ஆட்டத்தை தொடங்கிய ஜிபி முத்து... மைனாவை பார்த்து சொன்ன வார்த்தை.. கடைசியில் வெளியேறும் நபர்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கான 96 ஆவது நாளில் முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வந்த ஜி பி முத்து தன்னுடைய கிண்டலால் பிக் பாஸ் வீட்டை கலகலப்பாக மாற்றி இருக்கிறார்.
மைனாவிடம் ஜி பி முத்து பேசிய வார்த்தையை வைத்து கலாய்க்கும் போட்டியாளர்கள்.

கலகலப்பாக மாறிய வீடு
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் இந்த வீட்டிற்குள் வந்ததும் நிகழ்ச்சி கலகலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் கடைசியாக 7 போட்டியாளர்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மீண்டும் வெளியேறிய போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்து பொங்கல் பண்டிகையை கொண்டாட இருக்கின்றனர். இந்த நிலையில் வெளியே என்ன நிலவரம் என்பதையும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களிடம் அனைவரும் போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

சகஜமாக மாறிய வீடு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஒரு சில போட்டியாளர்கள் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை குறித்து சேனல்களில் பல்வேறு தகவல்களை தெரிவித்து இருந்த நிலையில் மீண்டும் வீட்டிற்குள் சென்றதும் பழையபடி தங்களுடைய பேச்சு வார்த்தைகளை தொடங்கி இருக்கின்றனர். ஒரு சிலர் வெளியே பேசியதற்கும் உள்ளே நடந்து கொள்வதற்கும் அதிகமாக வித்தியாசம் தெரிவதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே பலரும் வெளியேறிய நிலையில் உள்ளே இருந்த போட்டியாளர்கள் கடந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் கடுமையான விளையாடியிருந்தனர்.

கிண்டல் கேலி
இந்த நிலையில் இந்த வாரம் பல சிறப்பு விருந்தினர்கள் வந்து போட்டியாளர்களின் மனதை குழப்பும் வகையில் போட்டியாளர்களின் நெகட்டிவ் கருத்துக்களை மட்டுமே கூறிவிட்டு சென்றிருந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் வந்ததும் நிகழ்ச்சி கலகலப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இன்று முதல் பிரமோவில் மைனா நந்தினி, அமுதவாணன், விக்ரமன், ஜிபி முத்து நான்கு பேரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜி பி முத்து இடம் அமுதவாணன், இப்போ உன்னுடைய காதலை இந்த பெண்ணிடம் வெளிப்படுத்தணும் என்று சொல்ல ஜிபி முத்து என்னை பற்றி இன்னைக்கு என்ன நினைக்கிறீங்க என மைனாவிடம் கேட்கிறார். அதற்கு மைனா நீங்க பார்ப்பதற்கு ரொம்பவே காமெடியா பேசுறீங்க என்று கூறுகிறார்.

எதிர்பார்க்காத காமெடி
அடுத்ததாக நம்ம ரெண்டு பேரும் முதல் முதலில் சந்திக்கும் போது உங்களுக்கும் கல்யாணம் ஆகலை, எனக்கும் கல்யாணம் ஆகலை, உங்களுக்கு இதே மாதிரி கணவர் வேண்டும் என்று நினைத்தீர்களா? என கேட்க? என்ன நீங்க எப்பவும் பாராட்டிக்கிட்டே இருக்கீங்க, உங்களுக்கு தெரிஞ்சா யாராவது பசங்க இருக்காங்களா? என்று மைனா கேட்க? அதற்கு விக்ரமன் அருகில் இருந்து அவருடைய பையனே இருக்கிறார் என்று சொல்ல அங்கிருந்து அனைவரும் சிரித்து விடுகின்றனர். ஆரம்பத்திலிருந்து விக்ரமன் மற்றும் ஜிபி முத்துவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு முட்டிக்கொண்டு இருந்த நிலையில் தற்போது அனைவரும் கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பது, பார்ப்பதற்கு ஜாலியாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இப்ப வரைக்கும் ஓட்டுக்களின் அடிப்படையில் ஏடிகே இருந்து வருவதால், இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் ஏடிகேதான் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் எப்போதும் போல இந்த வாரமும் மாற்றம் ஏற்படுமா? என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்திருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications