கடைசி நேரத்தில் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு உண்மைகளை கூறிய விக்ரமன்.. பீல் பண்ணும் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு விக்ரமன் தன்னால் தன்னுடைய குடும்பத்தார் பட்ட அவலங்களை பற்றி முதல் முறையாக இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசி அவர்களிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
விக்ரமன் ஒரு ஜர்னலிஸ்ட் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் ஒரு நேர்மையான ஜர்னலிஸ்ட் ஆக தான் இருந்ததால் எந்த மாதிரி சோதனைகளை கடந்து வந்தேன் என்று இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் தன்னுடைய குடும்பத்தை மறைத்து வைக்க ஆசைப்பட்டேன் என்றும் அதற்கு காரணம் என்ன என்பது பற்றி விக்ரமன் கூறியதை கேட்டு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

அரசியல்வாதி
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் முறையாக ஒரு அரசியல்வாதியாக விக்ரமன் கலந்து கொண்டிருக்கிறார். இவர் ஒரு ஜர்னலிஸ்ட் ஆகவும் ஒரு நடிகராகவும் இருந்தாலும் இவர் அரசியல்வாதி என்கிற அடையாளத்தோடு தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இவர் விசிக கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். தற்போது கடைசி வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடி எடுத்து வைத்திருக்கும் விக்ரமனுக்கு அவர் உறுப்பினராக இருக்கும் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் சமூக வலைத்தளத்தில் ஓட்டு செலுத்த கூறி ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

பத்திரிக்கையாளர்
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி யில் இன்று தாங்கள் இதுவரைக்கும் யாருக்கு நன்றி கூறுவதற்கு மறந்து இருந்தாலும் இந்த இடத்தை பயன்படுத்தி அவர்களுக்கு தன்னுடைய நன்றியையும் மன்னிப்பையும் கேட்டுவிடலாம் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார். அதன்படி அனைவரும் தங்களுடைய கதைகளை கூறி யாருக்கெல்லாம் நன்றி கூற வேண்டுமோ மன்னிப்பு கேட்க வேண்டுமோ அதை கேட்டு வருகின்றனர். அந்த வரிசையில் விக்ரமனும் தான் ஆரம்பத்தில் எத்தனையோ பிரச்சனைகளை கடந்து வந்திருக்கிறேன். அந்த மாதிரி தான் ஒரு நேர்மையான ஒரு ஜர்னலிஸ்காக நான் வேலை செய்ததால் எனக்கு பல்வேறு பிரச்சனைகளும் மிரட்டல்களும் வந்து கொண்டிருந்தது.அது எல்லோருக்குமே தெரிந்ததுதான், நான் சில நேரங்களில் எடுக்கும் பேட்டிகளால் எனக்கு பல்வேறு பிரச்சனைகள் வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

குடும்பத்தை நினைத்து பயம்
ஒருமுறை நான் எடுத்த பேட்டியால் பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. நான் பேட்டியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து விட்டேன் பிறகு என்னுடைய ஆபீசுக்கு சிலர் ஆயுதங்களோடு சென்று மிரட்டி இருக்கின்றனர். அது பலருக்கும் தெரிந்திருந்தாலும் ஒரு நேர்மையான ஜர்னலிஸ்ட் க்கு கிடைக்கும், நடக்கும் செயலாகத்தான் அது இருந்தது. ஆனாலும் நான் அந்த நேரத்தில் என்னுடைய குடும்பத்தை நினைத்து அதிகமாக பயப்பட்டேன். அதுவரைக்கும் நான் எந்த இடத்திலும் தடுமாறாமல் என்னுடைய முடிவை தைரியமாக வெளியே சொல்லும் நிலையில் இருந்தாலும் குடும்பத்தை பற்றி நினைக்கும் போது தான் எனக்கு தயக்கமும் பயமும் ஏற்பட்டது என்று கூறி இருக்கிறார்.

குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்பு
என்னுடைய குடும்பத்தினர் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பெரிய அளவில் உறுதுணையாக இருந்தார்கள். நான் என்ன செய்தாலும் அதை ஏன் செய்கிறாய் என்று என்னை கேட்காமல் நான் செய்வது சரியாக இருக்கும் என்று எனக்கு ஆதரவு கொடுத்து வந்தார்கள். ஆனாலும் ஒரு முறை என்னுடைய குடும்பம், வீடு என்னுடைய போன் நம்பர் எல்லாமே ஒரு youtube சேனலில் வெளியானது. ஆனால் எனக்கு மிரட்டல் வந்த பிறகு தான் நான் அதைப்பற்றி பயப்பட தொடங்கினேன். அந்த youtube சேனலிடம் நான் போன் செய்து அந்த வீடியோவை டெலிட் செய்து விடுங்கள் என்று கூறியிருந்தேன். ஆனால் அவர்கள் அது இனி முடியாது என்று கூறி விட்டார்கள். என்னால் என்னுடைய அம்மா, அப்பா, தங்கை, என்னுடைய நண்பர்களும் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் நான் நன்றியையும் கூறி, மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பல பகிர்ந்து நேர்மைக்கு பல இடங்களில் கிடைக்கும் செயல் இதுதான் என்று தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications