பிக் பாஸ் நிகழ்ச்சியில் முடிவுக்கு வரும் நேரத்தில் சச்சரவு.. மாறி மாறி உண்மையை உளறும் போட்டியாளர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 100 வது நாளுக்கான முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.
இன்றைய ப்ரோமோவில் ஒரு முட்டைக்காக தொடங்கிய சண்டையில் மணிகண்டனும் மகேஸ்வரியும் காரசாரமாக குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர்.
மணிகண்டன் மீண்டும் தன்னுடைய கோபத்தை பிக் பாஸ் வீட்டிற்குள் காட்ட தொடங்கி இருக்கிறார்.

இறுதி கட்டத்தை நோக்கி
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே ஆரம்பத்தில் இருந்து பின்பு ஒவ்வொரு வாரமும் எவிட்டாகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் வந்திருக்கின்றனர். இந்த நிலையில் மீண்டும் ஆரம்பத்தில் இருந்த மாதிரியே பிரச்சனைகள் தொடங்க ஆரம்பித்து இருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் சந்தோஷமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி இருந்தனர். இன்று இறுதி கட்டத்தில் சண்டையோடு முடிவடைந்து இருக்கிறது.

விருந்தினர்களின் வருகை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக பல்வேறு பிரபலங்களும் சிறப்பு விருந்தினர்களும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த வண்ணமாக இருந்தனர். அந்த வகையில் விஜே பிரியங்கா மற்றும் மாகாபா வந்து பிக் பாஸ் போட்டியாளர்களுக்குள் இடையில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்தனர். அவருடைய பிளஸ் மைனஸ்களை கூறி கடைசி வார பைனலிஸ்டாக இருக்கும் போட்டியாளர்களின் மனநிலையை மாற்றி அமைக்கும் விதமாக பல சுவாரசியமான நிகழ்ச்சிகளையும் கருத்துகளையும் பகிர்ந்திருந்தனர்.

பதுக்கல் பொருள்கள்
அந்த வகையில் கடைசியாக பிக் பாஸ் அறிவுரையின்படி யார் யார் இன்னும் எவ்வளவு பொருள்கள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை பிரியங்கா மற்றும் மாகாபா இருவரும் கண்டுபிடித்தனர். அதில் அசீம், கதிர், அமுதவாணனிடம் இருந்த பொருள்கள் அவர்கள் மறைத்து வைத்திருந்ததை பிரியங்கா மாகாபாவும் கண்டுபிடித்து இருந்தனர். அந்த வகையில் மூவரிடமும் அதிகமான முட்டை தட்டுகள், காபி பவுடர் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. அதை வைத்து தான் தற்போது பிரச்சனை தொடங்கியிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியின் முடிவு பகுதியில் தான் ஒரு நாளுக்கு முன்பு முட்டை கேட்ட போது யாருமே தராமல் வைத்திருந்த நிலையில் அதை இத்தனை ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று விக்ரமன் கூறிக் கொண்டிருக்கிறார்.

முட்டை பிரச்சனை
ஏற்கனவே சாந்தி மாஸ்டர் நான் பிக் பாஸ் வீட்டுக்குள் எல்லோருக்கும் முட்டை வேண்டும் என்று பிக் பாஸ் இடம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இத்தனை முட்டைகளை வைத்திருந்தவர்கள் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்று ஆரம்பித்து வைத்தது அவர்தான். அவரை தொடர்ந்து விக்ரமனும் பேச, நான் கூட மணிகண்டனிடம் முட்டை கேட்டேன் என்று சொன்னபோது அருகில் இருந்த மகேஸ்வரி தலையை ஆட்டிக் கொண்டிருப்பதை பார்த்து மணிகண்டன் மகேஸ்வரி நான் இல்லை என்று சொன்னனா நீங்க எதற்கு தலையாட்டி கொண்டு இருக்கீங்க? நீங்கள் இப்படி தலையாட்டினா? எனக்கு கோவம் வரும் என்று சொல்ல, அதற்கு மகேஸ்வரி நான் நீங்க பேசுனதை கேட்டுக் கொண்டுதான் இருந்தேன் என்று சொல்ல வர ,நான் விக்ரமன்னிடம் பேசிக் கொண்டிருக்கும்போது நீங்க யாரு இடையில் பேச என்று கேள்வி எழுப்புகிறார்.

பதனி பதனி
நீங்க என்ன வேணாலும் பேசுவீங்களாம்,ஆனா நாங்க கேட்டுகிட்டு சும்மா இருக்கணுமா? என்று மகேஸ்வரி கேள்வி கேட்க, மணிகண்டன் என்னால ஒண்ணுமே கிழிக்க முடியலை, அதனால வெளியே போயிட்டு இப்ப வந்து உங்களை கிழிச்சு காட்டுறேன்னு இப்ப சீன் போடுறீங்களா? அதான் அடுத்த சீசன் வரப்போகுது இல்ல என்று கோபமாக பேசிய படியே, பதனி பதனி என்று மகேஸ்வரியை கிண்டல் செய்துபடியே கோபத்தோடு நடக்கிறார். இந்த சண்டையை பார்த்து ஜி பி முத்து சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்த பிரமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக மணிகண்டனின் உண்மை முகம் இதுதானா? வெளியே வந்த போது அவ்வளவு நல்லவிதமாக பேசினாரே? ஆனால் இப்போ மீண்டும் பழையபடி ஆரம்பித்து விட்டாரா? பெண் போட்டியாளர்களிடம் மட்டும் மணிகண்டன் பேச முடியுமா? அசீமிடம் பேசுவதற்கு தைரியம் இல்லையா? என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்ப, இன்னொரு தரப்பினர் ஜி பி முத்து நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால் பல்வேறு சண்டைகள் வராமல் பேசி இருப்பேன் என்று சொன்னவர், இப்போ சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று இன்னொரு தரப்பினர் கேள்வி எழுப்ப தற்போதைய பிரமோவுக்கு கருத்துக்கள் குவிந்து வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications