அசீம் பேசிய "அந்த”வார்த்தை செருப்பை கழட்டிய ஆயிஷா.. அனைவர் மத்தியிலும் ஷிவின் செய்த சிறப்பான செயல்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரிசைப்படுத்துதல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் ஆயிஷா மற்றும் அசீம் இடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது.
ஆயிஷாவை அசீம் வாடி, போடி என்று ஒருமையில் அழைத்து இருக்கிறார். அதனால் கோபமான ஆயிஷா செருப்பை கழட்டி இருக்கிறார். இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் கலவரம் ஆகி இருக்கிறது.
இருவரும் சண்டை போடும் போது ஒரு சில போட்டியாளர்கள் நடந்து கொண்டது தான் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.

வரிசைப்படுத்துதல் டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் இன்று வரிசைப்படுத்துதல் டாஸ்க் நடைபெற்று வருகிறது.அதில் 13 போட்டியாளர்களுக்கு வரிசையாக நம்பரும் அதற்கான மெடலும் கொடுக்கப்பட்டிருக்கிறது, கதை சொல்லும் டாஸ்க்யில் தேர்வான 8 போட்டியாளர்கள் கலந்து கொள்ள முடியாது. மீதம் இருக்கும் போட்டியாளர்கள் மட்டும்தான் இந்த போட்டியில் கலந்து கொள்ள படுகிறார்கள். இதுபோல பன்னிரண்டாவது மற்றும் பதிமூன்றாவது இடத்தில் இருக்கும் போட்டியாளர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று விதி இருக்கிறது.

அசீம் குற்றச்சாட்டு
Vஇதில் போட்டியாளர்கள் பலரும் தங்களுக்கு பேவரைட் இடத்தில் தேர்வு செய்து அந்த இடத்தில் நின்று விட்டனர். அதில் ஆறாவது மற்றும் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் போட்டியாளர்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு தகுதியான போட்டியாளர்கள் இல்லை என்று அசீம் கூறுகிறார். ஆறாவது இடத்தில் விக்ரம் மற்றும் ஒன்பதாவது இடத்தில் ஆயிஷா இருக்கிறார் .அதனால் ஆயிஷா நான் என்ன தகுதி இல்லாதவர் என்று கேட்கும்போது, நீ தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார். எனக்கு உடல்நிலை சரியில்லை அதனால் தான் நான் தூங்கிக் கொண்டிருந்தேன் என்று ஆயிஷாவும் பதில் கூறுகிறார்.

செருப்பை கழட்டிய ஆயிஷா
இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் கோபத்தில் ஆயிஷாவை அசீம் வாடி போடி என்று திட்டுகிறார்.இதனால் கடுப்பான ஆயிஷா பலமுறை வாடி, போடி என்று சொல்லாதீர்கள். அப்படி சொன்னதுக்கு நீங்க எனக்கு யாரு? இந்த மாதிரி பேசக்கூடாது என்றெல்லாம் வார்னிங்க் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அடிக்கிற மாதிரி முன்னேறியப்படியே அப்படித்தான் சொல்வேன் நீ என்ன செய்வாய் என்று அசீம் கடும் கோபத்தில் கத்திக் கொண்டிருக்கிறார். இதனால் காண்டான ஆயிஷா தனது காலில் அணிவிருந்த செருப்பை கழற்றி காட்டுகிறார். இதனால் அசீம் மேலும் கடுப்பாகி விட்டார்.

போட்டியாளர்களின் நடவடிக்கை
இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுக் கொண்டிருக்கும்போது போட்டியாளர்கள் பலர் ஆயிஷாவை தான் இப்படி செய்யாதே என்று சொல்கிறார்களே தவிர அசீம் வாடி போடி என்று பேசியது தவறு என்று கூறவில்லை. அசீம் தான் செய்தது சரி என்றும் ஆனால் ஆயிஷா செருப்பை எடுத்தது தான் தவறு என்று தான் வாடி, போடி என்றால் அவள் செருப்பை எடுப்பாளா? என வாதாடி கொண்டிருக்கிறார். அதற்கு பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று நினைத்த போட்டியாளர்கள். "சரி விடு" என்று அசீம் இடம் கூறுகிறார்கள். இதனால் தான் செய்தது சரி என்று அசீம் நினைத்து விட்டார் போல, அதனால் ஓவராக கத்திக் கொண்டிருக்கிறார் .

ஷிவின் செய்த சிறப்பான செயல்
அப்போது அங்கே ஷிவின் முன்பு முகத்துக்கு நேராக, நீங்கள் பேசியது தவறு, நீங்கள் தான் முதலில் வாடி, போடி என்று மரியாதை இல்லாமல் பேசினீர்கள். நீங்கள் செய்தால் சரியா? என்று முகத்துக்கு நேராக பேசியிருக்கிறார். இந்த சம்பவத்தை பார்க்கும்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ஆண் ஆதிக்கம் தான் தலைவிரித்து ஆடுகிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே நேற்றைய எபிசோடில் தனலட்சுமி மற்றும் அசல் கோளாறு இடையே பிரச்சனை நடைபெற்ற போது கூட அசல் கோளாறு பேசியது தவறு என்று யாரும் சொல்லவில்லை .ஆனால் தனலட்சுமி பேசுவதை தான் எல்லோரும் தடுத்துக் கொண்டிருந்தார்கள். இதை இந்த வார இறுதி நாட்களில் கமல் பேசுவாரா? என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications