• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோபியை பிரிக்க இனியா செய்த சூழ்ச்சி..தெரிந்து கொண்ட ராதிகா.. கதறி அழும் பாக்யா.. திடீர் திருப்பங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா இனியாவை பார்க்க வேண்டும் என கோபியின் வீட்டில் வந்து கோபியிடம் கதறி அழுது கொண்டிருக்கிறார். பிடிவாதமாக கோபி இனியாவை பார்க்க விடாமல் தடுத்து இருக்கிறார்.

கோபி செய்யும் செயல்களுக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கும் இனியாவின் மாஸ்டர் பிளான் பற்றி தாத்தாவிடம் பேசும்போது ராதிகா கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

"அந்த'' காரணத்தால் ரஜினியோடு நடிக்கவில்லை..கமலோடு சூட்டிங் அனுபவம் பகிர்ந்த எதிர்நீச்சல் பட்டம்மாள்

 கோபியின் திமிரான பேச்சு

கோபியின் திமிரான பேச்சு

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் கோபி வீட்டுக்கு இனியாவை பார்க்க வந்துள்ள பாக்கியாவை கோபி கண்டபடி திட்டி அசிங்கப்படுத்துகிறார். இனியவை ரூம்பை விட்டு வெளியே வராமல் கதவை லாக் செய்து சாவியை கையில் வைத்துக்கொண்டு திமிராக பேசிக் கொண்டிருக்கிறார். வெளியே பாக்யா மற்றும் எழில் இருவரும் இனியா இனியா என கத்திக் கொண்டிருக்கின்றனர். அறைக்குள் இருந்தபடியே இனியா, அழுது கொண்டிருக்கிறார். இனியா என்னுடைய மகள், இப்போ இல்லை இனி எப்போதுமே நீ பார்க்க முடியாது என்னுடைய பேச்சை தான் இனியா கேட்பாள் நீ இங்கே இருந்து போகலாம். என்னை வீட்டை விட்டு அனுப்ப தெரிந்த உனக்கு என்னுடைய பிள்ளைகள் உனக்கு எதற்கு என்று பஞ்ச் வசனங்கள் பேசிக் கொண்டிருக்கிறார். அதை கேட்டு ராதிகாவும் ராமமூர்த்தியும் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 அடிக்கப் பாய்ந்த அப்பா

அடிக்கப் பாய்ந்த அப்பா

கோபியிடம் ராமமூர்த்தி சண்டையிட்டாலும் , கோபி கண்டு கொள்ளாமல் இது என்னுடைய குழந்தை எனக்கு தான் முழு உரிமை இருக்கிறது என பேசிக்கொண்டு,இங்கே இருந்த அழுது கொண்டிருக்க, என்னை நீ வீட்டை விட்டு வெளியே அனுப்பி என் குழந்தைகளை பார்க்காமல் எனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும் இப்ப தெரியுதா? நல்லா வருத்தப்படு, நீ அழுவதை பார்க்க சந்தோஷமாக இருக்கு என தன்னுடைய வில்லத்தனத்தை காட்டிக் கொண்டிருக்கிறார். என்ன? என்னமோ சொந்தக்காலில் நிற்பேன் ஜெயித்துக் காட்டுவேன் என வீர வசனம் எல்லாம் பேசின, இன்னைக்கு என் வீட்டு வாசல் படி முன்னாடி வந்து நிற்கிற சூடு, சொரணை,மானம் எதுவும் இல்லையா? கழுத்தை பிடித்து வெளியே தள்ளவா என கோபி ஆவேசமாக பேச, அவருடைய அப்பா ராமமூர்த்தி கோபியை அடிக்கப் பாய்கிறார். பிறகு வேண்டாம் பாக்யா வீட்டுக்கு போ என ராமமூர்த்தி அனுப்பி வைக்கிறார் . எழிலும் வீட்டுக்கு வாங்க அம்மா என பாக்கியாவை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

சமாதானம் செய்த ராமமூர்த்தி

சமாதானம் செய்த ராமமூர்த்தி

வீட்டிற்கு வந்த பாக்யா வாசலிலே கதறி அழுகிறார். நடந்த விஷயங்களை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல அவர்களும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு அதே நேரத்தில் கோபியின் அப்பா பாக்யா வீட்டிற்கு வந்து பாக்யாவை சமாதானம் செய்கிறார்கள் .நீ இப்படித்தான் நடந்து கொண்டு இருப்பாய் என்று நான் நினைத்துதான் வந்தேன். இனியாவிற்கு ஒன்றும் இல்லை. நீ அழ வேண்டாம் என சமாதானம் செய்து கொண்டிருக்கிறார். பிறகு பாக்கியா எல்லாருக்கும் பசிக்கும் வாங்க சாப்பிட போகலாம் என அந்த இடத்தை விட்டு பாக்யா வேகமாக சென்று விடுகிறார்.

இனியாவின் மாஸ்டர் பிளான்

இனியாவின் மாஸ்டர் பிளான்

அடுத்து ராதிகா வீட்டுக்கு வந்த ராமமூர்த்தி அமைதியாக அமர்ந்திருக்கிறார். இனியா வந்து, எங்கே சென்றிருந்தீர்கள் தாத்தா என கேட்க பேசாமலே அமைதியாக இருக்கும் போது என் மீது கோபமாக இருக்கீங்களா? தாத்தா என கேட்க, உனக்கு அடிபட்டு இருக்குது என தெரிந்ததும் உன்னை பார்த்து விட வேண்டும் என உன்னுடைய அம்மா வெளியே இருந்து அழுது கதறி கூப்பிடுகிறார். நீ வெளியே வந்து ஒரு தடவை பார்த்திருக்கலாம் என கோபத்தோடு பேச, நான் என்ன பண்ண முடியும் தாத்தா, டாடி தான் உள்ள வச்சு லாக் பண்ணிட்டாரு என சொல்ல நீ கதவை தட்டி இருந்தால் நான் கதவை திறந்து விட்டிருப்பேன் என்று சொல்ல ,நான் அம்மாகிட்ட பேசி இருந்தா டாடி என் மேல கோபப்பட்டு இருப்பாரு ,எனக்கு அம்மாவும் வேணும் டாடியும் வேணும். நான் டாடி சொல்படி நடந்தால் தான் டாடி என்னோடு கிளம்பி நம்ம வீட்டுக்கு வருவார் என்று சொல்கிறார்.

எதிர்பாராத சவால்

எதிர்பாராத சவால்

டைனிங் ஹாலில் அமர்ந்தபடி சமையல் காய்கறிகளை கட் பண்ணி கொண்டு இருந்த ராதிகா இனியா பேசுவதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். மீண்டும் மீண்டும் நான் டேடியை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போவதற்காக தான் அப்படி எல்லாம் நடந்து கொண்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்க, தாத்தா அது எல்லாம் நடக்காத விஷயம் என கூறுகிறார். இல்ல தாத்தா டாடிக்கு நான் ரொம்ப முக்கியம். அதனால கண்டிப்பா நடக்கும். நான் டாடியை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன் என்ன சொல்ல அதிர்ச்சி அடைந்த ராதிகா எங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு அது நடக்காது என கோபமாக சொல்ல, நடக்கும் கண்டிப்பா டாடியை உங்க கிட்ட இருந்து பிரித்து என் வீட்டுக்கு நான் கூட்டிட்டு போவேன் என சவால் விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

English summary
Baakkiyalakshmi comes to Gopi's house and cries to Gopi as she wants to see Baakkiya Iniya in the serial. Gopi stubbornly prevents him from seeing Iniya.Radhika is shocked when she talks to her grandfather about Iniya's master plan of not objecting to Gopi's actions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X