பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய போகிறதா? போட்டியாளர்களின் ரகசியமான பேச்சு! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த சீசனோடு நிறுத்தப்படுவதாக சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்கள் ரகசியமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இத்துடன் இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு இனி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்ப வாய்ப்பிருப்பதாக போட்டியாளர்கள் பேசிய கருத்துக்கு பல்வேறு கருத்துக்கள் குவிந்து வருகிறது.

ஆரம்பத்தில் இதை எதிர்பார்க்கலையே
பிக் பாஸ் நிகழ்ச்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்டதும் அதிகமானோர் இதுவெல்லாம் ஒரு நிகழ்ச்சியா? எப்படி இப்படி பிரபலங்களால் 100 நாட்கள் ஒரு வீட்டிற்குள் இருக்க முடியும்? இதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறதுய என்றெல்லாம் பலர் கருத்து கூறி வந்தனர். ஆனால் முதல் சீசன் தொடங்கியதும் இந்த நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் என்னதான் நடக்கிறது என்று பார்க்க தொடங்கிய பலர் இந்த நிகழ்ச்சியின் சுவாரசியமும் போகப் போக பிடித்துப் போகவே பலரும் பார்த்து வந்தனர். முதல் சீசனில் கிடைத்த வெற்றியின் காரணமாகவே தொடர்ந்து இப்போது வரைக்கும் ஆறாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது.

பொதுவாக பலரும் கூறும் கருத்து
ஆனால் போட்டியாளர்கள் முதல் சீசனில் இந்த நிகழ்ச்சி என்றால் என்ன என்பது தெரியாத வகையில் தான் இருந்து வந்தனர். அதனாலே இந்த நிகழ்ச்சியில் இருந்து பலர் எப்படி நடிக்க வேண்டும் என்று தெரியாமல் திணறி வந்தனர். ஆனால் அதற்குப் பிறகு முந்தைய சீசன்களை நன்றாக பார்த்து பழகி விட்டு தான் ஒவ்வொரு போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது நான் இதற்கு முன்பு பிக் பாஸ் பார்த்ததே இல்லை என்று கூட கூறி இருக்கிறார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி ரிவியூ செய்தவராகவும், அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கும் என்பது கூட கருத்து தெரிவித்தவர்களாகவும் போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

யார் வெளியேறுவதற்கு வாய்ப்பு
இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் இரவு அசீம் மற்றும் தனலட்சுமி இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இந்த வாரத்தில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்பது இவருடைய கேள்வியாக இருக்கின்றது. அதில் அசீம் தன்னுடைய மைக்கை கழட்டி வைத்துவிட்டு ஜாடையில் ரச்சிதா செல்வதற்கு வாய்ப்பு இல்லை, அதுபோல விக்ரமன் செல்வதற்கும் வாய்ப்பு இல்லை, ஜனனியும் செல்ல மாட்டாள். கண்டிப்பாக மணிகண்டன் தான் இந்த வாரம் வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காரணம் இதற்கு முன்பு எல்லோரும் ரசிகர்களிடம் நாமினேஷனில் சென்று வந்திருக்கிறார்கள். அவர்களே ரசிகர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள்.

ஒளிபரப்பு நிறுத்தம்
மணிகண்டன் இவர்களை விட குறைவான நாமினேஷனில் சென்று இருப்பதால் அவர்தான் வெளியேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கருத்து கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வந்த அமுதவாணன் இந்த சீசனோடு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தி விடுவார்கள் என்று கூற அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எதனால் இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்க ஆமாம் எனக்கு தகவல்கள் முன்னாடியே கிடைத்தது என்று சொல்ல, தனலட்சுமி அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. விஜய் டிவி பிக் பாஸை விட்டுக் கொடுக்கவே செய்யாது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அது விஜய் டிவிக்கு அதிக அளவில் பாப்புலர் தான். அதனால் அந்த நிகழ்ச்சி எப்படி விட்டுக் கொடுக்கும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். இதை பார்க்கும் ரசிகர்கள் ஏற்கனவே இதே தகவலை வனிதா கூறி இருக்கும் நிலையில் இப்போது போட்டியாளர்களும் கூறி இருப்பதால் இது எது உண்மை பொய் என தெரியவில்லையே என்று பல்வேறு விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications