பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சுரேஷ் சக்கரவர்த்தி...இது என்ன புது ட்விஸ்ட்
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தியின் என்ட்ரி ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறது.
மீண்டும் முதலில் இருந்தா?? என்று ஒருசில ரசிகர்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் காலை வேளையில் நடந்த செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமும் டாஸ்க் தான்
ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்கு முன்பு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்ததை விடவும் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் அதிகமாக டாஸ்க் வைத்து ரசிகர்களுக்கு எனர்ஜி கூட்டி இருக்கின்றனர். பஞ்சாயத்துகளும் ஜாலியான பல நிகழ்வுகளும் நடைபெற்று வருவது ரசிகர்களுக்கு நன்றாக இருந்து வருகிறது. ஆனாலும் ஒரு சில நேரங்களில் இங்கே அரைத்த மாவையே அரைக்கின்றனர் என்று ரசிகர்கள் குறைகூறி வருகின்றனர்.

முதல் போட்டியாளர் வெளியேற்றம்
பிக் பாஸ் 5சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தாங்கள் இழந்த பெயரையும், புகழையும் மீண்டும் பெற்றுவிட வேண்டும், ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்று விட வேண்டும் என்பதற்காக இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் காலடி எடுத்து வைத்தனர். இந்த நிலையில் தற்போது முதல் போட்டியாளராக சக்கரவர்த்தி வெளியேறி இருக்கிறார். சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறியதும் அடுத்தநாளே அனிதா நீதி வென்றது என்று கரும்பலகையில் தன்னுடைய கருத்தை பதித்துள்ளார். இது பல்வேறு சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது .

அனிதாவின் கருத்து
இந்த வாரம் அனிதாவின் கருத்தை பற்றி கமல் விசாரிக்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். முதல்வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியின் வெளியேற்றம் ரசிகர்களை அதிகமாக பாதித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு சுவாரசியம் ஏற்படுத்திக் கொண்டிருந்த முதல் போட்டியாளரை வெளியேற்றி விட்டது அனைவருக்கும் எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தாலும், எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்பதுதான் நிகழ்ச்சியின் தாரக மந்திரம். அதனால்தான் இப்படி செய்கிறார்களா?? என்று பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வேக்கப் சாங் டான்ஸ் இன் போது நடந்த நிகழ்வு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

மீண்டும் சுரேஷ் சக்கரவர்த்தி என்ட்ரி
தினமும் பிக் பாஸ் வீட்டிற்குள் காலை எழுந்ததும் ஒரு பாடலைப் போட்டு அதற்கு ஆட்டம் போடுவது போட்டியாளர்களுக்கு கொடுக்கும் டாஸ்க் ஆகவும் புது எனர்ஜியாக இருந்தாலும் இன்று காலையில் ஜித்து ஜில்லாடி பாட்டு ஒலித்தபடி இருக்கும்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ஃபுல் போக்கஸ் கேமரா அங்கே இருந்த ஒரு கட்டவுட் மீது தான் இருந்தது. அது வேறு ஒன்றுமில்லை சுரேஷ் சக்கரவர்த்தியின் கட்டவுட் தான். இவருடைய கட்டவுட்டை இவ்வளவு சூம் பண்ணி பாட்டு போட்டதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனால் மீண்டும் சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் வீட்டிற்குள் வர போகிறாரா?? என்று எதிர்பார்ப்போடு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications