பிக் பாஸ் தமிழ் 5:ஏற்கனவே கமலுக்காக நான் இதை செய்துள்ளேன்..உண்மையை உடைத்த ராஜு
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் பரிசு பெற்ற மகிழ்ச்சியில் கமல் பற்றி ராஜு கூறியது பலருக்கும் வியப்பை அளித்துள்ளது.
Recommended Video
விஜய் டிவியில் தான் இதற்கு முன்பு செய்த வேலையை கூறி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளார்.

ராஜுவின் முன்னேற்றம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த பின் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது வெற்றி வாகை சூடி இருக்கும் ராஜு இதற்கு முன்பு தான் அடிமட்டத்திலிருந்து முன்னேறி இன்று எந்த அளவிற்கு வளர்ந்துள்ள கதையை சுருக்கமாக ஒரு சில வார்த்தைகளில் பலருடைய மனதையும் கவரும் விதமாக கூறியுள்ளார். விஜய் டிவியில் திரைக்குப்பின்னால் ஆரம்பத்தில் ஒரு டெக்னீசியன் ஆக வேலை செய்து தற்போது ரசிகர்களுக்கு முன்பு தன்னுடைய முகத்தை காட்டி பெரும் புகழையும் பெறுவது என்றால் எளிதான காரியமல்ல என்று ராஜுவின் வார்த்தைகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

திரைக்குப்பின்னால் ஆரம்பிக்கப்பட்ட வேலை
இதற்கு முன்பு ஒளிபரப்பான பிக் பாஸ் நான்கு சீசன்களிலும் கலந்து கொள்வதற்காக ராஜூ ஒவ்வொரு முறையும் முயற்சி எடுத்துக்கொண்டு இருந்தாலும் தற்போது 5 வது சீசனில் தான் அதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் இதற்கு முந்தைய சீசன்களில் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் காட்டப்படும் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் அவர்களுடைய கடந்து வந்த பாதையை இதற்கு முன்பு ராஜுவும் எடிட் செய்யும் வேலையை அனுப்பி இருக்கிறாராம். ஒவ்வொரு சீசனிலும் இவருடைய திரைக்குப் பின்னால் இவருடைய உழைப்பு இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உருக்கமான நன்றிகள்
ராஜு விஜய் டிவியில் எடிட் வேலைகளை செய்யும் வேலையை தான் ஆரம்பத்தில் செய்து கொண்டிருந்தாராம். ஆனால் தற்போது தனக்காக பல பேர் இதேபோல வேலைகளை செய்து வீடியோவை அனுப்பி இருப்பதை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார் .அது மட்டுமல்லாமல் தன்னுடைய நண்பர்களாகவும், தன்னுடைய ஆரம்பகட்ட தொழில் நுட்ப உதவியாளராகவும் இருந்தவர்களுடன் சேர்ந்துதான் இந்த பரிசினை இவர் பெற்றுக் கொள்வதாக நினைத்து வைத்திருந்தாராம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அப்படி ஏதும் செய்ய முடியாததால் அனைவருக்கும் நன்றியை உருக்கமாக கூறியிருக்கிறார்.

உதாரணமாக மாறிய ராஜு
பிக் பாஸ் கிராண்ட் பினாலே மேடையில் ராஜு பேசிய வார்த்தைகள் பலருக்கும் வியப்பை மட்டுமல்லாமல் உத்வேகத்தையும் கொடுத்தது. திறமைக்கு என்றேனும் ஒருநாள் மதிப்பு கிடைக்கும் என்றும், முயற்சி மட்டும் தான் எப்போதும் வேண்டும் அதை விட்டு விடக் கூடாது என்பதற்கு தற்போது ராஜூ ஒரு உதாரணமாக மாறி இருக்கிறார் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications