புதியதாக வரும் கண்ணம்மாவின் அம்மா.. பாரதி செய்யும் கடமைகள்.. கடைசியில் எதிர்பார்க்காத சீரியல் முடிவு
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி, கண்ணம்மாவின் அம்மாவின் நினைவு நாளில் பாரதி திதி கொடுத்து கடமைகளை நிறைவேற்றுகிறார்.
ஊரில் கோவில் பங்க்ஷன் நடைபெறுவதற்கு காப்பு கட்டப்படுகிறது.
ஊர் மக்கள் முன்பு கணபதி நவீன திருவிளையாடல் எனும் நாடகம் நடிக்க இருக்கிறார்.

பாரதியின் புது பிளான்
பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் பாரதி, கண்ணம்மாவின் அம்மாவின் புகைப்படத்தை வைத்து அதற்கு மாலையிட்டு ஊர் பொதுமக்களை அழைத்து வைத்து ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருக்கிறார். கணபதி மைக்கில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கண்ணம்மா குடும்பத்தோடு வெளியே வந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார். கண்ணம்மாவின் மனதை மாற்றி விட வேண்டும் என்று தாமரையும் பாரதியின் பிளான்களுக்கு கண்ணம்மாவின் மனசை மாத்தி ஒத்துழைப்பு கொடுக்கிறார்.

அம்மாவிற்கு அஞ்சலி
கண்ணம்மாவின் அம்மாவின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று பாரதி கூப்பிட முதலில் கண்ணம்மா மறுக்க தாமரை மற்றும் கண்ணம்மாவின் அப்பாவின் வற்புறுத்தனினால் வேண்டாம், வெறுப்பாக கண்ணம்மா அவருடைய அம்மாவின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்பு அடுத்ததாக திதி கொடுக்க வேண்டும் என பாரதி கூற, அதற்கு முடியாது என்று கண்ணம்மா கூற அப்பாவின் வற்புறுத்தலினால் கடைசியில் வருகிறேன் என்று கோபத்தோடு கண்ணம்மா கூறுகிறார்.

அடுத்து அன்னதானம்
அடுத்ததாக தெப்பக்குளம் கரையில் ஐயர் வைத்து கண்ணம்மாவின் அம்மாவின் புகைப்படத்தின் முன்பு திதி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். பாரதி தன்னுடைய மாமியாரின் 32 ஆவது நினைவு நாள் என்று கூறி திதி கொடுக்க அருகிலேயே கண்ணம்மாவை ஐயர் அமர்ந்திருந்து திதி கொடுக்க கூற, கண்ணம்மா அனைவரின் வற்புறுத்தலினால் திதி கொடுக்கிறார். பின்பு கண்ணம்மா மற்றும் பாரதி இருவரும் சேர்ந்து ஊர் மக்களுக்கு அன்னதானம் வழங்கப் போவதாக கணபதி கூற, கண்ணம்மா அதுவும் கொடுக்க முடியாது என்று கூற அனைவரும் கண்ணம்மாவை மீண்டும் வற்புறுத்துகின்றனர். அனைவரும் அன்னதானத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கணபதி ஆட்டோவில் ஊர் முழுக்க கூறுகிறார்.

விடாம துறத்துறாங்களே
பின்பு இரவு வீட்டு முற்றத்தில் பாரதி கணபதி மற்றும் லட்சுமி மூவரும் விளையாடு கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே வரும் ராட்டினத்தை பார்த்து லட்சுமி இதில் சுற்ற வேண்டும் எனக் கூற பாரதி அதில் சுற்ற வைக்கிறார். பின்பு அங்கே இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கண்ணம்மா மற்றும் ஹேமாவிடம் வேறு யாரும் வந்து சுற்றுறது என்றால் எனக்கு ஓகே தான். என்னிடம் வந்து லவ் யூ டாடி என்று ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதும், அதுதான் கண்டிஷன் என சொல்ல ஹேமா எனக்கு ராட்டினமே பிடிக்காது எனக்கு அதில் உட்கார்ந்தாலே தலை சுற்றும் என கோபத்தோடு பேசிக்கொண்டு வீட்டிற்குள் செல்கிறார். பின்பு ஒரு மேடை அமைத்து அதில் நவீன திருவிளையாடல் எனும் குடும்ப நாடகம் நடைபெற இருக்கிறது என்று கணபதி மைக்கில் பேசிக் கொண்டிருக்கிறார். அனைவரும் கைத்தட்டி பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது நடிகைகள் எப்போது வருவார்கள் என மக்கள் கேட்க, எல்லோரும் மேட்கப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கணபதி கூறி சமாளிக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications