பிக் பாஸ் 6: ஜி.பி முத்து எங்களுக்கு "அப்பா” மாதிரி..தனலட்சுமிக்கு நெத்தியடி கொடுத்த ஜனனி
சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசனில் இன்றைய ப்ரோமோவில் ஜி பி முத்து க்கு ஆதரவாக ஜனனி பேசி இருப்பது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
நிகழ்ச்சி தொடங்கிய ஐந்து நாட்களுக்குள் ஜி.பி முத்து விற்கும் தனலட்சுமிக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
ஜி.பி முத்து தன்னை நீ, வா, போ என்று அழைப்பது பிடிக்கவில்லை அது மட்டும் அல்லாமல் அவர் நடிக்கிறார் என்று நேற்று எபிசோடில் தனலட்சுமி குற்றம் சாட்டியிருந்தார். அது குறித்து இன்று ஜனனி முதல் ப்ரோமோவில் பேசியிருக்கிறார்.

தொடங்கிய பிரச்சனை
விஜய் டிவியில் பிக் பாஸ் ஆறாவது சீசன் நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. இன்றோடு ஐந்தாவது நாள் ஆகின்றது. இந்த சீசனில் அதிகப்படியாக 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். ஒரு சில போட்டியாளர் ரசிகர்களுக்கு பரீட்சையும் இல்லாத முகங்களாக இருந்தாலும் 5 நாட்களில் பலர் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக தொடங்கி விட்டனர். அதில் ஏற்கனவே சமூக வலைதளத்தில் பிரபலமாக இருந்த ஜி பி முத்துவும் ஒருவர். அவரைப்போலவே டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி ஜிபி முத்துவோடு இப்போது பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

கண் கலங்கிப்போன ஜி பி முத்து
நேற்று எபிசோட்டில் தனலட்சுமி ஜிபி முத்து தன்னை நீ, நான் என்று கூப்பிடுவது எனக்கு பிடிக்கவில்லை. அதுபோல ஜி பி முத்து நடிக்கிறார் என்று ஆயிஷாவிடமும் கேமரா முன்னாடியும் குறை கூறிக் கொண்டிருந்தார். இதை கேட்ட ஜிபி முத்து கதறி அழுது நான் நடிக்கிறேனா? நண்பர்களே நான் நடிக்கிறேனா? இல்லை நிஜ கேரக்டரில் இருப்பேனா? என்பது என்னுடைய நண்பர்களுக்கு தெரியும். நான் எப்போதுமே இப்படித்தான் என்னுடைய மகள் வயது இருக்கும் இந்தப் பெண் இப்படி என்னை பேசிவிட்டார் என்றெல்லாம் கண் கலங்கியபடி புலம்பி இருந்தார்.

ஜனனியின் அறிவுரை
ஜி பி முத்து கதறி அழுததை பார்த்த அவருடைய ரசிகர்கள் ஜிபி முத்துக்கு ஆதரவாக தனலட்சுமியை கலாய்த்து சமூக வலைத்தளத்தில் பல மீம்ஸ்களையும் கருத்துகளையும் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று எபிசோட்டில் முதல் ப்ரோமோவில் ஜனனி போட்டியாளர்கள் அனைவரின் முன்னிலையிலும் பேசிக் கொண்டிருக்கிறார். அதில், எங்கள் டீமுக்கு யார் சூனியம் பண்ணினது என்று தெரியவில்லை. ஜி பி முத்து சார் அவருடைய வயசுக்கு அவர் எகிறி பேசினார் என்றால், அவர் எங்களுக்கு அப்பா மாதிரி. நாம் வந்து அவர் ஒரு இடத்தில் கோவப்பட்டு இருக்கிறார் என்றால் அதில் பொறுமையாக போக வேண்டும். நீ நடந்து கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை என்று தனலட்சுமியிடம் முகத்துக்கு நேராக பேசியிருக்கிறார் .

தனலட்சுமி அழுகை
அதுபோல ஜி பி முத்து சொன்னது சரியாகத்தான் இருக்கிறது. அதனால் உன்னை ஸ்டாப் பண்ணுகிறேன் என்று ஜனனி தனலட்சுமியை பார்த்து கூறுகிறார். உடனே தனலட்சுமி அந்த இடத்தை விட்டு எழுந்து வேகமாக வெளியேறி சோபாவில் போய் தனியாக அமர்ந்து அழுது கொண்டே, "உள்ளே வராமல் இருந்திருக்கலாம் பிக் பாஸ்" என்று தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறார். தனலட்சுமி, ஜிபி முத்து, ஜனனி என அனைவரும் பாத்திரம் கழுவும் அணியில் இருக்கும் போது ஒரே அணியில் இருக்கும் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகத்தான் ஜனனி இப்படி பேசி இருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications