கொண்டை முடி சண்டை...அடித்து விளாசிய பிரியங்கா, தாமரை... மிரண்டு போன ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத வகையில் அடிபிடி சண்டை ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது.
டாஸ்க் என்பதில் இப்படி இறங்கி விட்டார்கள் என்று ரசிகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்.
இதை எப்பவோ எதிர்பார்த்தோம் இப்போ தான் செய்கிறார்கள் என்று தாமரை, பிரியங்காவின் செயலுக்கு ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

தொடங்கிய சண்டை சச்சரவு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு டாஸ்க்கும் குதர்க்கமாக போட்டியாளர்களுக்கும், பிரச்சனைகளை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருந்து வருகிறது. அது ஒவ்வொரு சீசனிலும் தொடர்ந்து கொண்டு இருந்தாலும் தற்போதைய சீசனில் போட்டியாளர்கள் வேற லெவல் இறங்கி இருக்கிறார்கள் என்பது நன்றாக தெரிந்து கொள்ள முடிகிறது. ஆரம்பத்தில் இதில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் அதிகமாக இருந்ததால் போட்டியாளர்களுக்கு எப்படியும் சண்டை சச்சரவு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்த்தனர். அது ஆரம்பத்தில் நடை பெறவில்லை என்றாலும் நாட்கள் செல்ல செல்ல ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறி வருகிறது.

டாஸ்க்குகாக இப்படியா??
டாஸ்க் விஷயத்தில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருப்போம் என்று போட்டியாளர்கள் அடிக்கடி நிரூபித்து வருகிறார்கள். டாஸ்க்கு முடிந்ததும் போட்டியாளர்கள் ஒன்று கூடி குலாவி கொள்வதும் டாஸ்க்கில் அடித்துக் கொள்வதும் புதியது அல்ல, என்றாலும் இந்த டாஸ்க்கில் நிஜத்தில் போட்டியாளர்கள் அடித்துப் பிடித்துக் கொள்வதை பார்க்கும்போது இது தர லோக்கலாக இறங்கி விட்டார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அடிபிடி சண்டை
இதுவரைக்கும் உள்ள சீசன்களில் எதிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் இரண்டு பெண் போட்டியாளர்கள் கொண்டை முடி சண்டை போட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே இந்த சீசனில் பொருட்களை உடைத்து அக்ஷரா பல நேரங்களில் கோபத்தை காட்டி இருந்தாலும் எதிரில் இருந்த போட்டியாளர்களை யாரும் அடிக்கவில்லை. ஆனால் தற்போது தாமரையும் பிரியங்காவும் ஆக்ரோஷமாக தாக்கி கொள்கிறார்கள். இவர்கள் இருவரின் சண்டையை பார்க்கும்போது இது டாஸ்க்காக இருக்கிறதா??அல்லது மனதில் இருக்கும் பகையை தீர்த்துக் கொள்கிறார்களா?? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்.
Recommended Video

பிரியங்கா, தாமரையின் சண்டை
ஏற்கனவே பல பிரச்சனைகளில் கமல் தலை விட்டு சரியாக தீர்வு காணாததால் தான் இந்த மாதிரி கொண்டைமுடி சண்டை வரைக்கும் சென்றிருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். தாங்கள் எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் செய்யும் செயலைப் பார்த்து பலர் இவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்படுமா என்று ஆர்வத்தோடு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இவர்கள் சண்டை போடுவதை பார்த்ததும் கிராமத்தில் குழாயடியில் நடக்கும் சண்டைகளை பார்த்து நன்றாக தேறி இருக்கிறார்கள் என்பது உலகுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார்கள் பிரியங்காவும், தாமரையும் என்று பலர் கூறி வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications