வெண்பா புது பிளான்..விவாகரத்துக்கு சம்மதம் சொன்ன பாரதி..கண்ணம்மாவின் பதில்.. எதிர்பாராத கடைசி முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி இறுதியாக கண்ணம்மாவிற்கு விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் நீதிமன்றத்தின் மூலமாக விவாகரத்து வழங்கப்படுகிறது.

குழந்தைகளின் விஷயத்தில் பாரதிக்கு நீதிமன்றத்தில் அனுமதி கொடுத்திருக்கின்றனர்.

விவாகரத்து கிடைத்தது

விவாகரத்து கிடைத்தது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் தான் கண்ணம்மாவுக்கு விவாகரத்து கொடுப்பதற்கு மனப்பூர்வமாக சம்மதம் என பாரதி கூறியதை கேட்டு குடும்பத்தினரும் கண்ணம்மாவும் மகிழ்ச்சி அடைகின்றனர். கண்ணம்மா நான் எப்படியும் விவாகரத்து தராமல் வாய்தா கேட்டுக் கொண்டிருப்பார் என்று நினைத்தேன் ஆனால் இப்படி சொல்லிவிட்டார் என்று தனக்குள்ளே புலம்பி கொண்டிருக்கிறார் .பாரதியின் வார்த்தையை கேட்டு சௌந்தர்யா அதிர்ச்சியாகி ஏன் பாரதி இப்படி சொல்லிட்டா என கத்த நீதிபதி சௌந்தர்யாவை திட்டி குடும்பத்தினர் அனைவரையும் வெளியே இருக்க சொல்லி பாரதி மற்றும் கண்ணம்மாவிடம் பேசுகின்றனர். இருவரும் தங்களது முடிவில் உறுதியாக இருக்க இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து வழங்கப்படுகிறது.

அதிகரிக்கும் காதல்

அதிகரிக்கும் காதல்

பாரதி நான் கண்ணம்மா ஆசைப்பட்ட மாதிரி விவாகரத்து கொடுத்து விட்டேன் ஆனால் என்னுடைய குழந்தைகளை நான் பார்க்க வேண்டும் என்று அனுமதி வாங்கி தர கேட்க முதலில் மறுத்த கண்ணம்மா பிறகு நீதிபதி சனி மற்றும் ஞாயிறு நாட்களில் பாரதி குழந்தைகளை சந்தித்துக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கின்றனர். பின்பு வெளியே வந்து பாரதியிடம் கண்ணம்மா நன்றி கூறுகிறார். நான் எப்படியும் நீங்கள் எனக்கு அனுமதி தர மாட்டீர்கள் என்று நினைத்தேன் என சொல்ல நான் உன்னை என்னோடு கட்டாயப்படுத்தி வாழவைக்க வேண்டும் என்று விரும்பவில்லை. நான் உன்னை அதிகமாக காதலிக்கிறேன் அதனால் நீ என்னுடைய மனதை புரிந்து கொள்வாய் என்று நான் நினைக்கிறேன் கூறி தன்னுடைய காதலை வெளிப்படுத்துகிறார்.

பாரதியின் நம்பிக்கை

பாரதியின் நம்பிக்கை

அடுத்ததாக சௌந்தர்யா பாரதியிடம் புலம்பி கொண்டிருக்கிறார். எதற்காக பாரதி இப்படி செய்தாய் என்று கேட்க கண்ணம்மா சந்தோஷமாக இருக்க வேண்டும் நான் அவளை எவ்வளவோ கொடுமைப்படுத்தி விட்டேன், கஷ்டப்படுத்தி என்னால் அழுதுவிட்டால். இப்போது அவள் என்னிடம் கேட்பது விவாகரத்து தான் அதனால் அவள் ஆசைப்பட்டியது அவளுக்கு கொடுத்திருக்கிறேன். ஆனால் அவளை என்னால் மறக்கவும் முடியாது சனி மற்றும் ஞாயிறு நாட்களில் குழந்தைகள் நம்மோடு தான் இருக்கும் நாட்கள் செல்ல செல்ல கண்ணம்மாவும் மனதை மாறி விடுவாள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று பாரதி கூறிக் கொண்டிருக்கிறார்.

ஹேமாவின் எதிர்பார்க்காத பதில்

ஹேமாவின் எதிர்பார்க்காத பதில்

அப்போது கண்ணம்மா அங்கே வர சௌந்தர்யா கண்ணம்மாவிடமும் அழுது கொண்டிருக்கிறார். கண்ணம்மா சௌந்தர்யாவுக்கு ஆறுதல் கூறிவிட்டு என்னுடைய வாழ்க்கையை இனி நான் வாழ போகிறேன் என்று கூறிவிட்டு கிளம்புகிறார். பின்பு வீட்டிற்கு வந்து நடந்த விஷயங்களை சொல்ல தாமரை நிஜமாகவே விவாகரத்து பாரதி தந்துவிட்டாரா? என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்க இதைப்பற்றியே இனி பேசாதீர்கள் என்று கண்ணம்மா கூறி விடுகிறார். குழந்தைகள் இருவரும் சனி ஞாயிறுகளில் பாரதியோடு இருந்து கொள்ளலாம் என்று கூற லட்சுமி சந்தோஷப்படுகிறார். ஆனால் நாங்கள் விருப்பப்பட்டால் தானே அவரோடு போக முடியும் நானும் சரி லட்சுமி சரி அதை விரும்ப மாட்டோம் என கூற லட்சுமி சோகமாகிறார். பின்பு அனைவரும் வெளியே செல்ல கண்ணம்மா யோசித்தபடி இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+