கோபி ராதிகாவை பங்கமாக கலாய்த்து பிரச்சனையை ஏற்படுத்திய ஐஸ்வர்யா.. பாக்கியா எடுத்த முடிவு தான் சிறப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மகா சங்கமத்தில் கோபியை ஐஸ்வர்யாவும் கண்ணனும் பங்கமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

ஹனிமூன் வந்த கோபிக்கு ஐஸ்வர்யா கண்ணன் செய்த செயல் கலவரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

குடும்பத்தோடு குதூகலமாக கவலையே மறந்த பாக்யா சிறப்பான வேலையை செய்திருக்கிறார்.

ஐஸ்வர்யாவின் சூப்பர் பிளான்

ஐஸ்வர்யாவின் சூப்பர் பிளான்

பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் மகா சங்கமத்தில் இன்றைய எபிசோட்டில், இன்று ஒரு நாள் மட்டும் இதே அறையில் இருந்து அவார்ட் ஃபங்ஷன் முடிந்ததும் நாம் செல்லலாம் என்று கோபி ராதிகாவிடம் சமாதானம் செய்து கொண்டிருக்கிறார். ராதிகாவும் ஒரு வழியாக சமாதானம் ஆகிவிட்டார். அதே நேரத்தில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் இரவு நேரத்தில் ஹாயாக வெளியே சுற்றி வருகின்றனர். அப்போது இதுதான் கோபி இருக்கும் அறை என்று கண்ணன் கூறுகிறார். நான் இந்த அறையின் கதவை உடைத்து விடவா? என்று கடும் கோபத்தில் ஐஸ்வர்யா கூறுகிறார். வேண்டாம் கோபியை வேணா ஏதாவது பண்ணுவோம். அறை கதை ஒடைச்சா நாம தான் காசு கொடுக்க வேண்டும் என்று கண்ணன் அறிவுரை கூறுகிறார்.அதனால் கோபியின் அறை கதவைத் தட்டி உள்ளே சென்று ஐஸ்வர்யா இது எங்கள் அறை தானே என்று ஆர்ப்பாட்டத்தை தொடங்கி விடுகிறார்.

குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிட்டாங்க

குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிட்டாங்க

அது போதாது என்று கோபியிடம் இது யார் என்று தெரியாதது போலவே கேட்கிறார். பிறகு ராதிகாவை இதுதான் உங்க புது பொண்டாட்டியா என்று ஐஸ்வர்யா கேட்க, ராதிகா கடும் கோபத்தில் முழித்துக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி நீங்க வெளியே போங்க இங்கே எதற்கு வந்தீங்க? என்று கத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் ஐஸ்வர்யாவும் கண்ணனும் இது எங்கள் ரூம் தானே நீங்கள் எப்படி இங்கு வந்தீங்க? என்று கோபியிடம் கேட்டு கொண்டிருக்கின்றனர். அதோடு ஐஸ்வர்யா வெளியே செல்லும்போது இது நீங்க யாரை தான் கல்யாணம் பண்ணினாலும் பாக்கியா அண்ணி மட்டும் தான் எங்களுக்கு அண்ணி என்ற சொல்லவும், ராதிகா நீ யார் இப்போ இங்க வந்து பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்க? வெளிய போ என்று கத்துகிறார். அதற்குப் பிறகு அப்ப நாங்க ரூம் மாற்றி வந்து விட்டோம் என கண்ணனும் ஐஸ்வர்யாவும் வெளியே வந்து சிரிக்கின்றனர்.

இப்படி வில்லங்கமா பேசலாமா

இப்படி வில்லங்கமா பேசலாமா

அதே நேரத்தில் மீனா ஜீவாவுக்கு போன் செய்து, எப்ப வீட்டுக்கு வருவார் என்று கேட்கிறார். ஜீவா கடையில் ஆள் இல்லை .அதனால் வர லேட் ஆகும் என்று கூறி வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். மீனாவுக்கு பிடித்த கொத்து புரோட்டாவும் ,சிக்கனும் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார். இருவரும் காதல் செய்யும் போது இருந்த நினைவுகளை பேசிக் கொண்டிருக்கின்றனர் .ரொமான்ஸாக ஜீவா ,மீனாவிடம் நெருங்கும் போது கயல் அழுது இவர்களை தொந்தரவு செய்து விடுகிறார். இதனால் கடுப்பான மீனா, கயல் எனக்கு ஒரு மாமியார் என்று கூறுகிறார். அதற்கு ஜீவா எங்க அம்மா உனக்கு கொடுமையா பண்ணுனாங்க? என்று கேட்கிறார். ஐயா விடுடா சாமி என்று மீனா கிளம்பி விடுகிறார். அதே நேரத்தில் முல்லை தங்களுக்கு இன்றும் லாபம் கிடைத்த மகிழ்ச்சியை கதிரோடு பேசிக் கொண்டிருக்கிறார். கதிர் இனி நமக்கு லாபம் தான் கிடைக்கும் என்பது எனக்கு முன்னாடியே தெரியும் என்று கூறுகிறார்.

பாட்டால் ஏற்பட்ட புது பிரச்சனை

பாட்டால் ஏற்பட்ட புது பிரச்சனை

அதற்குப் பிறகு கொடைக்கானலில் பாக்கியலட்சுமி குடும்பத்தினர் அனைவரும் புல்வெளியில் அமர்ந்து ஆட்டம் பாட்டத்தோடு என்ஜாய் செய்து வருகின்றனர். முதலில் எழில் மற்றும் கண்ணன் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து மூர்த்தியும் தனமும் அனைவரின் வற்புறுத்தலால் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். பின்பு மூர்த்தி, ராமமூர்த்தி இன் அம்மாவை போல பேசி பாக்யாவின் மாமியாரை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். அப்போது வெளியே சென்று டீ குடித்துவிட்டு வரலாம் என்று கோபி ராதிகாவை ரூம்மை விட்டு வெளியே அழைத்து வருகிறார். அங்கே இவர்கள் எல்லாரும் வெளியே என்ஜாய் பண்ணிக் கொண்டிருப்பதை பார்த்து ராதிகா அவர்களை வெறுப்பேற்ற வேண்டும் என்று அவர்களோடு வந்து அமர்ந்து கொள்கிறார் .அப்போது பாக்கியா பாட்டு பாடுகிறார். முதலில் அவர் பாடுவது கழுதை கத்துவது போல இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த கோபி, பாக்கியாவின் பாடலை கேட்டு அவரை அறியாமல் கைதட்டி விடுகிறார். இதனால் ராதிகா கோபப்பட்டு சென்று விடுகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிந்து விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+