ஓபன் ஆக முகத்துக்கு மேலே மார்க் போட்ட போட்டியாளர்கள்.. வெளியேறப் போவது இவர் தானா? வெளியான ப்ரோமோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றத்திற்கான நாமினேஷன் தொடங்கி இருக்கிறது.

இந்த முறை யாரும் எதிர்பாக்காத வகையில் ஓபன் நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது. இதில் போட்டியாளர்களின் முகத்தில் மார்க்கு போட்டு தங்களுடைய கருத்தை தெரிவித்து புது பிரச்சனையை துவக்கி இருக்கிறார்கள்.

கடைசி இடத்தில் இருந்த போட்டியாளர்கள்

கடைசி இடத்தில் இருந்த போட்டியாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாரக மந்திரமான எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது இந்த முறை நிருபணமாகி இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்றைய தினம் ஜனனியின் வெளியேற்றம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தனர். கடைசி வரைக்கும் மணிகண்டன் தான் வெளியேற்றப்படுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். வாக்குகளின் அடிப்படையில் ஆரம்பத்தில் இருந்து ஏடிகே மற்றும் மணிகண்டன் கடைசி இடத்தில் இருந்து வந்தார். ஆனால் திடீரென ஏடிகே வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

எதிர்பாராத வெளியேற்றம்

எதிர்பாராத வெளியேற்றம்

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடைசி நேரத்தில் கமல் ஜனனியின் பெயரை சொன்னதும் ரசிகர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி தான் கிடைத்திருக்கிறது. காரணம் வாக்குகளின் அடிப்படையில் ஜனனி மூன்றாவது இடத்தில் தான் இருந்து வந்தார். ஆனால் எதற்காக திடீரென அவரை வெளியேற்றினார்கள் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் ஏற்கனவே சனிக்கிழமை எபிசோடில் நாமினேஷன் செய்வதற்காக அமுதவாணனை இன்பிளன்ஸ் செய்ததற்காக ஜனனிக்கு வார்னிங் கொடுக்கப்பட்டது. அதனாலேயே அவர் வெளியேற்றப்பட்டாரா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

ஓப்பன் நாமினேஷன்

ஓப்பன் நாமினேஷன்

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷன்க்கான நாமினேஷன் நடைபெறுகிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையாக இப்போது மூன்றாவது முறையாக ஓப்பன் நாமினேஷன் நடைபெறுகிறது. அதில் எதற்காக சக போட்டியாளர்களை நாமினேஷன் செய்கிறோம் என்பதை முகத்துக்கு நேராகவே பேசி முகத்துக்கு மேலே ரெட் கலர் பெயின்டால் மார்க் போட்டு தங்களுடைய வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அதில் மணிகண்டன் ரொம்ப நல்லா கேம் விளையாடுறாங்கன்னு நினைக்கிறாங்க ஆனால் அது எனக்கு சுத்தமா பிடிக்கல என ஷிவின் முகத்தில் மார்க் போட, அடுத்ததாக மைனா நந்தினியும் ஷிவின் முகத்தில் மார்க் போட்டு சுறுசுறுப்பாக விளையாடுவது எனக்கு பிடிக்கல என்று காரணத்தை கூறுகிறார்.

அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள்

அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள்

அடுத்ததாக விக்ரமன் தனலட்சுமி ரொம்ப ஒரு அரக்கத்தனமாக விளையாடுகிறார் என்று மார்க் போட அடுத்ததாக ஏடிகே அதே காரணத்தையே தனலட்சுமிக்கு கூறி தனலட்சுமி முகத்தில் மார்க் போட்டு நான் மட்டுமே விளையாட வேண்டும் என்கிற ஒரு ஆட்டிட்யூட் அதனால்தான் இவருக்கு வாக்கு செலுத்துகிறேன் என்று கூறுகிறார். அடுத்ததாக ஷிவின், அசீம் முகத்தில் மார்க் போட்டு தேவையில்லாத இடத்தில் பிரச்சனையை வாண்டதாக பண்ணுவதாக எனக்கு தெரிகிறது என்று மார்க் போடுகிறார். அவரை தொடர்ந்து ரச்சிதா, அசீம் முகத்தில் மார்க் போட்டு இதுவரைக்கும் நீங்க போட்ட சண்டை ஜனியுனா எனக்கு படவே இல்லை என்று கூற மைனா முகத்தில் அமுதவாணர் மார்க் போட்டு சில காரணங்களை கூற அதை மறுத்து உன்கிட்ட ஃபேவரிஸம் இல்லை, ஆனா என்கிட்ட ஃபேவரிஸம் இருக்குன்னு நீ சொல்றியா? எனக்கேட்க்க தப்பா புரிஞ்சுகிட்டு பேசுறேன்னு அமுதவாணன் பேச, நான் தப்பா புரிஞ்சுகிட்டு பேசறேனோ? அல்லது ஃபேவரிட்சமா? என்று கேள்வி எழுப்புகிறார்.

வெளியேறுபவர் இவர்தானா

வெளியேறுபவர் இவர்தானா

காரசாரமாக இந்த நாமினேஷன் நடைபெற்று வருகிறது. இதில் யார் வெளியேறுவார்கள் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தாலும், இப்போதே ரசிகர்கள் பலர் மணி இந்த வாரம் வெளியேறுவதற்கு தயாராக இருக்கவும் என்று கருத்து வெளியிட்டு வருகிறார்கள். அதுபோல ஜஸ்ட் மிஸ் ஆன ஏடிகேயும் மணியும்தான் இந்த வாரத்தில் வெளியேறுவதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாக பலர் கூறி வருகிறார்கள். 10 வாரங்கள் நாமினேஷனில் வராமல் இருந்த ஷிவினும் இந்த முறை நாமினேஷன் லிஸ்டில் வந்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+