இறுதி நேரத்திலும் கமலின் கேள்விக்கு எதார்த்தமான பதிலை கூறிய ஷிவின்..இதுதான் ரசிகர்களுக்கு பிடித்ததாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நேற்றோடு முடிவடைந்து இருக்கிறது.

இறுதி போட்டியாளர்களாக இருந்த ஷிவின், விக்ரமன், அசீம் இடம் கமல்ஹாசன் வெளியே சென்று என்ன செய்ய இருக்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்டிருந்தார்.

அதற்கு ஷிவின் கொஞ்சமும் யோசிக்காமல் வெளியே சென்றால் வேலை கிடைக்குமா? என தெரியவில்லை என எதார்த்தமாக பேசி இருக்கிறார்.

இந்த யதார்த்தமான பேச்சு தான் இத்தனை நாளும் ரசிகர்களை ரசிக்க வைத்தது என்று பலர் ஷிவினை பாராட்டி வருகின்றனர்.

இதுவரைக்கும் இல்லாதது

இதுவரைக்கும் இல்லாதது

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசன் இருந்ததாக ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்தே கருத்துக்கூறி வருகின்றனர். 21 போட்டியாளர்கள் அறிமுகமாகி மூன்று போட்டியாளர்கள் கடைசி இடத்தில் இறுதிப்போட்டியாளர்களாக தேர்வாகி இருந்தனர். அவர்களின் ஒருவர் மட்டும் வெற்றியைக் கோப்பை தட்டிக்கொண்டு இருவருக்கு ரன்னராகவும், ரன்னர் அப் ஆகவும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆனால் இது யாருக்கு எதிர்பாராத தேர்வு என்று ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் நேற்றிலிருந்து கருத்து தெரிவித்து கொண்டு இருக்கின்றனர். ட்விட்டர் போன்றவற்றில் ட்ரெண்டிங்கில் ஷிவின் மற்றும் விக்ரமனுடைய பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

திருநங்கை போட்டியாளர்

திருநங்கை போட்டியாளர்

இதுவரைக்கும் இல்லாத வகையில் டைட்டில் ஜெயித்த அசீமிருக்கு அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் முதல் முறையாக வலம் வருகிறது. டைட்டில் மறுக்கப்பட்ட அசீம், விக்ரமன் மற்றும் ஷிவினுக்கு அதிகமான ஆதரவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெற்றதாகவும் அதில் கடைசி நேரத்தில் பலருடைய உண்மை கேரக்டர்கள் வெளியே வந்தது என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அதில் ஒருவர்தான் ஷிவின். ஒரு திருநங்கை போட்டியாளராக இந்த ஆறாவது சீசனில் அறிமுகமானார். ஏற்கனவே கடந்த சீசனில் திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து அறிமுகம் ஆகி இருந்தார். இவருக்கு அதிகமான வரவேற்பு கிடைத்ததன் காரணமாகவே இந்த சீசனிலும் ஒரு போட்டியாளரை அறிமுகம் செய்து இருக்கின்றனர்.

கருத்துக் கணிப்பில் முதலிடம்

கருத்துக் கணிப்பில் முதலிடம்

ஆரம்பம் முதலே நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக ஷிவின் பல்வேறு செயல்களை செய்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுவிட்டார். இவர் ஒரு போட்டியாளர் என்கிறதை விடவும் தற்போது பலருடைய வீட்டில் ஒரு மகளாக இவரை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அதனால்தான் அதிகமான கருத்துக்கணிப்பில் ஷிவனுக்கு இந்த டைட்டில் சரியானது என்று ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர். எந்த இடத்திலும் இவர் தன்னுடைய கருத்தை நியாயமாக முறையில் எடுத்து வைத்து அடுத்தவர்களை தரக்குறைவாக பேசாத போட்டியாளர்களில் இவரும் ஒருவராக தனித்துவம் பெற்று வந்தார்.

எதார்த்தமான பதில்

எதார்த்தமான பதில்

இந்த நிலையில் இறுதி நாளான நேற்று கமல் பிக் பாஸ் வீட்டிற்குள் இறுதிப் போட்டியாளராக இருந்த ஷிவின், விக்ரமன் மற்றும் அசீமிடம் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நீங்கள் என்ன செய்ய காத்திருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்க, அதில் அசீம் தான் திரைப்படங்களில நடிப்பதற்கான வேலையை பார்க்க வேண்டும் என்று கூற, விக்ரமன் அரசியலில் தன்னுடைய கவனம் இருக்கும் என்று கூற, ஷிவின் வெளியே சென்றால் வேலை கிடைக்குமானு தெரியல என்று எதார்த்தத்தை பேசுகிறார். அதற்கு கமல் கண்டிப்பா கிடைக்கும் ஏன் கிடைக்காம உங்கள் தேடல் எப்படி என்பதை பொறுத்து அது என்று கமல் கூறி இருக்கிறார்.

எதற்கும் தயார் தான்

எதற்கும் தயார் தான்

அது மட்டுமல்லாமல் யாராவது ஒருவர் தான் வெற்றியாளர் இப்ப உங்க மனநிலை எப்படி இருக்கிறது என்று கமல் கேட்க, அதற்கு அசீம் இதயம் துடிக்கும் ஓசையை வாயால் எழுப்பினார். அடுத்ததாக 106 நாட்கள் இருந்ததே பெரிய பரிசு மக்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் தலைவணங்கி ஏற்ப்பேன் என்று விக்ரமன் கூற, இரண்டு குறிக்கோள்களில் ஒன்று ஏற்கனவே முடிந்தது. வெற்றியும் கிடைத்தால் போனஸ் தான் என்று கூறினார். இதை பார்த்த ரசிகர்கள் அப்போது ஷிவின் மூன்றாவது இடம் கிடைத்தாலும் தனக்கு போதும் என்று மனதளவில் தயாராகி விட்டார். எதார்த்தத்தை புரிந்து கொள்வதில் ஷிவின் வல்லவர் என்று பலர் அவரை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+