பிக் பாஸ் கிராண்ட் பினாலே :உள்ளே கிடைத்த அறிவால் வெளியே தைரியம் அதிகமாயிடுச்சி...உறுகிய இசைவாணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போது பிக் பாஸ் கிராண்ட் பினாலே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது இசைவாணி தன்னுடைய அனுபவங்களை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

பிக்பாஸ்க்கு முன்பு தன்னுடைய வாழ்க்கை இருந்ததற்கும் தற்போது இருப்பதற்கும் உள்ள வித்தியாசங்கள் அதிகமாம்.

தொடங்கிய கிராண்ட் பினாலே

தொடங்கிய கிராண்ட் பினாலே

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனின் கிராண்ட் பினாலே இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகியிருந்த போட்டியாளர்கள் நிகழ்ச்சியை விட்டு எலிமினேஷன் ஆகி வெளியே சென்ற பிறகு மீண்டும் உள்ளே அழைக்கப்பட்டு இருந்தனர். அதில் ஒருவராக இசை வாணியும் வந்துள்ளார். அவர் தன்னுடைய அனுபவங்களைப் பற்றி கமல் முன்னிலையில் ரசிகர்களிடம் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இசை வாணியின் அறிமுகம்

இசை வாணியின் அறிமுகம்

ஒரு கானா பாடகியாக முதல் ஆளாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் காலடி எடுத்து வைத்த இசைவாணி 50 நாட்கள் கடந்த நிலையில் வெளியேற்றப்பட்டார். இவருடைய எலிமினேஷன் இவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருந்தாலும், வெளியே வந்த பிறகு இவருடைய வாழ்க்கையில் அதிகமான மாற்றம் நடைபெற்று இருக்கிறது. இவருடைய இந்த வயதிற்குள் அதிகமான அனுபவங்களையும் பல பிரச்சனைகளையும் பெறுவதற்கு இந்த நிகழ்ச்சி உறுதுணையாக இருந்துள்ளது என்று கூறியுள்ளார்.

கிடைத்த தைரியம்

கிடைத்த தைரியம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னுடைய பாடல் துறையில் மீண்டும் கால் பதிக்க தொடங்கியிருக்கும் இசைவாணி தற்போது ரசிகர்களிடம் அதிகமாக பிரபலமடைந்து வருகிறது. சமீபத்தில் தான் இவருடைய முன்னாள் கணவர் மீது இவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதைத்தான் தற்போது வெளிப்படையாக மேடையில் கூறுகிறாரா?? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இசைவாணி கூறியிருக்கும் போது இவருக்கு கிடைத்த அனுபவத்தால் தான் வெளியே சென்ற பிறகும் இவரால் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ள முடிகிறது என்று கூறியுள்ளார்.

கிடைத்த முன்னேற்றம்

கிடைத்த முன்னேற்றம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலருடைய வாழ்க்கையில் முன்னேற்றமும், வளர்ச்சியும் ஏற்பட்டது போல இசைவாணி என் வாழ்க்கையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது என்று அவர் கூறிய வார்த்தைகள் பலருடைய கைத்தட்டல்களை பெற்றுள்ளது. இருப்பினும் இவர் தன்னுடைய துறையில் தனது திறமையை சிறப்பாக வெளிக்காட்ட இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் உறுதுணையாக இருந்தது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+