ரெட் கார்ட் கொடுத்து ரெக்கார்டு பிரேக் செய்த பிக் பாஸ்! ஆனால் பார்வதி கொடுத்த ரிப்ளே! இது எங்க போய் முடிய போகுதோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இருக்கிறது என்று பெயர் வாங்கி வந்தது. இந்த நிகழ்ச்சி முடிவடை இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இப்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது கடந்த சனிக்கிழமை அன்றைக்கு பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் ஜோடியாக ரெட்கார்ட் கொடுத்து இதுவரைக்கும் நடக்காத சம்பவம் என்று ரெக்கார்டு செய்து இருந்தனர்.
அதாவது இதுவரைக்கும் பிக் பாஸ் வரலாற்றில் எந்த பெண் போட்டியாளருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது கிடையாது. முதல் முறையாக பார்வதிக்கு கொடுக்கப்பட்டது. அதுபோல இதுவரைக்கும் எந்த சீசனிலும் இரண்டு போட்டியாளர்களுக்கு ரெட் கார்டு கொடுத்தது கிடையாது. இதற்கு காரணம் பார்வதியும் மற்றும் கம்ருதீனின் மோசமான விளையாட்டாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு ரெட் கார்ட் கொடுத்து ஆக வேண்டும் என்று சோசியல் மீடியா முழுக்க பெரிய போராட்டமே நடந்தது.

அதை வைத்து டிஆர்பியை இன்க்ரீஸ் பண்ண விஜய் டிவியும் பக்காவா பிளான் போட்டு இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து விட்டனர். இந்த ரெட் கார்ட் வாங்கிய பார்வதி மற்றும் கம்ரூதீன் இருவருக்குமே பெரிய பிரச்சனைதான். இருவருக்கும் 90 நாட்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்ததற்கான சம்பளம் கிடையாது என்று சொல்லப்படுகிறது. அதே போல பிக் பாஸ் ரிலேட்டடான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடையாது.
Bigg Boss : ரெட் கார்டை பார்த்து சாண்ட்ரா காலில் விழுந்த கம்ருதீன்.. திவ்யா கேட்ட கேள்வி! மாஸ் காட்டிய விஜய் சேதுபதி
இத்தனை நாட்கள் இந்த நிகழ்ச்சியில் டப் போட்டியாளராகவும், பரபரப்பை ஏற்படுத்தும் போட்டியாளராகவும் இருந்த பார்வதிக்கு இது பெரிய அதிர்ச்சியான சம்பவம்தான். ஆனால் வெளியே வந்த பார்வதி அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் தன் மீது தவறே இல்லை என்பது போலவே போஸ்ட் போட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் கார் டாஸ்க்கில் சான்ட்ராவை இடித்து மிதித்து வெளியே தள்ளி இருந்தனர். அதோடு ஆபாசமான மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்தி இருந்தனர். இதுதான் அவர்களுக்கு ரெக்கார்ட் கொடுக்க அனைவரையும் கொந்தளிக்க வைத்தது.

ஆனால் இதற்கு முன்பு இதே போல பல போட்டியாளர்கள் செய்திருந்தனர். அப்போது அவர்களுக்கு எல்லோ (மஞ்சள்) கார்டு கொடுத்து இருந்தால் கூட இவர்கள் இந்த அளவிற்கு போயிருக்க மாட்டார்கள் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர். அதை தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பார்வதி இடைவிடாமல் பகிர்ந்து கொண்டே இருக்கிறார். தனக்கு யாரெல்லாம் பாசிட்டிவாக பேசுகிறார்களோ அவர்கள் அனைவருடைய போஸ்ட்களும் பார்வதியின் இன்ஸ்டா போஸ்டில் ட்ரெயின் போல போய்க்கொண்டே இருக்கிறது.
Bigg Boss : 90 நாட்களுக்கு ஒரு பைசா கூட இல்ல.. என் தரப்பு நியாயத்தை கேட்கல! பார்வதியின் வீடியோ!
இதற்கு எண்டே இல்லையா? இவங்க என்னதான் சொல்ல வராங்க? நான் செய்தது தப்பு இல்லை என்று சொல்றாங்களா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். யார் என்ன சொன்னாலும் நான் இப்படித்தான் என்று பார்வதி வெளியே வந்து பிறகும் தன்னுடைய தவறை புரிந்து கொள்ளவில்லையே என்று சிலர் அலுத்துக் கொள்கின்றனர்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications