பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்த பிரச்சனைகள்... இந்த வாரம் நீதிமன்றத்தில் ஜெயிக்கப் போவது யாரு!?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி யில் இன்று 44 வது நாளில் நீதிமன்ற டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது.

அடுத்தடுத்து போட்டியாளர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளை பேசி தீர்க்கும் விவாதமாக நீதிமன்றம் டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்களுடைய வாதங்களை தொடங்கி இருக்கின்றனர்.

இந்த முறை நீதிபதியாக ஏடிகே அமர்ந்திருக்கிறார்.

தொடங்கியது புது டாஸ்க்

தொடங்கியது புது டாஸ்க்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் எந்த சீசனிலும் இல்லாத வகையில் ஆரம்பம் முதலே சண்டை சச்சரவுகளும் பிரச்சனைகளும் தலைவிரித்து ஆடியது. எப்போதும் 24 மணி நேர எபிசோடு பார்த்தாலும் அங்கே சண்டைகளும் ,கலவரங்களும் தான் அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது .ஒவ்வொரு வாரமும் கமல் இவர்களுக்கு பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தாலும் கமல் சென்று சிறிது நேரத்திற்குள் இவர்கள் தங்களுடைய வாதங்களில் மீண்டும் புலம்பி கொண்டிருந்தனர். இந்த நிலையில் இதுவரைக்கும் புலம்பிக் கொண்டிருந்தவர்கள் இப்போது நீதிமன்ற டாஸ்க் மூலமாக பிரச்சனைகளை பூதாகரமாக தொடங்கி இருக்கின்றனர்.

ஒருவேளை இருக்குமோ

ஒருவேளை இருக்குமோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 44-வது நாளில் இன்று விக்என்ட் டாஸ்காக தொடங்கப்பட்டிருக்கிறது. பிக் பாஸ் நீதிமன்றம் டாஸ்க் லெட்டரை அசீம் படித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இதற்கு முன்பு அசீம் படிக்கும் டாஸ்க் லெட்டர்கள் எல்லாம் கலவரமாகவும், பூதாகரமாகவும் முடிந்துவிடும். அதனால் இந்த டாஸ்க் எப்படி முடிய போகிறதோ? என்று கமெண்ட்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இது எல்லாருக்கும் தெரிந்ததுதான்

இது எல்லாருக்கும் தெரிந்ததுதான்

ஒவ்வொரு போட்டியாளர்களும் மெயின் டோர் கேமரா வழியாக தங்களுடைய வழக்கை பதிவு செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர் அவருக்கான வழக்கறிஞரை தேர்வு செய்து அவருக்கான வழக்கை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று விதிமுறைகளை அசீம் படித்ததும் போட்டியாளர்கள் அனைவரும் கேமரா முன்பு தங்களுடைய வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர் .இதில் வழக்கம் போல ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே விக்ரமன் மீது அமுதவாணன் புகார் கொடுத்திருக்கிறார் .அதை விசாரிப்பதற்காக அமுதாவாணனின் வக்கீலாக அசீம் ஆஜராகி இருக்கிறார்.

எதிர்பார்க்காத நீதிபதி

எதிர்பார்க்காத நீதிபதி

பிக் பாஸ் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக ஏ டி கே அமர்ந்திருக்கிறார். இந்த நிலையில் அசீம் விக்ரமனிடம் எனது கட்சிக்காரர் அமுதவாணன் அவர்கள் வில்லாக இருந்து ஜனனியை அம்புவாக செயல்படுவதாக நீங்கள் எதை சாட்சியாக வைத்து கூறுகிறீர்கள் என்று கேள்வியை கேட்க, அதற்கு இளவரசியார் ராஜ குருவுக்கு அவமானம் நடக்கும்போது கூட கேட்காமல் ஆனால் அமுதவாணனுக்கு ஒண்ணுமே நடக்கவில்லை அப்போது அமுதவாணனுக்காக வந்து பேசினார்கள் என்று தன் தரப்பு நியாயத்தை விக்ரமன் கூறுகிறார். இந்த ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் இந்த வாரம் பிரச்சனைகளுக்கு மட்டும் அல்லாமல் விறுவிறுப்புக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

பொறுத்திருந்து பார்ப்போம்

பொறுத்திருந்து பார்ப்போம்

அது மட்டும் அல்லாமல் அசீமின் தீவிரமான ரசிகர்கள் அசீம் நூறு சதவீதம் அப்படியே ஒரு வக்கீலாக மாறிவிட்டார் என்று அவரை புகழ்ந்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் அது போல விக்ரமனின் ரசிகர்கள் என்னதான் நீங்கள் பழியை தூக்கிக் கொண்டு வந்தாலும் அதெல்லாம் அசால்டாக அப்படியே சிக்சர் அடித்து விடுவார் என்று விக்ரமன் என்று புகழ் பாடி வருகிறார்கள். இதில் ஒரு சில ரசிகர்கள் ஷிவினுடைய பர்பாமன்சை பார்ப்பதற்காக காத்திருப்பதாகவும் கூறுகின்றனர். இன்னும் சிலர் தனலட்சுமி நேற்றைய எபிசோடில் தனக்கு தான் விளையாடுகிற மாதிரி விளையாட்டை கேட்டார். அதனால் தான் பிக் பாஸ் இன்று இப்படி ஒரு விளையாட்டை கொடுத்திருக்கிறது. இன்று எப்படி விளையாடுகிறார் பார்ப்போம் என்று காத்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+