ஆபத்தான நிலையில் பாரதி..கடைசி நேரத்தில் கண்ணம்மா மற்றும் ஹேமாவின் மன மாற்றம்.. எதிர்பார்க்காத முடிவு
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலில் தலையில் அடிபட்ட பாரதி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.
பாரதியை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு பாரதியின் மொத்த குடும்பமும் வந்திருக்கிறது.
கண்ணம்மா மருத்துவமனைக்கு வராததை தெரிந்து பாரதியின் குடும்பத்தினர் கேள்வி எழுப்புகின்றனர்.
கோபத்தில் இருந்த ஹேமாவும் பாரதியின் மனதை புரிந்து கொண்டு பாரதியை பார்க்க ஆசைப்படுகிறார்.

டாக்டர் சொன்ன வார்த்தை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று எபிசோட்டில் ஆரம்பத்தில் பாரதியை பார்க்க சௌந்தர்யாவின் குடும்பம் ஹாஸ்பிடலுக்கு வந்த நிலையில் டாக்டர் அவர்களிடம் பாரதிக்கு தலையில் பின் பக்கத்தில் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது அதனால் ரத்தம் போய் இருக்கிறது, மூளைக்கு போகும் நரம்பில் பிளாக் இருக்கு என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். பிறகு அகிலன் கணபதியிடம் கண்ணம்மா அண்ணி வரவில்லையா? என கேட்க பாரதிக்கு அடிபட்டு ஹாஸ்பிடல் தூக்கிட்டு வந்த போது கண்ணம்மா அங்கே தான் இருந்து பாத்துட்டு இருந்தா, ஆனா அவளும் வரல நானும் கூப்பிடல என சொல்கிறார்.

அப்பா பாசம் பற்றி பூஜா சொன்னது
அதே நேரத்தில் கண்ணம்மா வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகும் தூக்கம் வராமல் பாரதியை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அடுத்த நாள் காலையில் ஹேமா தனியாக அமர்ந்து யோசனையில் உட்கார்ந்து இருக்க, அங்கே வரும் பூஜா எங்கப்பா எங்க இருக்காங்க தெரியுமா? என்று கேட்க, அதற்கு ஹேமா வெளிநாட்டில் தானே என்று சொன்னதும், இல்லை எங்கப்பா நான் சின்ன வயசா இருக்கும்போதே இறந்துட்டாரு. எனக்கு என் அப்பாவோட பாசம் கிடைக்கலை. ஆனா உனக்கு அப்பா இருந்தும் அவர் உன்கிட்ட நெருங்கி வரும்போது நீ அவரை புரிஞ்சுக்காம தள்ளி தள்ளி போற என சொல்கிறார். பிறகு லட்சுமியும் இதுக்கு மேல அப்பாவோட பாசத்தை பத்தி உனக்கு எடுத்து சொல்ல முடியாது. இதுக்கு மேலேயும் நீ கோபமா இருந்தா இருந்துக்கோ என சொல்லி அங்கிருந்து கிளம்பி செல்கின்றனர்.

மனம் மாறிய ஹேமா
பிறகு லட்சுமி கண்ணம்மாவிடம் சென்று எனக்கு அப்பாவை பாக்கணும் போல இருக்கு, அவர் ஹாஸ்பிட்டலில் இருப்பதால் தயவு செய்து என்னை அங்க கூட்டிட்டு போமா, இல்லன்னா நீ கூட்டிட்டு போகவில்லை என்றாலும் பரவாயில்லை, தாத்தாவையோ இல்ல பெரியம்மாவையோ கூட்டிட்டு போக சொல்லுமா என கூறுகிறார். பிறகு ஹேமாவும் வந்து எனக்கு டாடியை பாக்கணும் போல இருக்கு, இப்ப அவர் ஹாஸ்பிடல் இருக்காருன்னு நினைக்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. தயவு செய்து டேடியை பார்க்க கூட்டிட்டு போங்க என சொல்ல கண்ணம்மா சரி போகலாம் என கூறுகிறார்.

கடவுளிடம் வேண்டுகோள்
கண்ணம்மா ஹாஸ்பிடல் செல்வதற்கு சரி என்று சொன்னதும் தாமரை நானும் வருகிறேன் என சொல்ல நான்கு பேரும் ஹாஸ்பிடலுக்கு கிளம்புகின்றனர். அப்போது கோவிலில் பூஜை நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கோவிலுக்கு போயிட்டு போகலாம் என சொல்ல, எல்லோரும் கோவிலுக்கு சென்று பாரதி பெயரில் அர்ச்சனை செய்து ஹாஸ்பிடலுக்கு கிளம்புகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications