பிக் பாஸ் 8: நாளைக்கு என்ட்ரியாகும் வைல்டு கார்டு போட்டியாளர்.. இனி தான் குழப்பமே இருக்கு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நாளை வைல்ட் கார்டு போட்டியாளர் ஒருவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் வேறு யாரும் இல்லை நடிகர் அர்னவ் தான். இவர் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆன நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இதை தெரியப்படுத்தி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர்பார்ப்பார்கள் என்று சொல்வது போல சில சம்பவங்கள் எதிர்பார்க்காமல் நடைபெறுகிறது. இந்த சீசன் ஆரம்பிக்கும்போது 18 போட்டியாளர்களோடு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதிலும் அதிகமான போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்கள் தான்.

இதனால் இவர்கள் ஏற்கனவே ரசிகர்களுக்கு பழக்கமானவர்களாக இருக்கும் நிலையில் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் பெரிய அளவில் போட்டியாளர்கள் கண்டன்ட் கொடுக்கவில்லை. இது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்ய வைத்தது. விஜய் சேதுபதி வார இறுதி நாட்களில் போட்டியாளர்களை ரோஸ்ட் செய்தது ஆரம்பத்தில் பாராட்டப்பட்டாலும் போகப்போக விமர்சனத்திற்கு உள்ளானது.
காரணம் போட்டியாளர்களை எதுவும் பேசவிடாமல் விஜய் சேதுபதியே அவர்களை உட்கார சொல்லி விடுகிறார். இதனால் நிகழ்ச்சி பெரிய அளவில் மக்களை ஈர்க்கவில்லை என்ற கருத்து இருந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யம் ஆக்குவதற்காக 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். அவர்களும் பெரிய அளவில் கன்டென்ட் கொடுக்கவில்லை.
அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளராக ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா என்ற நான்கு போட்டியாளர்கள் வெளியேறி இருந்த நிலையில் ஐந்தாவதாக வைல்ட் கார்டில் வந்து இரண்டு வாரங்களே இருந்த ரியாவும் வெளியேற்றப்பட்டு விட்டார்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 50 நாட்களை எட்ட இருக்கும் நிலையில் ஏற்கனவே வெளிய வந்த போட்டியாளர்கள் ஒவ்வொரு சீசனிலும் உள்ளே வருவது வழக்கம். அந்த வரிசையில் இந்த சீசனில் யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்களுக்கு இருந்த நிலையில் ரவீந்தர் வரவேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருந்தது.

ஆனால் ரவீந்தர் இந்த நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதைத் தொடர்ந்து அர்னவ் வந்தால் உள்ளிருக்கும் போட்டியாளர்களிடம் தன்னுடைய இன்னொரு முகத்தை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தான் வைல்ட் கார்டாக விரைவில் வரப்போகிறேன் என்று இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருக்கிறார். நாளை எபிசோட்டில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் அறிமுகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications