நெஞ்சில தான் தூங்குவேன்..தனியா தான் வாழனும் என்பது தலை எழுத்து போல..மனதை உருக வைத்த பாவனி
சென்னை: நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று சிலர் சொல்லுவார்கள், ஆனால், பல மாற்றங்கள் வாழ்க்கையில் பெரிய வலியை கொடுத்து விடும்.
Recommended Video
சிரித்த முகமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் பாவனியின் வாழ்க்கையில் இவ்வளவு மன வேதனையா என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
இவருக்கு மட்டுமல்ல இவருடைய வாழ்க்கையில் நடந்த மாதிரி எந்த பெண்ணோட வாழ்க்கையிலும் நடந்து விடக்கூடாது என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்
தனக்கு மனதுக்கு பிடித்தவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றுதான் அனைவருமே விரும்புவர். அதுபோலத்தான் ரசிகர்கள் பலருடைய மனதினை கொள்ளை கொண்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பாவனி ரெட்டி முதல் முறையாக தன்னுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றி மனம் திறந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். இவருடைய பேச்சை கேட்டதும் ரசிகர்கள் பலர் இவருக்கு ஆதரவாக ஹாஸ்டெக் ட்ரெண்டு செய்து வருகின்றனர். என்னதான் ரசிகர்களின் ஆதரவு இருந்தாலும் மன தைரியத்தால் மட்டும் தான் இவர் இந்த அளவிற்கு வாழ்க்கையில் உயர்ந்து கொண்டிருக்கிறார்.

காதல் திருமணம்
தன்னுடைய இளமைக் காலத்தில் அனைவருக்கும் காதல் வருவது சகஜம் தான். அந்த மாதிரி தான் இவருடைய இளமை காலத்திலும் காதல் வந்திருக்கிறது. அழகு மற்றும் அன்பை பார்த்து இவர் தனது காதல் கணவரை காதலித்து இருக்கிறார். இவர்கள் இருவரும் மனமொத்து போனதை தொடர்ந்து வீட்டில் பேசியதும் வீட்டில் ஒத்துக் கொள்ளாததால் வீட்டை விட்டு வெளியேறி தனியாக நான்கு வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் நாளுக்கு நாள் தங்களுடைய காதல் வளர்ந்து கொண்டு இருந்ததால் தான் இவர்கள் முறைப்படி திருமணத்தையும் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுக்கின்றனர்.

முதல் இழப்பு
ஆரம்பத்தில் எதிர்த்த பாவனி ரெட்டியின் பெற்றோர்கள் பின்பு மெல்ல மெல்ல இவரிடம் பேச தொடங்கி இருக்கின்றனர். இருவீட்டார் முன்னிலையில் மிகவும் பிரம்மாண்டமாக தங்களது திருமணத்தை முடித்து, ஆயிரம் கனவுகளோடு திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைத்த இவர்களுக்கு வாழ்க்கையில் முதல் மறக்க முடியாத நினைவாக இவர் கருவுற்றிருக்கிறார். அந்த சந்தோஷமான செய்திக்காக சீரியலில் இருந்து ஒதுங்கி விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்தக்குழந்தை இவரிடம் இல்லாமல் போய்விட்டது. அதுவும் நன்மைக்கே சரி கொஞ்ச நாள் கழிச்சு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று மீண்டும் தனது வேலையில் கவனத்தைச் செலுத்திய இவருக்கு பெரிய ஒரு இழப்பு ஏற்படும் என்பது அப்போது தெரியவில்லை.

சிறிய பிரச்சனை
எப்போதும் இல்லாத வகையில் இவருக்கும் இவருடைய கணவருக்கும் ஏற்பட்ட சிறு பிரச்சனையின் காரணமாக அவர் இவரை விட்டு மட்டுமல்லாமல் மண்ணுலகை விட்டும் பிரிந்து செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பே இவருடைய வாழ்க்கையே முடிந்து விட்டது. இந்த குழப்பமான சூழ்நிலையில் அடுத்த கட்டத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாத நேரத்தில் இவருடைய குடும்பத்தில் இருந்து எந்த ஆதரவும் இல்லாமல் தான் இருந்திருக்கிறார். ஆனால் இவருடைய கணவரின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் இவருக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர்.

கனவுகள் சிதைந்து போய்விட்டது
தன்னுடைய காதல் கணவருக்காக தன்னுடைய தாய், தந்தை மற்றும் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியே வந்த இவரை இவருடைய கணவர் ஒரேடியாக விட்டு செல்வார் என்று அவர் துளி கூட நினைக்கவில்லை. ஆயிரம் கனவுகளோடு சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று அவருடைய இழப்பு இவருக்கு பெருமளவில் சோகத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவருடைய இறப்பிற்கு காரணம் இவர்தான் என்று பலர் கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருப்பதும் இவருக்கும் மேலும் வேதனையாகத்தான் இருந்து கொண்டிருந்தது.

ஆறுதல் கொடுத்த மாமியார்
இந்த நேரத்தில் இவர் எப்போதுமே தன்னுடைய கணவரின் நெஞ்சில் தான் தலை வைத்து தூங்குவாராம்.அதை, அவருடைய மாமியார் இவரிடம் இனி நீ எப்படி இருக்க போற என்று இவரிடம் கேட்டதும் மறக்கவே முடியாது என்று கண்ணீர் ததும்ப கூறியிருக்கிறார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய ரசிகர்களுக்கும் அவர்களை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டதாம். அதுமட்டுமல்லாமல் கணவரின் இறப்புக்குப் பிறகும் இவருடைய உறவினர் ஒருவருடன் இவருக்கு இரண்டாவது திருமணம் என்ற கூறியிருந்த நிலையில் அதுவும் நிறைவேறாமல் போய்விட்டது. இதனால் இவர், கடைசி வரைக்கும் தனியாகத்தான் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறது போல என வேதனையின் உச்சத்தில் பேசியிருப்பது












Click it and Unblock the Notifications