பிக் பாஸ் வீட்டிற்குள்ளே இறுதி அவார்ட் ஃபங்ஷன்..ஏற்றுக்கொள்ளாமல் தூக்கி எறிந்த அசீம்!காரணம் இதுதான்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 89வது நாளில் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் டிக்கெட் டூ ஃபினாலே முடிவடைந்துவிட்டது.

இந்த வாரம் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் அனைவருக்கும் அவார்டு ஃபங்ஷன் நடக்கிறது.

தங்களுக்கு பொருத்தம் இல்லாத பட்டம் தந்ததாக விக்ரமன் மற்றும் அசீம் அந்த பட்டத்தை ஏற்றுக் கொள்ளாமல் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே நடந்த பிரச்சனை

ஏற்கனவே நடந்த பிரச்சனை

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே தொடங்கியது. இந்த டாஸ்க்கான போட்டியில் அதிகமான கஷ்டமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. போட்டியில் கடைசியில் அமுதவாணன் வெற்றி பெற்று இருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்களின் அடிப்படையில் இந்த வார போட்டியாளர்களுக்கு பட்டம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே அவார்ட் கொடுக்கும் பங்க்ஷன் நடைபெற்றது. அப்போதும் சில கருத்து மோதல்கள் ஏற்பட்டன. தன்னுடைய அந்நியன் கெட்டபில் நடிப்பு சரி இல்லை என்று போட்டியாளர்கள் அதுவும் குறிப்பாக மணிகண்டன் கருத்து தெரிவித்ததை எதிர்த்து விக்ரமன் பிரச்சனை செய்திருந்தார்.

விமர்சனங்களுக்கு பஞ்சமில்லை

விமர்சனங்களுக்கு பஞ்சமில்லை

அதுபோல ஜனனியும் அந்த நேரத்தில் தன்னுடைய நடிப்பு, அதுவும் ஆரம்பத்தில் இருந்து நன்றாக இல்லை என்றால் அப்போது சொல்லி இருக்க வேண்டும் ஆனால் கடைசியில் வந்து குறை சொல்கிறீர்கள் என்று மேடையில் ஏறி போட்டியாளர்களை திட்டியிருந்தார். அந்த மாதிரி சில சில பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வாரத்தில் இன்று தொடங்கி இருக்கும் இங்கு விமர்சனங்களுக்கு பஞ்சமில்லை என்னும் பிக் பாஸ் கிரிட்டிஸம் அவார்ட் ஃபங்ஷனில் தங்கள் மனதில் இருக்கும் கருத்துக்களை அவார்ட் மூலமாக சக போட்டியாளர்களுக்கு மாறி மாறி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

கிரிட்டிஸம் அவார்டு

கிரிட்டிஸம் அவார்டு

அதில் விக்ரமனுக்கு பூமர் என்கிற பட்டம் கொடுக்கப்படுகிறது. அது போல ரச்சிதாவிற்கு தொட்டால் சிணுங்கி என்கிற பட்டம் கொடுக்கப்படுகிறது. மைனாவிற்கு ட்ரோல் மெட்டீரியல் என்கிற பட்டம் கொடுக்கப்படுகிறது. ஷிவினுக்கு அசீமால் விஷப்பாட்டில் என்கிற பட்டம் கொடுக்கப்படுகிறது. அதுபோல இங்க என்னவோ நடக்குது ஆனா இங்க ஒருத்தன் மிச்சர் சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறான் என்கிற பட்டத்தை கதிரவனுக்கு விக்ரமன் கொடுக்கிறார். அதுபோல வீகென்ட் ஆக்டர் அவார்ட் கதிரவன் அசீமிற்க்கு கொடுக்கிறார். அதை பார்த்து அசீம் அடுத்த சம்பவம் இருக்கிறது என்று கூற, ஒபெனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையே என அவார்டை ஏடிகே அசீமிற்கு கொடுக்க இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என அசீம் அந்த அவார்டை தூர வீசிக்கொண்டு செல்கிறார்.

மேடை நாகரிகம் வேண்டாமா

மேடை நாகரிகம் வேண்டாமா

தன்னைப் பாராட்டி வந்த அவார்டை மட்டும் ஏற்றுக் கொண்ட அசீம், தன்னுடைய குறையை கூறிய அவார்டை தூக்கி தூர வீசியது ரசிகர்களின் மத்தியில் கோபத்தை ஏற்படுத்துகிறது. என்ன இவர் இப்படி செய்து விட்டார் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே விக்ரமனுக்கு கூட இதுதான் அநியாயத்தை கண்டா பொங்குறதோ என்கிற அவார்டை ஷிவின் விக்ரமனுக்கு கொடுக்கும்போது இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று விக்ரமன் கூறினாலும், அதை தூக்கி தூர வீசவில்லை. மேடை நாகரிகம் தெரிந்து அவர் நடந்து கொண்டார். ஆனால் அசீம் இப்படி செய்து விட்டார் என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+