"பெற்றால் இப்படி ஒரு பிள்ளையை பெத்துக்கணும்” விக்ரமனின் பெற்றோரை பாராட்டிய பிரபலம்..குவியும் கருத்து
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்ரமன் கடைசி நேரத்தில் ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் விக்ரமன் ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
விக்ரமுடைய ரசிகர்கள் பலர் பிக் பாஸ் மீதும் விஜய் டிவியின் மீதும் கோபத்தில் ஹாட்ஸ்டார் ஆப்பை அன் இன் ஸ்டால் செய்து அதை வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விக்ரமன் டைட்டில் ஜெய்க்காவிட்டாலும் விக்ரமனை போன்று ஒரு பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்று அவருடைய தாய் தந்தையிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று செய்தி வாசிப்பாளர் பனிமலர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்கிற தாரக மந்திரத்தின் அடிப்படையில் கடைசிநேர முடிவு நடைபெற்று விட்டது என்று ரசிகர்கள் தொடர்ந்து நேற்றிலிருந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் பல அதிரடியான திருப்பங்களும் செயல்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இருந்தே இது அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போதைய ஆறாவது சீசன் தான் 24 மணி நேரமும் ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வந்தது.

எந்த சீசனிலும் இல்லாத செயல்
அதுபோல இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் முதல் முறையாக 21 போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டனர். இதனாலே இந்த சீசன் அதிகமான சண்டை சச்சரவுகள் நடந்து வந்தது. நிகழ்ச்சி தொடங்கி ஒரு சில நாட்களிலே இந்த நிகழ்ச்சியில் சண்டை ஏற்பட தொடங்கி விட்டது. அதில் சண்டையில் முக்கியமான பங்கு வகித்து அவர்களின் ஒருவராக அசீம் இருந்தார். அதுமட்டுமல்லாமல் அந்த சண்டைகளில் தன்னுடைய நியாயமான கருத்தை கூறி யார் பக்கம் தவறு இருக்கிறதோ அவர்களுடைய பக்கத்தில் தான் என்னுடைய ஆதரவு இருக்கும் என்பதை விக்ரமன் ஆரம்பத்திலிருந்து நிரூபித்து செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

நியாயமான கருத்துக்கள்
இந்த வகையில் விக்ரமன் எந்த இடத்திலும் யாரும் யாருக்கும் தாழ்ந்தவர்களும் கிடையாது, உயர்ந்தவர்களும் கிடையாது. அனைவரும் சமம் என்கிற கருத்தை அடிக்கடி சொல்லிக்கொண்டு அறம் ஜெயிக்கும் என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சீசனில் விளையாடிக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் அதிகமானோர் விக்ரமனிடம் கருத்து மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், அதையெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய கருத்தில் எந்த இடத்திலும் பின்வாங்காமல் விக்ரமன் இருந்து வந்தார். இது ஒரு சிலருக்கு பிடித்து வந்தாலும் ஒரு சிலருக்கு இவர் எப்ப பார்த்தாலும் நியாயம் பேசிக்கொண்டே இருக்கிறார் என்ற கருத்துக்களையும் பெற்றுக் கொண்டிருந்தது.

பெற்றோருக்கு கிடைத்த பாராட்டு
இந்த நிலையில் விக்ரமன், அசீம் ஷிவின் மூவரும் இறுதிப்போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் கடைசியில் விக்ரமனுக்கு டைட்டில் கொடுக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அசீம் டைட்டிலை வெற்றி பெற்று இருக்கிறார். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் பலர் விக்ரமனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் பனிமலர், ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பெற்றோர்களாக இருப்பவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் விக்ரமனின் தாய் தந்தையின் பாதையை பின்பற்றுங்கள். உங்கள் குழந்தைகள் இந்த சமுதாயத்தில் தன்மானம், சுயமரியாதை, உள்ளவர்களாகவும் சக மனிதனையும், சமுதாயத்தையும் மதிப்பவர்களாகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவிற்கு 2.5K லைக்ஸ் கிடைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications