Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக்யாவின் உருக்கமான வார்த்தை கதறி அழுத இனியா..எழிலுக்கு கிடைத்த ஏமாற்றம்.. கடைசியில் ஆகிவிட்டதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியா மார்க்கு குறைந்ததற்காக, சரியாக படிக்காமல் தன்னை மாதிரி நீயும் ஆகிவிடாதே என்று உருக்கமாக பாக்கியா எழுதிக் கொடுத்த லெட்டரை பார்த்து இனியா கதறி அழுது கொண்டிருக்கிறார்.

எழில் அவருடைய தயாரிப்பாளர் மகளை திருமணம் செய்ய மறுத்ததால் ஆபீஸிலிருந்து வெளியேற்றப்பட்டு அவருடைய படப்பிடிப்பும் நிறுத்தப்படுகிறது.

பாக்யாவின் சாப்பாட்டை பாராட்டி கடைசியில் ராதிகாவிடம் கோபி மாட்டிக்கொண்டு உள்ளார்.

ராதிகாவிடம் மாட்டிக்கொண்ட கோபி

ராதிகாவிடம் மாட்டிக்கொண்ட கோபி

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் கோபி ராதிகாவிடம் சாப்பாடு நல்லாவே இல்லை .அப்பாவுக்காக பொய் சொன்னேன் என சொல்ல அந்த சாப்பாடு நல்லா தான் இருந்தது, உங்களுக்கு பிடித்திருந்தது, அதனால் தான் நீங்க நல்லா இருக்குன்னு சொன்னீங்க என கோபமாக பேச, சரி அப்படியே இருக்கட்டும் இனிமே எந்த சாப்பாடு கொடுத்தாலும் யாரு சமைத்தது? என முழு விவரமும் கேட்டுக்கொண்டுதான் நான் கமெண்ட் சொல்லுவேன், இல்ல இல்ல கமெண்ட் கூட சொல்ல மாட்டேன் என்று சமாளித்துக் கொண்டிருப்பதை பார்த்து ராதிகா கோபியின் மீது இருந்த கோபத்தை மறந்து சிரிக்கிறார். ஒரு வழியாக ராதிகாவை சிரிக்க வைத்து விட்டேன் என கோபி சந்தோஷம் அடைகிறார்.

பாக்யாவின் லெட்டர்

பாக்யாவின் லெட்டர்

பாக்கியா நாம சந்தோஷமா இருக்கக் கூடாதுன்னு இப்படி பண்றாங்க, எதுக்காக அங்க உள்ள சாப்பாட இங்க கொடுத்து விடணும் என ராதிகா சொல்ல, கோபி நாம இன்னும் சந்தோஷமாக இருந்து வாழ்ந்து காட்டுவோம் என கூறுகிறார். ஹாலில் இருக்கும் தாத்தா இனியாவிடம் நான் நீ மார்க் குறைவாக எடுத்து இருப்பதை பாக்யாவிடம் கூறினேன். அதற்கு பாக்யா உன்னிடம் ஒரு லெட்டர் கொடுக்க சொல்லி தந்தாள் அதை படித்து பார் என்று கொடுக்க இனியா மொட்டை மாடியில் சென்று லெட்டரை படித்து பார்க்கிறார். அந்த லெட்டரில் பாக்யா படிக்காததால் இதுவரை பட்ட அவமானங்களை எழுதி படிப்புதான் ரொம்ப முக்கியம் நீ நல்ல படியா படிச்சு அடுத்த முறை நல்ல மார்க்கு வாங்கணும், என்னை மாதிரி உன்னுடைய வாழ்க்கையும் ஆகிவிடக் கூடாது என்று உருக்கமாக எழுதி இருக்கிறார்.

தயாரிப்பாளரின் திடீர் முடிவு

தயாரிப்பாளரின் திடீர் முடிவு

அடுத்ததாக எழில் ஆபீஸில் வர்ஷினி அவருடைய அப்பாவிடம் சூட்டிங் பத்தி பேசணும் என சொல்ல படம் சூட்டிங் போகுமா? என கேட்க வர்ஷினி போகும் என கூறுகிறார். எழில் கல்யாணத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என தயாரிப்பாளர் கேட்க வர்ஷினி அமைதியாகவே இருக்க அவனை வரச் சொல்லு நான் பேசுகிறேன் என கூறுகிறார். இல்லப்பா அதெல்லாம் பாட்டி பாத்துக்குவாங்க என சொல்ல தயாரிப்பாளர் நான் எழிலிடம் பேச வேண்டும் என்று எழுந்து வந்து அங்கிருக்கும் எழிலுடைய நண்பரை வெளியே அனுப்பிவிட்டு எழிலிடம் பேசுகிறார்.

எழிலுக்கு கிடைக்கும் அதிர்ச்சி

எழிலுக்கு கிடைக்கும் அதிர்ச்சி

எழிலிடம் வர்ஷினியை கல்யாணம் செய்வதற்கு சம்மதமா என தயாரிப்பாளர் கேட்க எழில் நான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவளை தான் கல்யாணம் பண்ணிக்கணும் ஆசைப்படுகிறேன், யாருக்காகவும் அவளை விட்டு தர முடியாது என சொல்ல, அப்படின்னா இந்த படம் நடக்காது இண்டஸ்ட்ரியில் உன்னை பற்றி நான் ஒரு வார்த்தை தப்பா சொன்னா போதும் உன்னுடைய கேரியரே போய்விடும் என மிரட்டுகிறார். அதுமட்டுமல்லாமல் உனக்கு ஒரு நாள் டைம் தருகிறேன் யோசித்து பதில் சொல்லு என சொல்ல இந்த ஒரு நாள் இல்லை ஒரு நிமிஷம் கூட வேண்டாம் என்னுடைய முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன் என எழில் சொன்னதும், அப்படினா உனக்கு இந்த ஆபீஸில் இடம் கிடையாது ரெண்டு நிமிஷம் டைம் தரேன் உனக்கு எதை எடுக்கணுமோ அதை எடுத்துட்டு வெளியே போ என சொல்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+