இதை சொல்ல நீ யாருன்னு கேட்க தோணும்! கணவரை குறித்து பேசிய ரட்சிதா..! அப்போ இதுதான் பிரச்சனையா?
சென்னை: இப்ப ஆறாவது சீசனில் கலந்து கொண்டிருக்கும் ரட்சிதா தன்னுடைய சொந்த வாழ்க்கையை பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.
நடிகை ரட்சிதாவுக்கு அவருடைய கணவரோடு பிரச்சனை என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் அதற்கான காரணம் தெரியாமல் இருந்தது இன்று அதற்கான விளக்கத்தை ரட்சிதா மகாலட்சுமி கூறியிருக்கிறார்.

முதல் சீரியலில் காதல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலமாக ரட்சிதா மகாலட்சுமி இப்ப வரைக்கும் மீனாட்சி ஆகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்பமான சீரியல் பிரிவோம் சந்திப்போம் சீரியல்தான். இந்த சீரியலில் இவரோடு நடித்த நடிகரான தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முதல் சீரியலில் காதல், எளிமையான திருமணத்தோடு வாழ்க்கையை தொடங்கிய ரட்சிதா ஒரு சில ஆண்டுகளாகவே தன்னுடைய கணவரோடு சேர்ந்து வாழவில்லை என்றும் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை இருப்பதால் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்துள்ளது.

கணவரின் கருத்து
ரட்சிதா நடித்து வந்த சீரியல்கள் எல்லாமே திடீரென முடிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் தனக்கும் தன்னுடைய கணவருக்கும் என்ன பிரச்சனை என்பதை இருவருமே வெளிப்படையாக பேசவில்லை. தினேஷ் கார்த்திக் ஒரு பேட்டியில் தான் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை என்பதால் கூட இருவருக்கும் பிரச்சனை இருக்கலாம் என்று கூறியிருந்தார். அதுபோல ரட்சிதாவும் தன்னுடைய கணவரை குறித்து எந்த ஒரு பதிலையும் கூறாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அம்மா அப்பாவின் நிலைமை
அந்த வீடியோவில் அப்பா அம்மாவை குறித்து ரட்சிதா பேசிக் கொண்டிருக்கிறார். அது அவருடைய அப்பா அம்மாவை மட்டுமல்லாமல் சமூகத்தில் இருக்கும் பொதுவான அனைத்து அப்பா அம்மாகளையும் கூறுவதாக இருக்கிறது. அதில் அம்மா, அப்பா என்பவர்கள் எப்போதுமே எல்லாமே குழந்தைகளுக்கு... குழந்தைகளுக்கு என்று கொடுத்துட்டு கல்யாணம் பண்ணி கொடுத்த பிறகு அவர்களுக்கு என்று ஏதாவது வேணும் என்றால், ஐயோ கல்யாணம் முடிச்சு இவ போயிட்டாலே இனி இவ கிட்ட கேட்கலாமா? வேணாமா? இல்ல..வேணாம்! என்று விட்டுருவாங்க.

ஒருவேளை இருக்குமோ
அப்போ சில பிரச்சனைகளால் நமக்கும் அவங்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது. அந்த ஒரு நிலைமை எல்லாம் ரொம்ப கஷ்டமானது. நான் சம்பாதிக்கிறேன் நான் என் அப்பா அம்மாவுக்கு கொடுக்கிறேன். அதைக் கேட்க நீ யாரு என்று கேட்பதற்கு தோணும். அந்த ஒரு நிலைமை எல்லாம் யாருக்கும் வரக்கூடாது! அது ஒரு மோசமான நிலைமை. அந்த ஒரு நிலைமை எல்லாம் நான் தாண்டி தான் வந்திருக்கிறேன். அதனால் நான் எல்லோரிடமும் சொல்லுவேன் தயவுசெய்து உங்களுக்கு என்று கொஞ்சமாவது வைத்துக் கொள்ளுங்கள். அதுபோல பிள்ளைகளும் அம்மா அப்பாவுக்கு தேவையானதை செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.இதை பார்த்த ரசிகர்கள் ரட்சிதாவின் அம்மா அப்பாவிற்கு உதவி செய்வதில் தான் தினேஷ் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்குமோ? என்று சந்தேகங்களை எழுப்பி இருக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications