மனம் மாறி கண்கலங்கும் கண்ணம்மா.. கண்விழித்ததும் பாரதி கொடுத்த அதிர்ச்சி.. இனி நடக்கப் போவது இதுதான்!
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியின் தலையில் அடிபட்டதால் பழசை எல்லாம் மறந்து விட்டார்.
பாரதியின் மீது தனக்கு கோபத்தை எல்லாம் கண்ணம்மா மறந்துவிட்டு பாரதியை பார்க்க மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.
பாரதிக்காக கோவிலில் கண்ணம்மா வேண்டிக் கொண்டிருக்கிறார்.
இதுவரைக்கும் கோபத்தில் இருந்த ஹேமாவும் பாரதியின் மீது பாசத்தை காட்ட தொடங்கி இருக்கிறார்.

மருத்துவமனைக்கு வந்த ஹேமா, லட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசொட்டில் ஹேமா லட்சுமி என இருவரும் ஓடி வந்து சௌந்தர்யாவிடம் டாடி எப்படி இருக்காரு என கேட்க சௌந்தர்யா கண்கலங்கி அழுகிறார். ஏற்கனவே லட்சுமி மற்றும் என்னோடு பேசிவிட்டார் என்று ரொம்பவே சந்தோஷத்தோடு இருந்த பாரதி இப்போ ஹேமாவும் புரிந்து கொண்டு மீண்டும் வந்து விட்டால் என்பதை தெரிந்து கொண்டாலே ரொம்பவே சந்தோஷப்படுவார். அவனுக்கு சீக்கிரமாக சரியாகிவிடும் என்று கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது எல்லோரும் பாரதியை பார்க்க சென்று உள்ளே சென்றதும் ஹேமா லட்சுமி என இருவரும் பாரதி டாடி எழுந்திருங்க என சொல்லி எழுப்ப முயற்சி செய்ய பாரதி கண் விழிக்காமல் இருக்கிறார்.

மறுக்கும் கண்ணம்மா
பிறகு இருவரும் கோவிலில் இருந்து கொண்டு வந்த பிரசாதத்தை நெற்றியில் வைத்து விடுகின்றனர். சௌந்தர்யா கண்ணம்மாவை விபுதி வைக்க சொல்ல கண்ணம்மா, மறுப்பு தெரிவித்து விடுகிறார். பின்பு டாக்டர் பாரதியின் நிலை குறித்து கேட்க இன்னும் அவர் அபாய கட்டத்தில் தான் இருக்கிறார். எங்களால் முடிந்த பெஸ்ட் ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கிறோம். நியூமராலஜி டாக்டர் தான் வர வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் என்று கூறுகின்றனர்.

அப்படியெல்லாம் இல்லையாம்
பிறகு கண்ணம்மா குழந்தைகளை கூட்டிக்கொண்டு அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பி விடுகிறார். பிறகு தனியாக ஒரு இடத்தில் கண்ணம்மா அமர்ந்து கண்கலங்க தாமரை அங்கு வந்து பாரதி மேல உனக்கு இன்னமும் காதல் இருக்கு புருஷனுக்கு ஒன்னு என்றால் உன் உடம்பு துடிக்குது என்று சொல்ல, கண்ணம்மா அப்படியெல்லாம் எதுவும் கிடையாது, இருந்தாலும் அவருடைய நிலைமையை நினைத்து வருத்தமாக இருக்கிறது. அவ்வளவுதான் எனக்கு அவர் மீது வேறு எந்த ஒரு பாசமும் பரிவும் இல்லை என்று கூறுகிறார்.

பாரதி கொடுத்த அதிர்ச்சி
அடுத்த நாள் காலையில் நியூராலஜி டாக்டர் வந்து பாரதியை செக் பண்ணி பார்த்துக் கொண்டிருக்கும்போது பாரதி கண் விழிக்கிறார். அவரிடம் என்னை உங்களுக்கு யார் என்று தெரிகிறதா? நான் உங்களோடு ஒர்க் பண்ணி இருக்கிறேன் என்று டாக்டர் சொல்ல பாரதி தெரியவில்லை என கூறுகிறார். இதனால் அதிர்ச்சியான டாக்டர் குடும்பத்தினரை உள்ளே அழைத்து வாருங்கள் என்று சொல்ல, குடும்பத்தினர் அனைவரும் வந்ததும் இவர்கள் யார் என்று தெரிகிறதா? என கேட்க பாரதி யாருன்னு தெரியலை என சொன்னதும் சௌந்தர்யா, என் பையனுக்கு என்ன ஆச்சு பெற்ற அம்மாவையே தெரியலைன்னு சொல்றானே என அழுது துடிக்கிறார். டாக்டர் எல்லோரையும் வெளியே இருக்க சொல்கிறார். சௌந்தர்யா வெளியே வந்தும் என்ன ஆச்சு நம்ம யாரையுமே தெரியலன்னு சொல்றானே என அழுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை, சிக்கும் விஜயா! மீனாவுக்கு இனி தான் கம்பேக்.. செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications