும் நல்லபடியா சொல்லல்ல. இவங்க இதுவரைக்கும் 20,30 பேருக்கு தான் சமையல் செய்து கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே இங்கே சாப்பாடு பிரச்சனை நடந்து இருக்கிறது. அதனால் இன்னொரு பிரச்சனை என்னால் சமாளிக்க முடியாது என சொல்லி இவங்க வேண்டாம் என ராதிகா சொல்ல சரி என ஓனர் கூறுகிறார்.

அடிக்கப் பாய்ந்த ராதிகா
அடுத்ததாக வீட்டிற்கு வரும் ராதிகா போன் பார்த்துக் கொண்டிருக்கும் மயூ மற்றும் இனியாவை படிங்க என சொல்ல இனியா எதுவும் சொல்லாமல் இருக்கிறார். மயூ இரண்டு நிமிடம் என்று சொல்லிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்த ராதிகா இருவரும் மீண்டும் போன் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து இருவரையும் படிக்க சொல்கிறார். மயூ ஆப் செய்த பிறகும் இனியா மட்டும் போனை பார்த்துக் கொண்டிருக்கிறார். இனியா இனியா என கூப்பிட இனியா என ராதிகா கூப்பிட கேட்காத போல இருக்கிறார். இனியாவின் கையில் இருக்கும் போனை பிடுங்கி கீழே வீசியதால் இனியா கோபமாகி எதற்காக இப்படி பண்றீங்க என கேட்க, நீ படிக்கலைன்னா உங்க டாடி வந்து என்கிட்ட தான் கேட்பார் என கேட்டு அதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு என இனிய கேட்க, உங்க அம்மா இப்படித்தான் உன்னை வளர்த்து இருக்காங்களா? என ராதிகா இனியாவிடம் கேட்கிறார். அம்மாவை குறை சொல்லாதீங்க. எங்க அம்மா நல்லா தான் வளர்த்திருக்காங்க, யாருகிட்ட எப்படி பேசணும் என்பது எனக்கு தெரியும் என இனியா பதில் பேச ராதிகா அடிக்க கையை ஓங்குகிறார் இனியா கையை பிடித்துக் தள்ளி விடுகிறார்,

செலவு கணக்கு பெருசா இருக்கு
என் டாடி கூட என்னை இதுவரைக்கும் அடிச்சது கிடையாது, நீங்க அடிக்க வரீங்க இதை அவர் கிட்ட சொன்னா என்ன ஆகும்னு தெரியுமா? பார்த்து நடந்துக்கோங்க என மிரட்டும் தோணியில் பேசிவிட்டு உள்ளே செல்கிறார். அடுத்ததாக பாக்யாவின் வீட்டில் கேண்டின் ஆர்டருக்காக அதிகமான பணத்தை செலவு செய்து தேவையான பொருள்களை வாங்கி இருக்கின்றனர். அதற்கான கணக்குகளை எழில் மற்றும் பாக்கியா பார்த்துக் கொண்டிருக்க செலவு கணக்கு கேட்டு ஈஸ்வரி செலவு நீண்டு கொண்டே போகுதே இவ்வளவு கடன் வாங்கி இதை செய்ய வேண்டுமா? என்று வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications