கோபிக்கு கிடைத்த எதிர்பாராத தாக்குதல்..பாக்கியா மற்றும் எழிலின் அதிரடி முடிவு.. எதிர்பாராத திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவிடம் ரொமான்ஸ் செய்யும்போது இனியா மற்றும் தாத்தா வந்ததால் ராதிகா திடீரென கோபியை தள்ளி விட்டிருக்கிறார்.

எழிலின் காதல் விவாகரத்தில் தலையிட்டு செழியன் செய்யும் செயலால் எழில் செழியனுக்கு வார்னிங் கொடுத்திருக்கிறார். ஆனாலும் செழியன் இவர்களுடைய காதலை பிரித்து விட முடிவெடுத்து இருக்கிறார்.

பாக்கியாவை கிண்டல் செய்யும் கோபி

பாக்கியாவை கிண்டல் செய்யும் கோபி

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் செல்வி ஒருவருக்கு மிளகாய் தூள் டெலிவரி செய்ய சென்று கொண்டிருக்கும்போது அங்கே கோபி ஏரியா செக்ரட்டரி இடம் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது செகரட்டரி கோபி இடம் பாக்கியா தேர்தலில் நிற்பதை குறித்து கூற ,கோபி ஏளனமாக பேசி சிரிக்கின்றார் .முதல் நாளில் பெண்களின் சப்போட்டோடு பாக்யா நான் நிற்கிறேன் என்று சொல்லிவிட்டு பிறகு வந்து என்னிடம் நான் நிற்கப் போவதில்லை என்று கூறுகிறார் என்று செக்ரட்டரி பேச, கோபி அது அவளுக்கு பிறகு தான் புரிந்து இருக்கும், நம்மால் இதை செய்ய முடியாது என்று தெரிந்து கொண்டு வந்து சொல்லி இருப்பாளாக இருக்கும் என்று பாக்கியாவை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்.

நோகடிக்கும் பக்கத்து வீட்டினர்

நோகடிக்கும் பக்கத்து வீட்டினர்

இதைக் கேட்ட செல்வி பாக்யாவின் வீட்டில் அனைவரிடமும் சொல்ல, கோபியின் அம்மா அவரை திட்டுகிறார். அடுத்து பாக்கியாவின் வீட்டிற்கு இரண்டு பெண்கள் வந்து நிச்சயதார்த்த ஆர்டர் பற்றி பேசுகின்றனர். பாக்கியா பண்ணி கொடுக்கிறேன் ஆபீஸ்க்கு வர சொல்லுங்க என சொல்ல, அவர்கள் கோபி பிரிந்து சென்றதையும் இனியா அப்பாவோட சென்றதை பற்றியும் பேசி பாக்கியாவை மன நோக செய்கின்றனர். இதே நேரத்தில் இனியா கோபியுடன் காரில் வந்து இறங்க, பாக்யா இனியாவை பார்த்து சைகையில் பேச முயல்கிறார். ஆனால் கோபி இதை பார்த்து பேசவிடாமல் இனியாவை கூட்டி சென்று விடுகிறார். இதை அருகில் இருந்து பார்த்த அந்தப் பெண்கள் மேலும் பாக்கியாவை நோகடிக்கின்றனர்.

செழியனுக்கு வார்னிங் கொடுத்த எழில்

செழியனுக்கு வார்னிங் கொடுத்த எழில்

அடுத்ததாக எழில் அமிர்தாவின் போட்டோவை பார்த்துக் கொண்டிருக்க அப்போது செழியன் அருகில் வந்து எழில் போனை உற்றுப் பார்த்ததும் எழில் கோபப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் உனக்கும் அமிர்தாவுக்கும் என்ன பிரச்சனை என கேட்க, அது தெரிந்து நீ என்ன செய்யப் போகிறாய் என்று எழில் விதண்டாவிதமாக பேச, அந்தப் பெண் உன்னை விட்டு ஓடி போய்விட்டதோ? அதோடு விட்டுவிடு, இதிலிருந்து விலகி விடு என்று செழியன் பேச எழில், செழியனை திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது அருகில் இருக்க ஜெனியும், செழியனை திட்ட நான் என்னுடைய தம்பியின் வாழ்க்கையில் கெட்டது நடக்க விடமாட்டேன் என்று செழியன் சொல்லிக் கொண்டிருக்கிறார். எழில் யாருக்கு பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் நான் அமிர்தாவை தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று கூறிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார். ஆனால் செழியன் நான் எப்படியும் இவர்கள் திருமணத்தை நடத்த விட மாட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அமிர்தா நீ இப்படி பண்ணிக் கொண்டிருந்தால் வயிற்றில் இருக்கும் நம்முடைய குழந்தை இதை பார்த்துக் கொண்டிருக்கும் உன்னை பற்றி தப்பாக நினைக்கும் இதனால் இதை இப்படியே விட்டு விடு என்று வார்னிங் கொடுத்து விட்டு செல்கிறார்.

அடி வாங்கிய கோபி

அடி வாங்கிய கோபி

அடுத்ததாக ராதிகா சோபாவில் தனியாக அமர்ந்திருக்க அங்கே வந்த கோபி இரண்டு குழந்தைகளும் என்ன செய்றாங்க என்று கேட்க மயூ தூங்கிவிட்டாள், இனியா தாத்தாவோடு வெளியே சென்று இருக்கிறார் என்று ராதிகா சொன்னதும் என்னுடைய அழகான மனைவியை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல என கொஞ்சிய படியே கோபி, ராதிகா கன்னத்தில் முத்தம் கொடுக்க அருகில் செல்லும்போது கரெக்டாக அதே நேரத்தில் இனியா வந்து விடுகிறார். இதை பார்த்த ராதிகா கோபியை தள்ளிவிட அவர் சோபாவில் இருந்து கீழே விழுகிறார். இதை பார்த்த இனியா பதறி போய் டாடி என்ன ஆச்சி என கேட்க, கீழே போன் விழுந்து விட்டதை தேடுவதாக கூறி சமாளிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+