பார்க்கத்தான் பெசன்ட் ரவி அப்படி...ஆனால் நிஜத்தில் வேற மாதிரி... மகளின் குமுறல்
சென்னை: வெளியே கரடு முரடாக தெரிபவர்களெல்லாம் உண்மையில் அப்படி இல்லை என்று பெசன்ட் ரவியின் மகள் தன்னுடைய தந்தையைப் பற்றி கூறியிருக்கிறார்.
Recommended Video
சர்வைர் நிகழ்ச்சியில் பெசன்ட் ரவி கலந்து கொண்டு இருப்பது அவர்களுக்கு மன வருத்தமாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியில் எப்படியும் வெற்றி பெற்று வெற்றியோடு திரும்புவார் என்று ஆசையோடும் காத்திருக்கிறது அவருடைய குடும்பம்.

திறமை அதிகம் தான்
ஜீ தமிழ் டிவியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் உலக அளவில் பிரபலமான இண்டர்நேஷனல் நிகழ்ச்சி ஒன்றை ரியாலிட்டி ஷோ வாக ஒளிபரப்பாக்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின உண்மை முகத்தையும் ரசிகர்கள் நன்றாகவே தெரிந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இதில் கலந்து கொண்ட ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்களாக தான் இருந்து வருகின்றனர். சிலர் நடிகராகவும் சிலர் விளையாட்டு வீரர்களாகவும் இருந்து வருகின்றனர். இவர்களின் மன வலிமையும் உடல் வலிமையும் சோதிக்கும் நிகழ்ச்சியில் யாருக்கும் நான் சளைத்தவரல்ல என்று இதில் போட்டியாளராக அறிமுகமாகியிருக்கும் பெசன்ட் ரவி நிரூபித்து வருகிறார்.

யாருக்கும் சளைத்தவர் அல்ல
இவரை இதுவரைக்கும் சினிமாக்களில் வில்லனாக பார்த்து வந்த ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் முதல் நாளிலிருந்து இவருடைய கேரக்டரை நன்றாக புரிந்து கொண்டு விட்டனர். இந்த நிகழ்ச்சியில் அனைவரை விடவும் வயதில் மூத்தவராக இருந்தாலும் தான் யாருக்கும் சளைத்தவரல்ல என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் முதல் நாள் டாஸ்கில் இவர் கடல்நீரில் நீந்த முடியாமல் தவித்தாலும் அடுத்த டாஸ்கில் தன்னுடைய புத்திக்கூர்மையினால் இவர்களுடைய அணியை ஜெயிக்க வைத்து விட்டார். இது இவருடைய ரசிகர்களுக்கு பெருமையாகத் தான் இருந்து வந்தது.

குடும்பத்தின் மீது அதிகமான பாசம்
தனக்குப் பிடித்தவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிய விஷயமாக தான் தெரியும். அந்த மாதிரி தான் இவர் போட்டியில் செய்யும் செயல்களாக இருந்தாலும் சரி அணியினருடன் சேர்ந்து இவர் செய்யும் வேலைகளாக இருந்தாலும் சரி இவருடைய ரசிகர்கள் அதை பெரியதாக தான் பேசி வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களே அப்படி என்றால் வீட்டில் உள்ளவர்கள் என்ன மாதிரி இருப்பார்கள் என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த நிகழ்ச்சியில் இவர் இருக்கும் போது தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை பற்றி தான் அதிகமாக பேசியிருக்கிறார். அவர்கள் மீது தான் வைத்திருக்கும் பாசத்தை அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருந்தார்.

பாசமான நம்பிக்கை
இந்தநிலையில் பெசன்ட் ரவியை பற்றி போட்டியாளர்கள் ஒருசிலர் தவறாக பேசுவதை அவருடைய மகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அடுத்தவர்கள் நினைப்பது போல அவர் ஒன்றும சாதாரணமானவர் இல்லை என்று உருக்கத்தோடு கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர் மீது மிகுந்த பாசமும் மரியாதையும் எங்களுக்கு இருப்பதற்கு காரணம் அவர் தான். அந்த அளவிற்கு எங்களை வளர்த்திருக்கிறார். அதுவும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளப் போகிறார் என்று சொன்னதுமே எங்களுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. இதற்கு முன்பு எத்தனை மாதங்களாக சூட்டிங் விஷயமாக இவர் வெளியில் தங்கி இருந்தாலும் நாங்கள் போனில் பேசாமல் இருந்ததில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சியில் போனில் பேச முடியாது என்பது எங்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் வெற்றியோடு தன்னுடைய தந்தை திரும்பி வருவார் என்று கூறியிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications