Bigg Boss: நீலாம்பரி போல செருப்பை காட்டிய சான்ட்ரா.. நேரடியாகவே அசிங்கப்படுத்திய கானா வினோத்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வார தலைவராக கானா வினோத் தேர்வாகி இருக்கிறார். அவர் முன்பு சான்ட்ரா செய்த செயலைப் பார்த்து அவருக்கு கானா வினோத் பதிலடி கொடுத்திருக்கிறார். இதை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
நடிகர் ரஜினி நடித்த படையப்பா படம் வெளியாகி 25 வருடங்களுக்குப் பிறகு இப்போது ரீ ரிலீஸ் ஆகி வசூலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் படையப்பா சம்பவம் நடந்திருக்கிறது. ஏற்கனவே இந்த வீட்டில் கூல் சான்ட்ரா கடந்த சில வாரங்களாகவே அதிகமான நெகட்டிவ் சம்பாதித்து கொண்டிருக்கிறார்.

திவ்யாவை எல்லா இடங்களிலும் குறை சொல்லிக் கொண்ட இருக்க அது அவருக்குத்தான் மைனஸாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனாலும் இது தெரியாத சான்ட்ரா மற்ற போட்டியாளர்களிடமும் தன்னுடைய கோபத்தையும், வெறுப்பையும் காட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் வார இறுதியில் இது பற்றிய விஜய் சேதுபதி விசாரிக்க மாட்டேங்குறார் என்பது ரசிகர்களுக்கு வருத்தமாக இருக்கிறது.
ஒவ்வொரு வாரமும் சான்ட்ரா செய்யும் தவறுகளை மட்டும் பட்டும் படாமல் பூசி மொழுகியது போல பேசிவிட்டு போகிறார். மற்ற யாராவது தப்பு செய்தால் அவர்களை பேசவே விடாமல் உட்காருங்கள் உட்காருங்கள் என்று அதட்டிக் கொண்டிருக்கிறார். இந்த சீசன் தொடங்கி 70 நாட்கள் கடந்து விட்டது ஆனாலும் இந்த சீசனில் தான் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று யூகிக்க முடியாத வகையில் விளையாட்டு போய்க் கொண்டிருக்கிறது.
ஒரு சிலர் கானா வினோத் டைட்டில் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனாலேயே இப்போது விஜய் சேதுபதி கானா வினோத்தை கட்டம் கட்டி அடிக்கிறாரா என்றும் யோசிக்க வைக்கும் அளவிற்கு விஜய் சேதுபதியின் செயல்பாடுகள் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க இந்த வாரத்தில் வீட்டுத் தலையாக கானா வினோத் தான் தேர்வாகி இருக்கிறார்.
சும்மாவே வீட்டு தலையாக இருப்பவர்களை வார இறுதியில் ஏன்டா நாம தலைவரா தேர்வானோம் என்று யோசிக்கிற மாதிரி வார கடைசியில் விஜய் சேதுபதி வறுத்தெடுப்பார். இந்த வாரம் வீட்டு தலையாக இருக்கும் கானா வினோத் உள்ளே சில அதிரடியான சம்பவங்களையும் செய்து கொண்டு இருக்கிறார். அதாவது சில நாட்களாகவே சான்ட்ரா தொடர்ந்து கார்டன் எரியாவிலே இருக்கிறார். இதை பார்த்ததும் இவர் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கானா வினோத் திவ்யாவிடம் சென்று பேசுமாறு அட்வைஸ் கொடுக்கிறார்.
ஆனால் அதற்கு சான்ட்ரா செவி சாய்க்கவே இல்லை. உங்க மேல தப்பு இல்லன்னா நேருக்கு நேர் சென்று பேச என்ன தயக்கம்? கண்ணீரை ஆயுதமாக பயன்படுத்தி ஒரு ஓரமாக உட்கார்ந்து இருந்தால் ஹவுஸ்மென்ட் எல்லாரும் உங்க பின்னாடி வந்து விடமாட்டார்கள். இது கேம் இங்கே இப்படி எல்லாம் நீங்க ஆடிக்கிட்டு இருக்க முடியாது என்று நேரடியாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
ஆனால் அதற்கு சான்ட்ரா கானா வினோத்தை அசிங்கப்படுத்தும் வகையில் அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே தன்னுடைய காலை நீட்டி செருப்பை ஆட்டிக்கொண்டே இருக்கிறார். இதை பார்த்து கடுப்பான வினோத் நீலாம்பரி மாதிரி பண்ணுனா நான் படையப்பா மாதிரி பண்ணுவேன் என்று சான்ட்ரா முன்பு காலுக்கு மேல் கால் போட்டு கெத்தாக அமர்ந்திருக்கிறார். இந்த வீடியோவை கானா வினோத் ரசிகர்கள் படையப்பா பிஜிஎம் போட்டு டிரண்ட் செய்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications