பிக் பாஸ் வீட்டிற்குள் அசீமை திட்டிய ரச்சிதா.. வெளியே வந்ததும் டைட்டில் விஷயத்தில் கூறும் கருத்து
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி முதல் முறையாக பேசி இருக்கிறார்.
பிக் பாஸ் யார் வெற்றி பெற வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த அதே கருத்தையே வெளியே வந்த பிறகும் ரச்சிதா கூறியதை கேட்டு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

முதல் லைவ் நிகழ்ச்சி
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 93 வது நாளில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது .இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கும் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த நிகழ்வில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வாரம் ரச்சிதா வெளியேறினார். வெளியே வந்த பிறகும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தின் மூலமாக லைவ் நிகழ்ச்சியில் வந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அதில் ரசிகர்கள் அதிகமாக கேட்டு வந்தது பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி சொல்லுங்கள் என்று தான் அதை குறித்து முதல் முறையாக ரச்சிதா மனம் திறந்து பேசியிருக்கிறார். நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பலமுறை முயற்சி செய்து காத்திருந்தேன். அதனால் இந்த நிகழ்ச்சியை பற்றி பேசுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுகிறார்.

தகுதி இல்லாத காரணம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் வேண்டும் என்றாலும் ஜெயிக்கலாம் ஆனால் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி அடுத்தவர்களை மட்டம் தட்டி, அடுத்தவர்களின் கேரக்டரை களங்கப்படுத்தும் விதமாக நடந்து கொள்பவர்கள் எந்த முறையும் ஜெயிக்க கூடாது. அவர்கள் ஜெயித்தால் அது ஒரு தப்பான முன் உதாரணமாக போய்விடும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பலதரப்பட்ட ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் இந்த மாதிரி நடைபெற்றால் அது ஒரு தப்பான முன் உதாரணமாக மாறிவிடும் என்று ரச்சிதா அடித்து கூறுகிறார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ரச்சிதா, அசீம் இதனால் தான் டைட்டில் ஜெயிப்பதற்கு தகுதி இல்லை எனும் காரணத்தை கூறிக் கொண்டிருந்தார் அதையே இப்போதும் அழுத்தமாக கூறுகிறார்.

ரசிகர்களின் சப்போர்ட்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் ரச்சிதா தன்னுடைய கருத்தில் இருந்து பின்வாங்காமல் இருந்த நிலையை பார்த்து ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருந்தாலும், ஒரு பக்கம் அசீமுடைய ரசிகர்கள் ரச்சிதாவை திட்டி வருகின்றனர். நீங்கள் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒன்றுமே செய்யாமல் இருந்தீர்கள். ஆனால் உள்ளே என்டர்டைன்மென்ட் செய்து கொண்டிருப்பவரை குறை கூற கூடாது என்று கருத்து கூறுகின்றனர் .ஆனால் ரச்சிதாவின் ரசிகர்கள் ரச்சிதா எந்த இடத்திலும் யாரையும் புண்படுத்தவில்லை, யாரையும் மனம் கோணம் வகையில் பேசவில்லை, தன்னுடைய வேலையிலும் தன்னுடைய கேரக்டரை விட்டு விலகாமல் சிறப்பாக இருந்து வந்தார். எந்த விளையாட்டிலும் பின்வாங்காமல் தான் இருந்து வந்தார் என்று அவருக்காக சப்போர்ட் செய்கின்றனர்.

மாறுபடாத கருத்து
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் தனலட்சுமி அசீம் பற்றி பல்வேறு கருத்துக்களை கூறிக் கொண்டிருந்தாலும் ஆனால் வெளியே வந்த பிறகு தனலட்சுமி தன்னுடைய கருத்தில் இருந்து பின்வாங்கி அசீம் தான் இந்த பிக் பாஸ் வீட்டிற்கு சரியானவர் என்று கூறியிருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் ரச்சிதாவும் வெளியே வந்து இப்படித்தான் பேசுவார்கள் என்று நினைத்திருந்தார்களாம் .ஆனால் ரச்சிதா அப்படி எல்லாம் இல்லை நான் என்னுடைய கருத்தை விட்டு எப்போதும் மாறுவதே இல்லை என்று நிரூபித்திருக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications