உண்மையை உளறிய எழில்.. வர்ஷினியால் ஈஸ்வரி எடுக்கும் முடிவு..தவிக்கும் பாக்கியா.. எதிர்பாராத திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் தான் அமிர்தாவை சந்தித்த உண்மையை எழில் வர்ஷினியிடம் கூறியிருக்கிறார்.
வர்ஷினியின் சூழ்ச்சிகளை எழில் தெரிந்து கொண்டதை பற்றி ஈஸ்வரி இடம் வர்ஷினி போட்டுக் கொடுக்கிறார்.
பாக்கியலட்சுமியின் புதிய பிசினஸ் முதல் நாளில் அவர் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இனியாவை போட்டுக் கொடுத்த தாத்தா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபியின் அப்பா பாக்யாவின் வீட்டிற்கு வந்திருக்க பாக்கியா காபி கொடுத்து இனியா பற்றி விசாரிக்க, மார்க் ரொம்ப கம்மியா எடுத்த விஷயத்தை சொல்ல, ஏன் அவ இப்படி பண்றா படிக்க வேண்டியது தானே? எக்ஸாம் சீக்கிரத்தில் வர இருக்கிறது என்று பாக்யா ஜெனி என அனைவரும் பீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். பின்பு தான் கேட்டரிங் ஆர்டர் கிடைக்காததால் சமைக்கும் இடத்திலேயே சாப்பாடு கொஞ்சம் அதிகமாக செய்து விற்கப் போவதாக சொல்ல அவர் நல்ல ஐடியா என்று பாக்யாவுக்கு ஆதரவு கொடுக்க, ஈஸ்வரி வழக்கம்போல இது எனக்கு சரியா வரும்னு தோணல என நெகட்டிவ்வாக பேசுகிறார்.

எழில் சொன்ன உண்மைகள்
அடுத்து எழில் ஆபீசுக்கு வர வர்ஷினி வந்து இரண்டு நாளா எங்க போயிட்டீங்க என பேச, அப்போது நான் எங்க போனா உங்களுக்கு என்ன? என எழில் கேட்க நீங்கள் என்னுடைய பிரண்ட் தானே அதுவும் பெஸ்ட் பிரண்டுக்கு மேல என்று கூற எழில் கோபமாகி நான் அப்படியெல்லாம் இல்லை .நீங்க அமிர்தாவை போய் பார்த்தீர்களா? நான் எதுக்கு அவளை போய் பார்க்கணும், என வர்ஷினி சொல்லிக் கொண்டிருக்கிறார். எழில் கோவப்பட்டு நீங்க அமிர்தாவை போய் பார்த்து இருக்கீங்க, எனக்கும் உங்களுக்கும் தான் கல்யாணம் நடக்கும்னு சொல்லி இருக்கீங்க, அந்த குடும்பத்தோட நம்பிக்கையை உடைத்து இருக்கீங்க என எல்லா விஷயத்தையும் சொல்லவும், உங்களுக்கு தெரிந்து விட்டதா? என வர்ஷினி கேட்க, நான் அமிர்தாவை தான் பார்க்க போயிருந்தேன் என்ற உண்மையை எழில் சொன்னதும் வர்ஷினி அதிர்ச்சி அடைகிறார்.

வர்ஷினியின் புது ப்ளான்
அடுத்ததாக நீங்க நினைக்கிற மாதிரி உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்காது. நான் அமிர்தாவை தான் கல்யாணம் பண்ணிக்குவேன். இதற்கிடையில் ஏதாவது நாடகம் ஆடிட்டு இருந்தீங்க, என சத்தம் போட்டு கொண்டிருக்கிறார். அப்போது வர்ஷினி அப்பா உள்ளே வந்து நீ யாரு கிட்ட பேசிட்டு இருக்கேன்னு தெரியுமா? என் ஆபீஸில் என்னுடைய மகளையே எதிர்த்து பேசுறியா? என கோபத்தோடு பேச, வர்ஷினி இது நாங்களே பேசி தீர்த்துக்கிறோம் .நீங்க வாங்க என கூட்டி செல்கிறார். வர்ஷினியின் அப்பா இவன்தான் உனக்கு வேணுமா? வேற மாப்பிள்ளை பார்க்கலாம் என்று சொல்ல வர்ஷினி அதிர்ச்சி ஆகிறார்.

ஜெனிக்கு வரும் சந்தேகம்
அடுத்து பாக்கியா சமைக்கும் இடத்தில் சாப்பாடு அதிகம் செய்து விற்பனை செய்ய தயாராக வைத்திருக்க, கடைசியாக ஒருவர் மட்டும் வந்து நான்கு சாம்பார் சாதம் வாங்கி செல்கிறார். மறுபக்கம் வர்ஷினி வீட்டுக்கு வந்து ஈஸ்வரியிடம் எழில் அமிர்தாவை பார்க்க போன விஷயத்தையும், தன்னிடம் கோபமாக பேசியதையும் கூறுகிறார். மேலும் அவர் நான் அமிர்தாவை தான் கல்யாணம் பண்ணிப்பேன் என உறுதியாக சொல்கிறார் என சொல்ல, அவன் மட்டும் சொன்னால் போதுமா? எனச் செழியன் சொல்ல, ஈஸ்வரி அப்படி சொல்லு என கூறுகிறார். அந்த அமிர்தாவை கல்யாணம் பண்ண நான் விட மாட்டேன். உனக்கும் எழிலுக்கும் தான் கல்யாணம் நடக்கும் என சொல்ல, அப்போது ஜெனி வர உடனே பேச்சை நிறுத்தி ஈஸ்வரி வர்ஷணியை கூட்டிக்கொண்டு தனியாக சென்று விடுகிறார். என்னமோ ரகசியம் பேசுறாங்க என ஜெனிக்கு தெரிந்து, வர்ஷினி எதுக்கு அடிக்கடி இங்கு வரா என ஜெனி செழியனிடம் கேட்க சமாளிக்க முயற்சி செய்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications