சௌந்தர்யா எடுக்கும் முடிவு..பாரதியால் ஊர்க்காரர்களுக்கு கிடைத்த ட்விஸ்ட்.. எதிர்பாராத சீரியல் முடிவு
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி உண்ணாவிரதம் இருப்பதை தெரிந்து கொண்ட சௌந்தர்யா கோபப்படுகிறார்.
பாரதி உண்ணாவிரதம் இருப்பதால் மினிஸ்டர் ஊருக்கு வந்து மருத்துவமனை கட்டித் தருவதாக உறுதியை கூறுகிறார்.
பாரதியின் போராட்டம் கடைசியில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு இருக்கிறது.

சௌந்தர்யாவின் கோபம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், சௌந்தர்யா பாரதிக்கு போன் செய்து நீ சாப்பிடற வரைக்கும் நானும் சாப்பிட மாட்டேன் என சொல்ல பாரதி எனக்கு ஒன்றும் ஆகாது நீங்க சாப்பிடுங்க என கூறி அகிலனை வைத்து அம்மாவை சாப்பிட வைக்கிறார். அதற்குப் பிறகு பாரதி தனியாக உட்கார்ந்து இருக்கிறார். அப்போது லட்சுமி வெளியே வந்து சைகையில் பாரதியிடம் பேச முயற்சி செய்ய, அங்கே வரும் கண்ணம்மா உள்ளே போ என லட்சுமியை அனுப்பி வைத்துவிட்டு கதவை சாத்தி விடுகிறார். அதற்கு பிறகு பாரதி ஒரு மாதிரி இருக்கு என படுக்க அவருடைய உடல்நிலை மோசமடைவதை பார்த்து பதறிப் போகும் கணபதி கண்ணம்மா வீட்டுக்கு ஓடி வந்து கதவை தட்டி சர்க்கரை தண்ணீர் கேட்க தாமரை சக்கரை தண்ணி எடுத்து சென்று பாரதிக்கு கொடுக்க பாரதி அதை தட்டி விடுகிறார்.

ஊர் காரர்களின் வெட்டி பேச்சு
இந்த ஊருக்கு ஹாஸ்பிட்டல் வர்ற வரைக்கும் பச்சை தண்ணி கூட குடிக்க மாட்டேன் என உறுதியாக சொல்லிவிடுகிறார். மறுநாள் காலையில் கோவிலில் ஊர் தலைவர்கள் உட்பட சிலர் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது பாரதிக்கு உடம்பு முடியாமல் டவுன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்க்க போறார்கள். அன்னைக்கு தாமரையின் குழந்தையை அவர் காப்பாற்றியதால் தான் நாம விட்டு வைத்தோம் தாமரையின் குழந்தைக்கு இவ்வளவு நாளாக ஏதோ சத்து குறைவினால் மயக்கம் வருது என நினைத்திருந்தால் இதய பிரச்சனை இருந்திருக்கிறது. ஆனால் அன்று டாக்டர் இல்லை என்றாலும் அந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்துதான் அதனால் தான் அவரை விட்டு வைத்திருக்கிறோம். 15 வயது வருடமாக நாம் போராடி நடக்காதது இந்த பாரதியால் நடந்திடுமா என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஊருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி
அடுத்த நாள் கொஞ்ச நேரத்தில், பாரதி உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு அமைச்சர் உட்பட எல்லோரும் ஊருக்கு வந்து சிஎம் இந்த ஊருக்கு ஹாஸ்பிடல் கட்ட ஒத்துக்கிட்டாரு என சொல்லி அதற்கான ஆர்டரை பாரதி இடம் கொடுக்கின்றனர். பாரதி இதை நான் வாங்கினால் நன்றாக இருக்காது. இந்த ஊர் மக்கள் சார்பாக ஊர் பெரியவர்களின் கைகளில் கொடுங்கள் என்று ஊர் தலைவர் கூப்பிட்டு அவருடைய கையில் அமைச்சரால் கொடுக்க வைக்கிறார். ஊர் மக்கள் அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.

கணபதியின் கேள்வி
பிறகு கணபதி எல்லோரிடமும் இந்த ஊருக்காக நீங்க 15 வருஷமா ஹாஸ்பிடல் வேணும்னு போராடிட்டு இருக்கீங்க, உங்களால முடியாதது பாரதி செஞ்சு காமிச்சுட்டாரு. அவருக்கு நீங்க அவருக்கு நீங்க நன்றி சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் இந்த ஊரை விட்டு போக சொல்லாதீங்க ,என பேசிக் கொண்டிருக்கிறார். இந்த ஊருக்கு மருத்துவமனை வருவதால் பாரதிக்கு எந்த ஒரு தனிப்பட்ட பலனும் கிடையாது. ஆனால் இந்த ஊர் மக்களுக்கு அவர் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். நேற்று இரவு அவருடைய உடல் நிலையில் எவ்வளவு மோசமாக மாறிவிட்டது தெரியுமா? என கேட்கிறார். ஊர்காரர்கள் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications