லட்சுமி கேட்ட அடுத்தடுத்த கேள்வி.. கதறி அழுத பாரதி.. கடைசியில் எதிர்பார்க்காத சீரியல் முடிவு
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலில் லக்ஷ்மி இது வரைக்கும் பாரதிக்கு செய்து வந்த உதவிகளை குறித்து தன்னுடைய மனதில் இருக்கும் ஆசைகளையும் பாசத்தையும் பாரதியிடம் வெளிப்படுத்தி காட்டியிருக்கிறார்.
வெண்பாவிற்க்கு கண்ணம்மாவின் ஞாபகமாகவே அவருக்கு மனநிலை சரியில்லாமல் ஆகிவிட்டது என அவருக்கு ஜாமினுக்காக அப்ளை செய்கின்றனர்.
பாரதி ஊர் மக்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க ஊர் மக்கள் அவரை அசிங்கப்படுத்துகின்றனர்.

லட்சுமியின் விளக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஸ்கூலில் ஹேமா பாரதியிடம் கோபமாக பேசிவிட்டு செல்ல, அப்போ நமக்கு க்ளூ கொடுத்தது யார் என யோசித்துக் கொண்டிருக்க, டாக்டர் அப்பா என லட்சுமி குரல் கொடுத்து கிளாஸ் ரூமில் இருந்து வெளியே வருகிறாள். உங்களுக்கு லொகேஷன் அனுப்புனது, ஐ லவ் யூ அப்பான்னு பேப்பர்ல எழுதி தூக்கி போட்டது, சாப்பாடு வச்சது எல்லாமே நான்தான் ஆனால் உங்களுக்கு என் ஞாபகம் வரவே இல்லை.ஏன்? இதை லட்சுமி பண்ணிருக்க மாட்டாளான்னு நீங்க யோசிக்கக்கூட இல்லை, என் மேல உங்களுக்கு பாசமே இல்லையா? என கேட்கிறார் ஹேமா, உங்க கூடவே இருந்ததுனால அவ உங்களை மிஸ் பண்ணலை அவளுக்கு அவ தேடின அம்மா கிடைச்சுட்டாங்க ஆனா எனக்கு நான் தேடுன அப்பா இன்னும் கிடைக்கலை. நான் தான் அம்மாகிட்ட இந்த ஊரை விட்டு போயிடலாமான்னு சொன்னேன். ஆனா சென்னையில் இருந்து கிளம்பும்போது தான் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணினேன் என்று சொல்லி அழுகிறார்.

பாச கண்ணீர்
பாரதி நான் செஞ்சது தப்புதான் ஆனால் உன்னையும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஹேமா என்கூடவே இருந்ததுனால அவள் தான் பண்ணி இருப்பான்னு நினைச்சுட்டேன் என்ன மன்னிச்சிடு என மன்னிப்பு கேட்க, எனக்கு உங்ககிட்ட ஒரு பர்மிஷன் கிடைக்குமா என கேட்க பாரதி என்ன சொல்லு என கேட்க நான் உங்களை ஒரே முறை அப்பானு கூப்பிடட்டுமா என கேட்க, இந்த வார்த்தைக்காக தான் நான் தவம் இருக்கேன் என்று பாரதி சொல்ல அப்பா என கூப்பிட்டு கட்டிப்பிடித்து இருவரும் அழுகின்றனர்.

நீதிபதியின் உத்தரவு
அடுத்ததாக வெண்பாவை கோர்ட்டில் நிறுத்தி எப்ப பார்த்தாலும் கண்ணம்மா கண்ணம்மா என சொல்லி எல்லோரையும் அடிப்பதாக ஜெயில் வார்டன் கோர்ட்டில் சொல்ல, நீதிபதியும் வெண்பா கண்ணுக்கு கண்ணம்மா போல தெரிய, அவரையும் அடிக்கப் போகிறார். இதுதான் அவருடைய நிலைமை இதை கருத்தில் கொண்டு மருத்துவர் சிகிச்சைக்காக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வெண்பா தரப்பு நீதிபதி வாதாட அரசு தரப்பு மருத்துவர் டெஸ்ட் எடுத்து ரிப்போர்ட் சப்மிட் பண்ணுங்க என நீதிபதி உத்தரவிடுகிறார்.

பாரதியின் உண்ணாவிரதம்
அதற்கு பிறகு அன்று பாம்பு கடித்த நபர் பிழைத்து விட்டார் என்று கணபதி சொல்லிக் கொண்டிருக்க, பாரதி எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் இந்த ஊர்காரர்கள் இப்படி ஒரு மனநிலையில் இருக்கிறார்கள். இவர்களுடைய மனதை மாற்ற வேண்டும் பல வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மருத்துவமனையை அரசாங்கத்தை கட்ட வைக்க வேண்டும். அதற்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முடிவு எடுத்து உண்ணாவிரத்தில் உட்கார, ஊர் மக்கள் நாங்கள் இத்தனை வருஷமா கேட்டுகிட்டு இருக்கோம். நாங்க கேட்டு கிடைக்காதது நீ கேட்டதும் கிடைக்கப் போகுதா நாளைக்கு காலையில் நீ இந்த ஊரை விட்டு போய்விடுட வேண்டும் என்று சொல்லிவிட்டு கலைந்து போகின்றனர் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications