விக்ரமனுக்கு "அந்த பட்டம்” கொடுத்த போட்டியாளர்கள் விளாசிதள்ளும் ரசிகர்கள்.. கவனிக்க வேண்டியது தான்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் விக்கிரமன் நேற்றைய எபிசோடில் தான் சரியாக விளையாடி இருந்தாலும் தனக்கு நியாயம் வழங்கப்படவில்லை என்று வருத்தமாக இருக்கும் நிலையில் அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையாக பல கருத்துக்களை ரசிகர்கள் கூறியிருக்கின்றனர்.
தன்னுடைய கருத்தில் சரியாக இருக்கும் விக்கிரமன் அதே நேரத்தில் தன்னால் ஒரு தவறு நடந்து விட்டால் அதற்கு மன்னிப்பு கேட்க தயங்குவதில்லை. ஆனால் தான் செய்யாத தவறுக்கு போட்டியாளர்களால் தற்போது தண்டிக்கப்பட்டு இருக்கிறார்.

ஒப்பிட்டு பார்க்கும் கருத்து
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனுக்கு பிறகு அதற்கு பின்பு ஒளிபரப்பான அனைத்து சீசன்களுமே போட்டியாளர்கள் அதற்கு முந்தைய சீசனை நன்று பார்த்துவிட்டு தான் வந்து நிகழ்ச்சிகளில் விளையாடின்றனர். இந்த நிலையில் ஒரு சிலர் இதற்கு முந்தைய சீசன்களில் அதிகமாக பாராட்டப்பட்ட கேரக்டரை அப்படியே தங்களுக்குள் எடுத்து அதே கேரக்டரில் வாழ்ந்து வருகின்றனர். சிலர் அப்படி இல்லை என்றாலும் இவர்கள், அவர்கள் போல இருக்கிறார்கள் என்று ரசிகர்களே ஒப்பிட்டு வருகிறார்கள். அந்த மாதிரி தான் விக்ரமன் ஆரிப்போலவும், அசீம் பாலா போலவும் இருக்கிறார் என்று ஆரம்பத்தில் இருந்து ரசிகர்கள் ஒப்பிட்டு கருத்து கூறி வந்தனர்.

விமர்சனங்களும் பாராட்டும்
விக்ரமன் ஒரு ஜர்னலிஸ்ட் ஆகவும், அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஆரம்பத்தில் ஒரு நடிகராகவும் இருந்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் இவர் பிரபலம் அடைந்திருக்கிறார். இவர் ஆரம்பத்தில் இருந்தே எந்த கருத்தையும் முன்வைக்கும் விதத்தை பலர் பாராட்டி வருகிறார்கள். அரசியல் ரீதியாக இவருக்கு வெளியே ஒரு சில நேரங்களில் பல நெகட்டிவ் கருத்துக்களும் வருகிறது ஆனாலும் இவரை ரசிக்கும் ரசிகர்கள் இவர் செய்யும் செயல்களை பாராட்ட தவறவே இல்லை.

கமலின் மறைமுகமான கருத்து
இந்த நிலையில் தற்போது நடந்து வரும் சொர்க்கவாசிகள், நகரவாசிகள் டாஸ்க்கில் விக்ரமன் நகரவாசியாக இருக்கும் நிலையில், சொர்க்கத்திற்குள் சென்று முதல் ஆளாக வெளியே கோட்டை தொட்ட பிறகும் அவர் தொடவில்லை ஜனனிதான் தொட்டார் என்று சக போட்டியாளர்கள் அனைவரும் விக்கிரமனுக்கு எதிராக கருத்து கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று அதற்கு கமல் குறும்படம் போட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் இன்றைய முதல் பிரமோ வில் கமலும் இதைக் குறித்து பேச இருப்பதாக மறைமுகமாக கருத்து கூறியிருக்கிறார்.

இந்த அவார்ட் சரியானதா
இந்த நிலையில் இந்த டாஸ்க்கில் எல்லோரும் சைக்கிளிங் செய்யும்போது விடாமல் 30 நிமிடம் விக்கிரமன் தான் சைக்கிளிங் செய்தார். அதுபோல லட்ஸரி டாஸ்க்கில் பொதுஅறிவு போட்டியில் 200 க்கு 200 மதிப்பெண் வாங்கிய ஒரே போட்டியாளர் விக்ரமன் தான். நகரத்திலிருந்து சொர்க்கத்திற்கு முதலில் கோட்டை தொட்டு சென்றவர் விக்ரமன், அவரை ஏமாற்றி ஜனனியை வெற்றியாளராக அறிவித்தார்கள். இவ்வளவு திறம்பட செய்த விக்ரமனை போரிங் பெர்பாமன்ஸ் என்று சக போட்டியாளர்கள் குறித்தது சரியா என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள், அசீம் ஐந்து நிமிடம் சைக்கிளிங் டாஸ்க் செய்ததற்கே நாக்கை தொங்க போட்டு விட்டார். ஓடி விளையாடு பாப்பா பாட்டு என்ன என்று கூட தெரியாமல் வெறும் 50 மதிப்பெண் வாங்கியவர். ஒருமுறை கூட சொர்க்கத்துக்கு செல்லாதவர் ஜனனிக்கு ஃபேவரிட்சம் செய்து பிராடு செய்து அவரை வெற்றி பெற உதவி அசீமுக்கு பெஸ்ட் பெர்பார்மன்ஸ் அவார்டா நல்லா இருக்கு உங்களுடன் நியாயம் என்று பலர் மீம்ஸ்களில் கலாய்த்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications