பாக்கியலட்சுமி சீரியல் எழில் வெளியிட்ட வீடியோ..கடைசியில் இப்படி மிரட்டுவார் என்று எதிர்பார்க்கலையாம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வரும் விஜே விஷால் வெளியிட்ட வீடியோ ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷின் மிரட்டலான காட்சிகளால் அனைவரையும் மிரட்டி இருக்கிறார்.
கடைசியில் தனுஷை பற்றி இவர் இப்படியெல்லாம் பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லையாம்.

அம்மா பிள்ளை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வரும் வீஜே விஷால் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். ஒரு கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வி ஜே விஷால் சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இந்த சீரியலில் இவர் நடிக்கும் போது இருந்ததை விடவும் தற்போது இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். காரணம் இவர் பெண் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விட்டாராம். அம்மா சென்டிமென்டில் இவரை அடிச்சுக்க முடியாது என்று சொல்லும் வகையில் இவர் பர்பாமன்ஸ் இருந்து வருவதாக கூறி வருகின்றனர்.

தொடர்ந்து வரும் ஆசைகள்
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்கு ஆரம்பம் முதலே மோட்டிவேஷன் கொடுத்து உறுதுணையாக இருந்து வருவது எழில் மட்டும்தான். அதனால் இவரை பெண் ரசிகைகள் அதிகமாக ரசித்து வருகின்றனர். தங்கள் வீட்டில் இப்படி ஒரு மகன் இருக்க வேண்டும் என்று இவரை பார்த்து பலரும் கொஞ்சி வருகின்றனர். இவர் வெளியிடங்களுக்கு செல்லும்போது கூட பலர் இவரிடம் இதைத்தான் சொல்லி வருகிறார்களாம். பல நடிகர்கள் விஜேவாக இருந்து நடிகர்களாக வருவார்கள் ஆனால் இவர் மட்டும்தான் நடிகராக அறிமுகம் ஆகி இப்போது விஜேவாக ஆக வேண்டும் என்று ஆசையோடு இருந்து வருகிறார்.

சிறுவயதில் தோன்றிய வலி
காலேஜ் படிக்கும் போதே கல்லூரியில் இவர்தான் ஆங்கரிங் பண்ணுவாராம். இவர் ஸ்கூல் படிக்கும்போது தன்னுடைய ஸ்கூலில் பேசிகிட்டு இருந்தவர்கள் வெளியே போனதும் இவர் மைக்கை எடுத்து பேசி இருக்கிறார். அதற்கு அங்கே இருந்தவர் ஒருவர் இவரை அடித்துவிட்டாராம். அப்போது இருந்தே எப்படியாவது தானும் ஒரு நாள் ஆங்கரிங் செய்ய வேண்டும் என்று இவருடைய மனதில் தோன்றி விட்டதாம். அதனால் தான் கலேஜில் இவர் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். ஆனாலும் இவர் சேனலில் தொகுப்பாளராக இருக்க வேண்டும் என்று ஆசையோடுத்தான் முதல் முதலாக வின் டிவியில் ஆடிஷனில் கலந்து இருக்கிறார். அப்போது இவர் அங்கே இருந்த சூழ்நிலையை பார்த்து பயந்து போய் வந்து விட்டாராம்.

நடிகராக கிடைத்த வாய்ப்பு
அதற்குப் பிறகு வேந்தர் டிவியில் இவர் ஆடிசனுக்கு சென்று அங்கே செலக்ட் ஆகி இருக்கிறார். அங்கே ஒரு சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் போது விஜய் டிவியில் எப்படியாவது தொகுப்பாளராக ஆக வேண்டும் என்று ஆசையோடு இவர், அது இது எது நிகழ்ச்சியில் ஏடியாக இருந்துள்ளாராம். அப்போதுதான் இவருக்கு கல்யாணமாம் கல்யாணம் சீரியல் மூலமாக நடிகராக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதல் சீரியலில் இவர் தன்னுடைய நடிப்பை தொடங்கி இருக்கிறார். அதற்குப் பிறகு அரண்மனைக்கிளி சீரியலில் ஆகாஷ் என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் டான்ஸ் திறமையிலும் பட்டைய கிளப்புவார் என்பது பலருக்கும் தெரியும் தற்போது இவர் நானே வருவேன் தனுஷ் திரைப்படத்திற்கு செம பர்பாமன்ஸ் செய்திருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications