கோபத்தில் பாரதி செய்த செயல் வினையாக மாறிடுச்சி.. கதறி அழும் சௌந்தர்யா..எதிர்பார்க்காத சீரியல் முடிவு
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் உண்ணாவிரதம் காரணமாக தற்போது மருத்துவமனை கிடைத்து விட்டதால் ஊர் மக்கள் அவரை மன்னித்து ஏற்றுக் கொண்டனர்.
பாரதி ஆசைப்பட்டபடி கண்ணம்மாவின் கையாலே பாரதிக்கு சாப்பாடு கிடைத்துவிட்டது.
பாரதி ஆரம்பத்தில் டைவஸ்க்கு கோர்ட்டில் அப்ளை செய்திருந்ததால் தற்போது கோர்ட்டில் ஆஜராக சம்மன் வந்திருக்கிறது.

மன்னிப்பு கேட்ட பாரதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டை ஆரம்பத்தில் கணபதி பாரதி செய்த உதவியைப் பற்றியும் ஊர் மக்கள் இதுவரைக்கும் ஊரை விட்டு ஒதுக்கி வந்த விஷயம் பற்றிய பேசி, பாரதியை இனி இந்த ஊரில் நாம் எடுக்க வேண்டாம் வாங்க போகலாம் என கூப்பிடுகிறார். பாரதியும் இதுவரைக்கும் நான் உங்களுக்கு ஏதாவது இடைஞ்சலாக இருந்திருந்தால், என்னால் உங்களுக்கு ஏதாவது தொந்தரவு இருந்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என உருக்கமாக பேசுகிறார்.

பாரதியை ஏற்றுக் கொண்ட ஊர்காரர்கள்
இதுக்கு மேல நான் இந்த ஊர்ல இருந்து உங்களுக்கு தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை என சொல்லி கிளம்பும்போது ஊர் பெரியவர்கள் மனம் மாறி பாரதியை எங்க ஊர் பிள்ளையாக தத்து எடுத்துக் கொள்கிறோம் என சொல்லி நாங்கள் இதுவரைக்கும் பாரதியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருந்தோம் இப்போது நாங்களே அதை கேன்சல் செய்கிறோம் எனக்கூறி பாரதிக்கு மாலை போட்டு மரியாதை செய்கின்றனர். மேலும் வந்ததிலிருந்து பட்டினி போட்டு விட்டோம் வாய்க்கு ருசியா யாராவது சமைச்சு போடுங்க என ஊர் தலைவர் சொல்ல பாரதி இந்த வீட்டிலிருந்து சாப்பாடு வந்தால் நல்லா இருக்கும் என கூற கண்ணம்மாவை ஊர் காரர்கள் அனைவரும்
சமைக்க சொல்லுகின்றனர்.

தாலிக்கயிறு
பிறகு தாமரை நாங்க சமைச்சு போடுறோம் என சொல்லி கண்ணம்மாவை கூட்டிக்கொண்டு சென்று சமையல் வேலைகளை பார்த்து பிறகு அனைவருக்கும் சாப்பாடு பரிமாறுகின்றனர். சாப்பிட்ட மகிழ்ச்சியில் பாரதி இருக்கிறார். கண்ணம்மா சாப்பாடு வைக்கும் போது பாரதி கண்ணம்மாவை ரசித்து பார்த்துக் கொண்டே சாப்பிட்டு முடிக்கிறார். பின்பு கண்ணம்மா சாப்பிட்ட இலைகளை எடுக்கும் போது பாரதி தான் சாப்பிட்ட இலைக்கு கீழே தாலி கயிற்றை வைத்து விட்டு சென்றிருக்கிறார். அந்த தாலியை கையில் எடுத்த கண்ணம்மா பாரதி இடம் சென்று தனியாக பேச வேண்டும் என சொல்லுகின்றார்.

கண்ணம்மாவின் ரிவீட்
பாரதியும் கண்ணம்மாவும் பேச வேண்டும் என்பதற்காக கணபதி அவர்களை தனியாக விட்டு விட்டு சென்று விடுகிறார். பின்பு கண்ணம்மா இந்த ஊர்காரர்கள் இத்தனை வருஷமா மருத்துவமனை வேண்டும் என மனு மேல மனு கொடுத்துட்டு இருந்தாங்க, அவங்களால முடியாததை நீங்கள் செய்து காட்டி சவால் விட்ட மாதிரி என் கையால சாப்பாடு செஞ்சு சாப்பிட்டு விட்டீர்கள். அதுக்கு ரொம்ப தேங்க்ஸ் இருந்தாலும் நான் ஏதாவது கைமாறு பண்ணனும் இல்ல ,,என சொல்லி கையில் பேப்பரை கொடுக்கிறார். பாரதியும் நம்மை பிடித்திருக்கிறது என்று சொல்வதற்கு வெட்கப்பட்டு காகிதத்தில் எழுதி தந்திருப்பாராக இருக்கும் என்று படித்துப் பார்க்கிறார்.

விவாகரத்து மனு
அது நீதிமன்ற சமன் பேப்பர் ஏற்கனவே பாரதி விவாகரத்துக்கு கோர்ட்டில் அப்ளை செய்திருந்த நேரத்தில் பாரதியும் கண்ணம்மாவும் ஆறு மாதங்கள் சேர்ந்து வாழ சொல்லி கோட்டில் கூறி இருந்தனர். தற்போது இவர்கள் அதற்குப் பிறகு எந்த ஒரு வாய்தாவிற்கும் ஆஜராகாததால் இப்போது ஆஜராக வேண்டும் என்று மனு கொடுத்திருக்கின்றனர். விவாகரத்து கேசில் வாய்தா மேல வாய்தா போயிடுச்சு நாம ஆஜராக இல்லை இப்போ நம்ம ரெண்டு பேரும் ஆஜராக வேண்டும் என கண்ணம்மா கூற எனக்கு விவாகரத்து வேண்டாம் என பாரதி கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் கண்ணம்மா எனக்கு வேண்டும் என உறுதியாக சொல்லிவிட்டு செல்கிறார்.

பாரதியின் புது ஐடியா
அடுத்ததாக சௌந்தர்யா வீட்டிற்கு சமன் வந்து இருப்பதை நினைத்து வருத்தப்பட்டு அழுது புலம்பி கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் நடந்ததை எல்லாம் சொல்லி பாரதி ஆரம்பத்தில் இருந்ததுக்கும் எப்போது இருப்பதற்கும் இவ்வளவு மாறிவிட்டான். ஆனால் கண்ணம்மா இப்போ பிடிவாதம் பிடிக்கிறாளே என்று புலம்பிக் கொண்டிருக்கும்போது அஞ்சலி கண்ணம்மா பாரதி எனக்கு டைவர்ஸ் வேண்டாம் என்று சொன்னால் கோட்டில் டைவர்ஸ் கொடுக்க மாட்டார்கள் என சௌந்தர்யாவுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் பாரதி என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க, கணபதி எனக்கு கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழணும்னு சொல்லி வாய்தா போட்டுக்கிட்டே போங்க கண்டிப்பாக கண்ணம்மாவுடைய மனசை மாத்திடலாம் என ஐடியா கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications